search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி"

    • திருப்பூர், தாராபுரம் போன்ற பகுதிகளில் இருந்தும் அதிகளவு வருவதால் சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
    • சின்ன வெங்காயத்திற்கு போதிய விலை கிடைக்காத காரணத்தினால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாலுகா, சத்திரப்பட்டி, விருப்பாச்சி, அம்பிளிக்கை, இடையகோட்டை, ஓடைப்பட்டி, கள்ளிமந்தயம் ஆகிய பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் அதிக அளவில் சின்ன வெங்காயம் நடவு செய்துள்ளனர். தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.

    மேலும் திருப்பூர், தாராபுரம் போன்ற பகுதிகளில் இருந்தும் அதிகளவு சின்னவெங்காயம் வருவதால் சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

    கடந்த 3 மாதமாகவே 10 கிலோ சின்னவெங்காயம் ரூ.100 முதல் ரூ.200 வரை ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது.

    ஆயிரக்கணக்கான டன் சின்ன வெங்காயம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் தினமும் அனுப்பப்பட்டு வருகிறது.

    சின்ன வெங்காயத்திற்கு போதிய விலை கிடைக்காத காரணத்தினால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    ×