என் மலர்
ஈரோடு
- தந்தை அப்புசாமி சஞ்சய் மீண்டும் படித்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் எனக்கூறி தனியார் டுட்டோரியல் கல்லூரியில் சேர்த்தார்.
- சஞ்சய் வகுப்புக்கு செல்ல மறுத்ததால் அப்புசாமி மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார்.
அம்மாபேட்டை:
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள கல்பாவி தொட்டிபாளையத்தை சேர்ந்தவர் அப்புசாமி (45). இவரது மனைவி சுமதி. அப்புசாமி சொந்தமாக ஆம்னி வேன் வைத்து ஓட்டி வருகிறார். சுமதி பவானி அருகே உள்ள தனியார் கம்பெனியில் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு சஞ்சய் (15), சந்துரு (13) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இதில் சஞ்சய் மயிலம்பாடியில் உள்ள அரசு பள்ளியில் படித்து 10-ம் வகுப்பு தேர்வு எழுதினார். கடந்த மாதம் வந்த தேர்வு முடிவில் 3 பாடத்தில் சஞ்சய் தோல்வி அடைந்தார். இதையடுத்து அவரது தந்தை அப்புசாமி சஞ்சயை மீண்டும் படித்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் எனக்கூறி தனியார் டுட்டோரியல் கல்லூரியில் சேர்த்தார்.
ஆனால் சஞ்சய் வகுப்புக்கு செல்ல மறுத்ததால் அப்புசாமி மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து அப்புசாமி குடித்து விட்டார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மகன் தோல்வி அடைந்ததால் தந்தை விஷம் குடித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ஈரோடு-காங்கேயம் ரோட்டில் மோட்டார்சைக்கிளில் கல்லூரி மாணவர் ஜோஸ்வா சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.
- அப்போது எதிர்பாராதவிதமாக 2 மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் ஜோஸ்வா தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார்.
மொடக்குறிச்சி:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த அவல்பூந்துறை அருகே உள்ள குப்பகவுண்டன்வலசு பகுதியை சேர்ந்தவர் ஜோஸ்வா (வயது 22). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை ஜோஸ்வா ஈரோடு-காங்கேயம் ரோட்டில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக 2 மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் ஜோஸ்வா தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார். எதிரே மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்தவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
விபத்து நடந்ததும் அக்கம் பக்கத்தினர் ஜோஸ்வாவை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜோஸ்வா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ஈக்களின் குஞ்சு, முதிர்ந்த ஈக்களும் தென்னை மரங்களின் ஓலைகளின் அடியில் இருந்து சாறை உறிஞ்சி, தேன் போன்ற திரவ கழிவை வெளியேற்றும். அத்திரவ கழிவால், கரும்பூசணம் படர்ந்து, ஓலைகள் கருமை நிறமாகும்
- அதிக பூச்சி கொல்லிகள் உபயோகிக்கும்போது நன்மை செய்யும் இயற்கை எதிரிகள் அழிந்து விடுவதால் ரசாயன பூச்சி கொல்லிகளை தவிர்த்து இயற்கை எதிர் பூச்சிகளை வளர்த்து கட்டுப்படுத்துவது சிறந்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சி.சின்னசாமி, வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் 38,800 ஏக்கரில் தென்னை சாகுபடி செய்துள்ளனர். தென்னையில் இருந்து தேங்காய், இளநீர் கிடைப்பதுடன், ஓலைகள் கூரை வேய்வதற்கும், வேலி அமைக்கவும் பயன்படுகிறது. பயனுள்ள ஓலைகளை ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் கோடை காலங்களில் தாக்குவதுடன், தென்னை மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது.
ஈக்களின் குஞ்சு, முதிர்ந்த ஈக்களும் தென்னை மரங்களின் ஓலைகளின் அடியில் இருந்து சாறை உறிஞ்சி, தேன் போன்ற திரவ கழிவை வெளியேற்றும். அத்திரவ கழிவால், கரும்பூசணம் படர்ந்து, ஓலைகள் கருமை நிறமாகும்.
மஞ்சள் நிறம், வளர்ச்சி அடைந்த வெள்ளை ஈக்களை கவரும் தன்மையு டையதால், மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களில் இரு புறமும் ஆமணக்கு எண்ணெய் தடவி, ஒட்டும் பொறிகளை தயார் செய்து ஏக்கருக்கு 8 என்ற எண்ணிக்கையில் 5, – 6 அடி உயரத்தில் ஆங்காங்கு கட்டி வைத்து ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்.
மஞ்சள் விளக்கு பொறி களை ஏக்கருக்கு 2 வீதம் தென்னந்தோப்புகளில் அமைத்து மாலை 6 மணி முதல் 11 மணி வரை ஒளிர செய்து வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்.
தாக்கப்பட்ட தென்னை மரங்களின் இலைகளின் மேல் விசை தெளிப்பானால் தண்ணீரை மிகுந்த அழுத்தத்துடன் பீச்சி அடித்து வெள்ளை ஈக்கள் கரும்பூசணங்களை அழிக்கலாம்.
வெள்ளை ஈக்களின் இளங்குஞ்சுகளை கட்டுப்ப டுத்தும் திறன் கொண்ட ஒட்டுண்ணி குளவியான என்கார்சியாவின் கூட்டு புழுவை உள்ளடக்கிய தென்னை ஓலைகளை ஏக்கருக்கு 10 இலை துண்டுகள் வீதம் தாக்கப்பட்ட ஓலைகளின் மீது 10 மரம் இடைவெளியில் வைத்து கட்டுப்படுத்தலாம்.
இரை விழுங்கியான கிரைசோபெர்லா என்ற பச்சை கண்ணாடி இறக்கை பூச்சியின் முட்டைகளை ஏக்கருக்கு 300 வீதம் தாக்கப்பட்ட மரங்களில் வைத்து கட்டுப்படுத்தலாம். கிரைசோபெர்லா ஒட்டுண்ணியானது பவானி உயிரியல் கட்டுப்பா ட்டு மையத்தில் இருந்து பெறப்பட்டு வேளாண் விரிவாக்க மையங்களின் மூலம் ஈரோடு மாவட்ட தென்னை விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
என்கார்சியா ஒட்டுண்ணி குளவிகள், கிரைசோபிட் இரை விழுங்கிகள் தென்னந்தோப்புகளில் இயற்கையாக பல்கி இனப்பெருக்கம் அடைய ஏதுவாக சாமந்தி பூ, சூரியகாந்தி, தட்டை பயறு போன்ற பயிர்களை தென்னந்தோப்புகளில் பயிர் செய்யலாம்.
அதிக பூச்சி கொல்லிகள் உபயோகிக்கும்போது நன்மை செய்யும் இயற்கை எதிரிகள் அழிந்து விடுவதால் ரசாயன பூச்சி கொல்லிகளை தவிர்த்து இயற்கை எதிர் பூச்சிகளை வளர்த்து கட்டுப்படுத்துவது சிறந்தது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அதிகாலை 3 மணிக்கு கடை திடீரென தீப்பிடித்து எரிந்தது.
- ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.
கோபி:
கோபிசெட்டிபாளையம் சீதாலட்சுமி புரம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் அந்த பகுதியில் கோழி கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வியாபாரம் முடிந்து இரவில் கடையை பூட்டி விட்டு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று வியாபாரம் முடிந்து வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றார். இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு கடையில் திடீரென தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்தது.
இதை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் கடை உரிமையாளர் ரவிக்கு தகவல் கொடுத்தனர். அவர் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து கோபி செட்டி பாளையம் தீயணை ப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.
அப்போது கடையில் இருந்த கியாஸ் சிலிண்டர் பத்திரமாக மீட்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க.வை கண்டித்து தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.டி.செந்தில்குமார் தலை மையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
- பா.ஜ.க. பல்வேறு பிரிவுகளின் நிர்வாகிகள் திரளாக உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஈரோடு:
ஈரோடு காளைமாடு சிலை அருகில் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க.வை கண்டித்து தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.டி.செந்தில்குமார் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
மொடக்குறிச்சி சி.சரஸ்வதி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கோட்ட பொறுப்பாளர் பாயிண்ட் மணி கண்டன உரையாற்றினார்.
இதில் முன்னாள் எம்.பி. சவுந்தரம், மகளிர் அணி மாநில பொது செயலாளர் மோகனப்பிரியா, மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேஷ்குமார், பொது செயலாளர்கள் எஸ்.எம்.செந்தில், வேதானந்தம், சிவகாமி மகேஷ்வரன், ஈஸ்வரமூர்த்தி, மகளிர் அணி தலைவர் புனிதம்,
மாவட்ட துணை தலைவர்கள் குணசேகரன், சின்னதுரை, தங்கராஜ், வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் ஈஸ்வரமூர்த்தி, தொழில் பிரிவு மாவட்ட தலைவர் கார்த்திக், செயலாளர் பாலமுரளி, பட்டியல் அணி மாநில துணை செயலாளர் அய்யாசாமி, கலை இலக்கிய பிரிவு தலைவர் சக்திசுப்பிரமணி,
மத்திய அரசாங்க மக்கள் நலதிட்டங்கள் பிரிவு மாவட்ட தலைவர் பி.எஸ்.செல்வமணி, முன்னாள் வர்த்தக அணி நிர்வாகிகள் செல்வகுமார், தீபம்ராஜா, அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு தலைவர் சரவணன், துனை தலைவர் ரவிந்தரன், மாவட்ட செயலாளர் குமரகுரு, இந்திரகுமார், ஊடக பிரிவு அண்ணாதுரை உள்பட பா.ஜ.க. பல்வேறு பிரிவுகளின் நிர்வாகிகள் திரளாக உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
- திங்களூர், கேர்மாளம் பகுதியில் இருந்து மட்டும் 80 முதல் 100 பேர் கோட்டமாளம் பள்ளியில் மேல்நிலை கல்வி படிக்கின்றனர். தற்போது 20 கி.மீ. தூரத்தில் உள்ள கோட்டமாளம் பள்ளிக்கு செல்ல பள்ளி நேரத்தில் உரிய பஸ் வசதி இல்லை.
- இப்பகுதி புலிகள் சரணாலயத்துக்கு உட்பட்ட அடர்ந்த காடு என்ற காரணத்தால் பல நேரம் காட்டுப்பாதையில் செல்ல இயலாது. மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் சென்று வந்தாலும், ஆபத்தானது.
ஈரோடு:
ஈரோடு டி.ஆர்.ஓ. சந்தோஷினி சந்திராவிடம், கேர்மாளம், திங்களூர் பகுதியை சேர்ந்த பெற்றோர்கள் மனு வழங்கினார்கள்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:
தாளவாடி யூனியன் திங்களூர், கேர்மாளம் பஞ்சாயத்துகளில் காடட்டி, சுஜ்ஜல்கரை, கேர்மாளம் என்ற ஊரில் 3 அரசு உயர்நிலை பள்ளிகள் இயங்கி வருகிறது.
கோட்டமாளம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியாக கடந்த கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்டது.
திங்களூர், கேர்மாளம் பகுதியில் இருந்து மட்டும் 80 முதல் 100 பேர் கோட்டமாளம் பள்ளியில் மேல்நிலை கல்வி படிக்கின்றனர். இதற்கு முன் 60 கி.மீ. தூரத்தில் உள்ள சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று வந்தனர்.
தற்போது 20 கி.மீ. தூரத்தில் உள்ள கோட்டமாளம் பள்ளிக்கு செல்ல பள்ளி நேரத்தில் உரிய பஸ் வசதி இல்லை.
இப்பகுதி புலிகள் சரணாலயத்துக்கு உட்பட்ட அடர்ந்த காடு என்ற காரணத்தால் பல நேரம் காட்டுப்பாதையில் செல்ல இயலாது. மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் சென்று வந்தாலும், ஆபத்தானது.
திங்களூர், கேர்மாளம் பகுதியில் உள்ள கிராமங்களில் 6000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். வங்கி, மருத்துவமனை, யூனியன் ஆபீஸ், வேளாண் அலுவலகம் என அனைத்தும், இப்பகுதியினர் திங்களூர், கேர்மாளம் பஞ்சாயத்தை சார்ந்துள்ளனர்.
திங்களூர், கேர்மாளம், கோட்டமாளத்தை இணைத்து கடந்த 10 ஆண்டுக்கு முன் பஸ் இயக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. தாளவாடி டெப்போவில் இருந்து இயக்கப்பட்ட பஸ்சை, தாளவாடியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட செய்து ஆசனூருக்கு 6:45 மணிக்கும், கேர்மாள த்துக்கு, 7:30 மணிக்கும் வந்து, கோட்ட மாளத்துக்கு 8:30 மணிக்கு செல்லும்படி இயக்க வேண்டும்.
மறு மார்க்கமாக காலை கோட்டமாளத்தில் 8:45 மணிக்கு புறப்பட்டு, தாளவாடிக்கு 11:30 மணிக்கு வந்து சேரும். தாளவாடியில் மதியம் 2 மணிக்கு பஸ் புறப்பட்டால் ஆசனூருக்கு 2:45 மணி, கேர்மாளம் 3:30 மணி, கோட்டமாளம் மாலை 4:30 மணிக்கு வந்து சேரும்.
பள்ளி விட்டதும், மாலை 4:45 மணிக்கு அந்த பஸ் புறப்பட செய்தால் இரவு, 7:30 மணிக்கு தாளவாடிக்கு சென்றடையும். இதன் மூலம் 100-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள், 6,000 -க்கும் மேற்பட்ட மக்களும் பயன் பெறுவர்.
இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.
- மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்திய போது எதிர்பாராத விதமாக லதா ரோட்டில் தவறி விழுந்துள்ளார்.
- இந்த சம்பவம் குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு லட்சுமி நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா (59). இவரது மனைவி லதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ராஜா திருப்பூரில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் டெக்னிக் பிரிவில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் ராஜா சம்பவத்தன்று பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்காக தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்கு சென்றார். வண்டியை ராஜா ஓட்ட பின்னால் லதா அமர்ந்து வந்தார்.
சித்தோடு சமத்துவபுரம் மேடு அருகே கோவை- சேலம் பைபாஸ் ரோடு அருகே வந்த போது லதாவுக்கு திடீரென மயக்கம் வந்துள்ளது. அதையடுத்து ராஜா மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்திய போது எதிர்பாராத விதமாக லதா ரோட்டில் தவறி விழுந்துள்ளார்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மனைவியை சிகிச்சைக்காக நசியனூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ராஜா கொண்டு சேர்த்தார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலயின்றி லதா பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி ஓசூர் கிராமத்தில் செயல்படாத கல்குவாரி உள்ளது. இதன் அருகே ஓசூர் கிராமம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளன.
- புதர் மண்டி கிடப்பதால் மீண்டும் சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் புகும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட வருவாய் துறை அதிகாரிகள் இந்த கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈரோடு, ஜூலை. 5-
சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி ஓசூர் கிராமத்தில் செயல்படாத கல்குவாரி உள்ளது. இதன் அருகே ஓசூர் கிராமம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளன.
வருவாய் துறைக்கு சொந்தமான இந்த கல்குவாரியின் உரிமம் கடந்த 2014-ம் ஆண்டு முதல் காலாவதியானது. இதனால் குவாரியை சுற்றியுள்ள பட்டா நிலங்களில் கற்கள் மலை போல் குவிந்துள்ளது.
பல வருடங்களாக குவிந்துள்ள கற்குவியல்களில் செடி, கொடி வளர்ந்து புதர் நிறைந்து காடு போன்று காட்சியளிக்கிறது.
இந்நிலையில் ஒரு சிறுத்தை இந்த கல்குவாரியில் தஞ்சம் புகுந்து கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் புகுந்த ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடி வந்தன.
தொடர்ந்து போக்கு காட்டி வந்த சிறுத்தையை பிடிக்க பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து வனத்துறையினர் கூண்டு வைத்து கடந்த மாதம் 30-ந் தேதி சிறுத்தையை பிடித்தனர்.
பின்னர் சிறுத்தை அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. இதை அடுத்தே அப்பகுதி மக்கள், விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்தனர்.
இருந்தாலும் மீண்டும் கல்குவாரியில் வேறு ஏதாவது வன விலங்குகள் பதுங்கி மீண்டும் அச்சுறுத்தக் கூடாது என பயந்து வருகின்றனர்.
இது குறித்த அப்பகுதி மக்கள் கூறியதாவது:
இந்த செயல்படாத கல்குவாரி 1.25 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே உள்ளது. ஆனால் இதனை சுற்றியுள்ள பட்டா நிலங்களில் கற்கள் மலை போல் குவிந்து கிடக்கிறது. இதனால் தரிசு இடத்தில் விவசாயம் செய்ய முடிவதில்லை.
புதர் மண்டி கிடப்பதால் மீண்டும் சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் புகும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட வருவாய் துறை அதிகாரிகள் இந்த கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தவிர இந்த பகுதியில் உள்ள புதர்களை அகற்றி சுத்தமாக வைத்திருந்தால் வனவிலங்குகள் ஊருக்குள் வராது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ஏ.எஸ்.எம். காலனி பகுதி அருகே உள்ள சாக்கடை கால்வாயில் 57 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டி இறந்து கிடப்பதாக அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு அந்த பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
- அந்தியூர் பகுதியில் இறந்து கிடப்பதை அறிந்து உறவினர்கள் இன்று காலை அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு வந்து தகவல் தெரிவித்தனர்.
அந்தியூர்:
அந்தியூர் கொல்லம்பாளையம் செல்லும் சாலையில் ஏ.எஸ்.எம். காலனி பகுதி அருகே உள்ள சாக்கடை கால்வாயில் 57 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டி இறந்து கிடப்பதாக அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு அந்த பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்று அங்கே வைத்து இறந்த மூதாட்டி எந்த ஊரை சேர்ந்தவர் என்று போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் சத்தியமங்கலம் கோனமுலை அருகே உள்ள சென்னிமூப்பன்புதூர் பகுதியை சேர்ந்த பழனிச்சாமியின் மனைவி ரங்கம்மாள் (57) என்பது தெரிய வந்தது. ரங்கம்மாள் கடந்த 4 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்துள்ளது. அந்தியூர் பகுதியில் இறந்து கிடப்பதை அறிந்து உறவினர்கள் இன்று காலை அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு வந்த தகவல் தெரிவித்தனர்.
- ஆப்பக்கூடல் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வந்து கொண்டு இருந்த போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக வெங்கடேஷ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- இந்த சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆப்பக்கூடல்:
பவானி வர்ணபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (42). சாக்கு வியாபாரி. இவர் மனைவி மற்றும் 2 குழந்கதைகளுடன் மோட்டார் சைக்கிளில் ஆப்பக்கூடல் வழியாக சத்தியமங்கலம் சென்றார்.
அப்போது ஆப்பக்கூடல் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வந்து கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மற்ெறாரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக வெங்கடேஷ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் நிலை தடுமாறி வெங்கடேஷ், மனைவி மற்றும் குழந்தைகள் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தனர். இதில் வெங்கடேஷ் படுகாயம் அடைந்தார். மேலும் மனைவி மற்றும் குழந்தைகள் காயம் அடைந்தனர்.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த வெங்கடேஷ், சிகிச்சை பலனின்றி பரிதாப மாக இறந்தார்.
இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அந்தியூரை அடுத்த பர்கூர் மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது வரட்டுபள்ளம் அணை. இந்த அணைப்பகுதி இயற்கை எழில் கொஞ்சும் வகையில் பச்சை பசேலென காட்சி அளித்து வருகிறது.
- இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக பசுமை நிறைந்த வரட்டுப்பள்ளம் அணை பகுதியை சுற்றி பார்க்கவும் உள்ளே செல்லவும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்தியூர், ஜூலை.5-
ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது வரட்டு பள்ளம் அணை. இந்த அணைப்பகுதி இயற்கை எழில் கொஞ்சும் வகையில் பச்சை பசேலென காட்சி அளித்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்ததால் அணை நிரம்பி ரம்மியமாக காட்சி அளித்து வருகிறது.
அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரை பார்ப்பதற்கு அழகாக தோற்றம் அளிக்கிறது.
மேலும் மாலை நேரங்களில் அணையை பார்ப்பதற்கு மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய வகையில் பசுமை நிறைந்த இடமாக திகழ்ந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக பசுமை நிறைந்த வரட்டுப்பள்ளம் அணை பகுதியை சுற்றி பார்க்கவும் உள்ளே செல்லவும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து பொதுப்பணி துறையின் மூலம் முன்பகுதியில் (நுலை வாயில்) கேட்கல் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த அணை பகுதிக்கு மக்கள் செல்ல பொதுப்பணி த்துறையினர், வனத்துறையினர் அனுமதி வழங்க அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் பொழுது போக்கு இடமாக திகழ வழிவகை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.






