என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கறிக்கடையில் தீ விபத்து
  X

  கறிக்கடையில் தீ விபத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அதிகாலை 3 மணிக்கு கடை திடீரென தீப்பிடித்து எரிந்தது.
  • ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

  கோபி:

  கோபிசெட்டிபாளையம் சீதாலட்சுமி புரம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் அந்த பகுதியில் கோழி கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வியாபாரம் முடிந்து இரவில் கடையை பூட்டி விட்டு செல்வது வழக்கம்.

  இந்த நிலையில் நேற்று வியாபாரம் முடிந்து வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றார். இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு கடையில் திடீரென தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்தது.

  இதை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் கடை உரிமையாளர் ரவிக்கு தகவல் கொடுத்தனர். அவர் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

  இது குறித்து கோபி செட்டி பாளையம் தீயணை ப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.

  அப்போது கடையில் இருந்த கியாஸ் சிலிண்டர் பத்திரமாக மீட்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

  இதில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×