என் மலர்
ஈரோடு
- சாவடிபாளையத்துக்கு செல்லும் ரெயில்வே தண்டவாளத்தில் ஆண் பிணம் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோட்டில் இருந்து சாவடிபாளையத்துக்கு செல்லும் ரெயில்வே தண்டவாளத்தில் ஆண் பிணம் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயில் மோதி தலை சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை. இதைத்தொடர்ந்து இறந்தவரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் பகுதிக்கு வரும் சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
- சசிகலாவின் சுற்றுப்பயணத்தில் அவரை அ.தி.மு.க. நிர்வாகிகள் யாராவது சந்தித்து பேசுவார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஈரோடு:
சேலம் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணமாக சசிகலா வருகை தந்து நேற்று சுற்றுப்பயணத்தை தொடங்கினார். பல்வேறு இடங்களில் சசிகலாவுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதைத் தொடர்ந்து இரவில் சசிகலா சேலத்தில் ஓய்வு எடுத்தார். இன்று 2-வது நாளாக மதியம் 3 மணி அளவில் அரியானூரில் இருந்து சசிகலா தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். மகுடஞ்சாவடி, சங்ககிரி, எடப்பாடி பிரிவு, நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையம் வழியாக மாலை 6 மணி அளவில் சசிகலா ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் பகுதிக்கு வரும் சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன் பின்னர் சசிகலா பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவிக்கிறார்.
அதைத்தொடர்ந்து திறந்தவெளி வாகனத்தில் இருந்து பொதுமக்கள் மத்தியில் சசிகலா பேசுகிறார். பின்னர் திண்டலுக்கு செல்லும் சசிகலா அங்கு புகழ் பெற்ற திண்டல் வேலாயுதசாமி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.
சாமி தரிசனம் முடித்துக்கொண்டு அங்கு பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பி கோவை செல்கிறார். சசிகலாவின் சுற்றுப்பயணத்தில் அவரை அ.தி.மு.க. நிர்வாகிகள் யாராவது சந்தித்து பேசுவார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆனால் ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை அ.தி.மு.க.வின் கோட்டையாக உள்ளது. பெரும்பாலானவர்கள் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆதரவாளராக உள்ளனர். அதனால் அ.தி.மு.க. நிர்வாகிகள் சசிகலாவை சந்தித்து பேச வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
எனினும் அ.தி.மு.க. நிர்வாகிகள் யாரும் சசிகலாவை சந்தித்து பேசாமல் இருக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சசிகலாவின் ஒவ்வொரு நிகழ்வையும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கண்காணிக்க ஏற்பாடு செய்துள்ளார்கள்.
- கள்ளிப்பட்டியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார்.
டி.என்.பாளையம்:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டியில் இவ்வாண்டு பருவத்தி ற்கான நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார்.
நிகழ்ச்சியின் போது டி.என்.பாளையம் ஒன்றிய செயலாளர் எம்.சிவபாலன், கோபிசெட்டிபாளையம் தாசில்தார் ஆசியா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ஈரோடு மண்டல மேலாளர் வி.சி.முருகேசன், துணை மேலாளர் தரக்கட்டுப்பாடு பி.மனோகரன், டி.என்.பாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன்,
கள்ளிப்பட்டி நெல் கொள்முதல் அலுவலர் டி.மோகனசுந்தரம், கொண்டையம் பாளையம் ஊராட்சி தலைவர் மரகதம் பாலு, அரக்கன் கோட்டை பாசன விவசாயிகள் சங்க தலைவர் பகவதியண்ணன், செயலாளர் முருகேஷ் சஞ்சிவ், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
- பவானி போலீஸ் நிலையத்தில் அந்த மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
- போலீசார் அருண்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பவானி:
பவானி பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் படித்து வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளிக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து பவானி போலீஸ் நிலையத்தில் அந்த மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
போலீசாரின் தீவிர விசாரணையில் திருவண்ணாமலை பிள்ளையார் கோவில் தெரு பகுதியை சேர்ந்த அருண்குமார் (19). என்பவர் பவானியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி வேலை பார்த்து வருவதும், அவர் தான் ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்தி திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் அருண்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பிளஸ்-2 மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்து பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பவானியில் பரபரப்பை ஏற்படுத்தியு ள்ளது.
- ஈரோடு மாவட்டத்தில் 5 கல்வி மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் படித்த 623 மாணவ, மாணவிகள் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் நீட் தேர்வினை எழுதினர்.
- இதில் 197 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 149 பேர் முதல் முறையாகவும், 48 பேர் 2-வது முறை யாகவும் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று ள்ளனர். தேர்ச்சி சதவீதம் 31.62 என கணக்கிடப்ப ட்டுள்ளது.
ஈரோடு:
நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படி ப்பான பொது மருத்துவம் (எம்.பி.பி.எஸ்) மற்றும் பல் மருத்துவம் (பி.டி.எஸ்) போன்ற மருத்துவ படிப்பு களில் சேருவதற்கான நீட் என்ற நுழைவுத்தேர்வு மத்திய அரசின் தேசிய தேர்வுகள் முகமை சார்பில் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி நடப்பாண்டி ற்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17-ந் தேதி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 12, 840 பேர் தேர்வு எழுதியதில் 4,447 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நீட் தேர்வு ஈரோடு மாவட்டத்தில் 7 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு வெளியானது.
இதில் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி, சத்தி, பவானி, பெருந்துறை என 5 கல்வி மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் படித்த 623 மாணவ, மாணவிகள் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் நீட் தேர்வினை எழுதினர்.
இதில் 197 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 149 பேர் முதல் முறையாகவும், 48 பேர் 2-வது முறை யாகவும் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று ள்ளனர். தேர்ச்சி சதவீதம் 31.62 என கணக்கிடப்ப ட்டுள்ளது.
அதேபோல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 41 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி 16 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் 500 மதிப்பெண்ணுக்கு மேல் ஒருவரும், 400-க்கு மேல் இருவர், 300-க்கும் மேல் 5 பேர், 200-க்கும் மேல் 26 பேர், 100-க்கு மேல் 138 பேர், 93-க்கும் மேல் 25 பேர் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது.
- காய்ச்சல் மற்றும் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில் பல்வேறு துறையினருக்கு பொறுப்புகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது.
அப்போது கலெக்டர் பேசும் போது கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. மேலும் வட கிழக்கு பருவ மழை தொடங்க உள்ளது.
இதனால் காய்ச்சல் மற்றும் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில் பல்வேறு துறையினருக்கு பொறுப்புகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஊராட்சிகளில் 9,641 வீடுகள் உள்ளன. கொசு புழு ஒழிப்பு பணியாளர் தினமும் கொசு புழு ஒழிப்பு பணி செய்ய வேண்டும். இதனால் கொசு உரு வாகாத சூழ்நிலை ஏற்படும்.
மாவட்டம் முழுவதும் 1032 கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். தற்சமயம் 245 கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு உள்ளனர்.
போதுமான தடுப்பு நடவடிக்கை எடுக்க இயலாத நிலை உள்ளதால் டிசம்பருக்குள் மேலும் 787 கொசு ஒழிப்பு களப்பணி யாளர்களை நியமித்து அனைத்து பகுதிகளிலும் கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் பட்சத்தில் கொசு உருவாகாத நிலை ஏற்படுத்த வேண்டும்.
மேலும் மழை காலத்தில் தேவையில்லாத நீர் தேங்கி உள்ள பாத்திரங்கள், டயர்கள், தேங்காய் ஓடுகள் பிளாஸ்டிக் பொருட்களை அகற்ற வேண்டி உள்ளதால் பணிசெய்யும் இடங்களில் தூய்மைபணியாளர்கள் அனுப்ப வேண்டும்.
டெங்கு காய்ச்சல் கண்ட பகுதிகளில் உடனடியாக புகை மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீழ்நிலை மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை 15 நாட்க ளுக்கு ஒரு முறை சுத்தம் செய்து குளோரின் அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
புகை மருந்து அடிக்கும் கருவிகளை பழுது நீக்கம் செய்ய வேண்டும். டெங்கு காய்ச்சல் மற்றும் காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக புகை மருந்து அடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் அனைத்து வீடுகளிலும் கொசு ஒழிப்பு பணி மற்றும் புகை மருந்து அடிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். குடிநீரில் குளோரின் அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
அங்கன்வாடி மையங்க ளுக்கு வரும் குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சுகாதார செவிலியரிடம் தெரிவிக்க வேண்டும்.
மகளிர் சுய உதவி குழுக்களில் பணி புரிபவர்களின் பகுதியில் காய்ச்சல் பாதிக்கப்பட்டு இருந்தால் உடனே அரசு மருத்துவ மனைக்கு செல்ல அறிவுறுத்த வேண்டும். மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பள்ளியில் இறை வணக்க த்தின் போது மா ணவர்களுக்கு கொசுப்புழு உருவாகும் இடங்கள், கொசுவால் ஏற்படும் நோய்கள் குறித்து விளக்க வேண்டும்.
கல்லூரி மாணவ- மாணவிகள் மூலம் கொசு ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கொசு ஒழிப்பு பணியாளர்கள் தேவையற்ற நீர் தேங்கும் பொருட்களை சாக்கு பையில் கட்டி துப்புரவு பணியாளர்கள் எடுத்து செல்ல ஏதுவாக வீட்டின் முன்புறம் வைக்க வேண்டும்.
சேகரிக்கும் தேவையற்ற பொருட்களை உடனடியாக துப்புரவு பணியாளர்கள் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லவேண்டும்.
நீர் சேகரித்து வைக்கும் பாத்திரங்களில் கொசு புகாத வண்ணம் மூடி வைக்க வேண்டும். காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் கண்ட பகுதிகளில் வீட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் கொசு மருந்து கண்டிப்பாக அடிக்க வேண்டும்.
வீட்டிற்கு உட்பகுதியில் புகை மருந்து அடித்து 15 நிமிடங்கள் வரை வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும்.
அனைத்து பகுதி களிலும், கொசு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் தூய்மைபணியாளர்கள் இணைந்து தேவையற்ற பொருட்களை அப்புற ப்படுத்தி நீர் தேங்கியுள்ள மற்றும் அசுத்தமான பகுதிகளில் பிளீச்சிங் பவுடர் தெளித்து நோய் தொற்று ஏற்படாமல் செய்ய வேண்டும்.
மேலும் அனைத்து மேல்நிலைத் தொட்டிகளிலும், மாதம் இரு முறை சுத்தம் செய்து குளோரினேசன் செய்யப்பட வேண்டும். வீடுகளில் கொசுப்புழு ஒழிப்பு பணி செய்யும் போது வீடுகளில் காய்ச்சல் கண்டறியபட்டால் உடனடியாக சுகாதார ஆய்வாளரிடம் தெரிவிக்க வேண்டும்.
மேலும் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கி ணைந்து பணியாற்றி டெங்கு காய்ச்சல் இல்லாத மாவட்டமாக உருவாக்கிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் துணை இயக்குநர் (சுகாதாரபணிகள்) சோமசுந்தரம், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சூர்யா, மாநகர நல அலுவலர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வீட்டில் யாரும் இல்லாத போது தனியாக இருந்த வசந்தியிடம் பிரகாஷ் எலக்ட்ரீசியன் பொருட்கள் தேவைப்படுகிறது எனக்கூறி வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு அழைத்து சென்றார்.
- பின்னர் மயக்கம் தெளிந்த வசந்தி கூச்சலிட பிரகாஷ் அருகில் இருந்த இரும்பு கம்பியால் தலையில் பலமாக தாக்கி தங்க நகைகளுடன் தப்பி ஓட்டம் பிடித்தார்.
பவானி, செப். 13-
பவானி அருகே உள்ள மாமரத்துபாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் இவரது மனைவி வசந்தி (39). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
பில்டிங் காண்ட்ரா க்டரான வெங்கடேஷ் தனது கட்டிடங்களின் எலக்ட்ரீசியன் வேலை செய்ய மனைவி வசந்தியின் தங்கை மகனான சேலம் மாவட்டம் கொங்க ணாபுரம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (25) என்பவரை வீட்டில் தங்க வைத்து வேலைக்கு வைத்து இருந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது தனியாக இருந்த வசந்தியிடம் பிரகாஷ் எலக்ட்ரீசியன் பொருட்கள் தேவைப்படுகிறது எனக்கூறி வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு அழைத்து சென்றார்.
அப்போது திடீரென பிரகாஷ் அருகில் இருந்த வயரை எடுத்து கழுத்தை நெரித்து வசந்தியை மயக்கம் அடைய செய்தார். இந்நிலை யில் அவர் அணிந்திருந்த தாலி மற்றும் தங்க நகைகளை பிரகாஷ் திருடி சென்றார்.
பின்னர் மயக்கம் தெளிந்த வசந்தி கூச்சலிட பிரகாஷ் அருகில் இருந்த இரும்பு கம்பியால் தலையில் பலமாக தாக்கி தங்க நகைகளுடன் தப்பி ஓட்டம் பிடித்தார்.
இதனையடுத்து வெளியே சென்று வீட்டிற்கு வந்த வெங்கடேஷ் தனது மனைவி ரத்த வெள்ளத்தில் வீட்டில் கிடந்ததை தொடர்ந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் சித்தோடு போலீசாரிடம் புகார் அளித்தார்.
சித்தோடு இன்ஸ்பெக்டர் முருகையா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி வழக்குப்பதிவு செய்து இச்ச சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். தலைமறைவாக இருந்த பிரகாஷை சித்தோடு போலீசார் பிடித்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பிரகாஷ் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு பல லட்சம் ரூபாய் கடன் ஏற்பட்டுள்ளது. அந்த கடனை அடைக்க சித்தி திருமணம் நிகழச்சிக்கு சென்று வந்த போது வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வயரால் கழுத்தை நெரித்து மயக்க மடைய செய்து உள்ளார்.
மயக்கம் தெளிந்த வசந்தி கூச்சல் இட்டதால் பின்னர் இரும்பு கம்பியால் தாக்கி சித்தியின் கழுத்தில் அணிந்திருந்த தாலி மற்றும் தங்க நகைகள் 19 பவுனை திருடி தப்பி ஓட்டம் பிடித்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சித்தோடு போலீசார் பிரகாசை கைது செய்து கோபி மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர்.
- சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று பண்ணாரியம்மன் கோவில் வளாக பகுதியில் உள்ள சுற்று சுவரில் ஏறி அங்குமிங்கும் உலாவி கொண்டிருந்தது.
- இதனால் கோவில் பணியாளர்கள் மற்றும் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அடர்ந்த வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இங்கு உலகப்பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பண்ணாரி வனப்பகுதியில் உள்ள மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலய பகுதியில் இரவு நேரங்களில் காட்டு பன்றிகள், யானைகள் உலாவுவது வழக்கமாக உள்ளது.
இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று பண்ணாரியம்மன் கோவில் வளாக பகுதியில் உள்ள சுற்று சுவரில் ஏறி அங்குமிங்கும் உலாவி கொண்டிருந்தது. இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்தார்.
இதனையடுத்து வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கும், பக்தர்களுக்கும் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் கோவில் பணியாளர்கள் மற்றும் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
- மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி, கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் கனமழை பெய்ததால் நொய்யல் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
- அணையில் இருந்து வினாடிக்கு 421 கன அடி தண்ணீர் நொய்யல் ஆற்றில் வெளியேற்ற ப்பட்டது.
சென்னிமலை:
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்க ளுக்கு முன்பு சென்னிமலை அருகே உள்ள ஒரத்துப் பாளையம் அணையில் 7 அடி தண்ணீர் மட்டுமே தேங்கி இருந்தது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி, கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் கனமழை பெய்ததால் நொய்யல் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து அதிக அளவு தண்ணீர் அணைக்கு வந்தது. நேற்று முன் தினம் நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 675 கன அடி தண்ணீர் நீர்வரத்து இருந்தது.
அணையில் இருந்து வினாடிக்கு 421 கன அடி தண்ணீர் நொய்யல் ஆற்றில் வெளியேற்றப்பட்டது.
அப்போது அணையில் 11 அடி தண்ணீர் தேங்கி இருந்தது.
பின்னர் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 553 கன அடி நீர்வரத்து இருந்தது.
அணையில் இருந்து வினாடிக்கு 470 கனஅடி தண்ணீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டது.
இதையடுத்து அணையின் நீர்மட்டம் 13 அடியாக உயர்ந்தது. மேலும் நேற்று பகலில் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.
வெள்ளப்பெருக்கால் நீர்வரத்து அதிகரித்ததால் ஒரத்துப்பாளையம் அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் 6 மதகு களில் வெளியேற்றப்பட்டது.
- ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஈரோடு காமராஜர் அரசு மேல் நிலைப்பள்ளியில் காலை உணவுத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள மைய சமையல் கூடத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- அனைத்து பள்ளிகளிலும் 100 மாணவ, மாணவிகளுக்குஒரு நபர் என்ற வீதத்தில் பணி யாளர்கள் நியமிக்கப்பட்டு உணவு பரிமாறப்பட உள்ளது.
ஈரோடு:
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 15-ந் தேதி (வியாழக்ழமை) முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை தொடங்கி வைக்கிறார்.
இதையொட்டி ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஈரோடு காமராஜர் அரசு மேல் நிலைப்பள்ளியில் காலை உணவுத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள மைய சமையல் கூடத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் அலுவலர்களுக்கு ஆலோ சனைகள் வழங்கினார்.
முதல்-அமைச்சர் வரும் 15-ந் தேதி காலை உணவுத் திட்டத்தினைதொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் கீழ் ஈரோடு மாநக ராட்சிக்குட்பட்ட பகுதி களில் அமைந்துள்ள 26 தொடக்கப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 2649 மாணவ, மாணவிகளுக்கு அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை உணவு வழங்கப்பட உள்ளது.
மேலும் இத்திட்டத்தின் கீழ் அரசின் வழி காட்டு நெறிமுறைகளின் படி ஈரோடு மாநகராட்சி காமராஜ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மைய சமையல் கூடத்தில் காலை உணவு சமைக்கப்பட்டு பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது. மேலும் அனைத்து பள்ளிகளிலும் 100 மாணவ, மாணவிகளுக்குஒரு நபர் என்ற வீதத்தில் பணி யாளர்கள் நியமிக்கப்பட்டு உணவு பரிமாறப்பட உள்ளது.
இத்திட்டம் வரும் 16-ந் தேதி முதல் ஈரோடு மாநகராட்சிக் குட்பட்ட 26 தொடக்கப்பள்ளிகளில் தொடங்கப்பட உள்ளது என கலெக்டர் கூறினார். மேலும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு அறி வுரை வழங்கினார்.
ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், கலெக்டரின் நேர்மு கஉதவியாளர் (சத்துணவு) மணிவண்ணன், ஈரோடு மா வட்ட கல்வி அலுவலர் ஜோதிசந்திரா உள்பட பலர் உடனிருந்தனர்.
- அந்தியூர் தவிட்டுப்பாளையம் அழகு முத்து மாரியம்மன், ஆனந்த விநாயகர் கோவில் புனராவர்த்தன கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
- அதனை தொடர்ந்து அழகு முத்து மாரியம்மன் சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
அந்தியூர்:
அந்தியூர் அடுத்த தவிட்டுப்பாளையம் பிரம்மதேசம் சாலையில் அழகு முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு புதியதாக திருப்பணிகள் நடைபெற்று கும்பா பிஷேகம் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து 12-ம் ஆண்டு நிறைவ டைந்ததை தொடர்ந்து அழகு முத்து மாரியம்மன், ஆனந்த விநாயகர் கோவில் புனராவர்த்தன கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதற்காக பக்தர்கள் ராமேஸ்வரம் பவானி கூடுதுறை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து புனித நீர் ஆகியவைகளை அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து அழைத்து வரப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அனைத்து வேலைகளும் நன்மையாக நடைபெற வேண்டி ஆனந்த விநாயகர் யாகம் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சியும், 2-ம் கால யாக பூஜைகள், துவார பூஜை பலவித திரவியங்கள், கனிவகைகள் யாக பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் நேற்று காலை கும்பாபிஷேகம் நடை–பெற்றது. தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அழகு முத்து மாரியம்மன் சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
- 1997-ல் விக்னேஷ், தேவயானி நடித்த காதலி என்கிற படத்தை இயக்கியவர் சித்து.
- இவர் நேற்று முன்தினம் இரவு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் காலமானார்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள சிவகிரியை சேர்ந்தவர் சித்து என்கிற சித்தேஸ்வரன் (வயது 60). இவர் பிரபல இயக்குனர் கங்கை அமரனிடம் உதவி இயக்குனராக கரகாட்டக்காரன் உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றி வந்தார். அதன்பின்னர் 1997-ல் விக்னேஷ், தேவயானி நடித்த காதலி என்கிற படத்தை இயக்கினார்.
அதை தொடர்ந்து மன்சூர் அலிகானை கதாநாயகனாக நடிக்க வைத்த ஆனா அந்தமடம் ஆகாட்டி சந்தை மடம் என்கிற திரைப்படத்தை இயக்கினார். இப்படம் சில காரணங்களால் வெளியாகாமல் போனது. தொடர்ந்து சின்னத்திரையில் ரோஜா உள்ளிட்ட பல்வேறு தொடர்களுக்கு கதை வசனகர்த்தாவாகவும், நடிகராகவும் இருந்துள்ளார்.
தற்போது பாரதிராஜா நடிப்பில் கடைமடை என்னும் பெயரில் கிராமத்து படம் ஒன்றை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் காலமானார். அதை தொடர்ந்து இயக்குனர் சித்துவின் உடல் அவரது சொந்த ஊரான சிவகிரிக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. இவரின் உடலுக்கு சினிமா மற்றும் சின்னத்திரையை பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் இயக்குனர் சித்துவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இவரது தம்பி பொன்.ஆதி.ஆறுமுகம் இயக்கத்தில் இன்னும் சில மாதங்களில் வெளிவர உள்ள பனை திரைப்படத்தில் இறந்த சித்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






