பிளஸ்-2 மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபர்

பவானி போலீஸ் நிலையத்தில் அந்த மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர்.போலீசார் அருண்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பிளஸ்-2 மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபர்
Published on

பவானி:

பவானி பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் படித்து வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளிக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து பவானி போலீஸ் நிலையத்தில் அந்த மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

போலீசாரின் தீவிர விசாரணையில் திருவண்ணாமலை பிள்ளையார் கோவில் தெரு பகுதியை சேர்ந்த அருண்குமார் (19). என்பவர் பவானியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி வேலை பார்த்து வருவதும், அவர் தான் ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்தி திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து போலீசார் அருண்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பிளஸ்-2 மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்து பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பவானியில் பரபரப்பை ஏற்படுத்தியு ள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com