என் மலர்tooltip icon

    ஈரோடு

    • பு.புளியம்பட்டியில் பா.ஜனதா பிரமுகர் சிவசேகர் காருக்கு தீ வைத்தது தொடர்பாக தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • ஈரோடு மாவட்டம் முழுவதும் தொடர்ந்து இரவு ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மூலப்பாளையத்தில் பா.ஜ.க. பிரமுகர் தட்சிணாமூர்த்தி (51) என்பவர் பர்னிச்சர் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்றார்.

    அப்போது நள்ளிரவில் இவரது கடைக்கு வந்த மர்மநபர்கள் சிலர் டீசல், பெட்ரோல் நிரப்பிய பாக்கெட்டுகளை ஜன்னல் வழியாக கடைக்குள் வீசினர். மேலும் ஒரு குச்சியில் தீ வைத்தும் வீசினர்.

    இதில் ஜன்னல் மற்றும் கடைக்குள் இருந்த டேபிள் லேசாக எரிந்து அணைந்தது. காலையில் கடைக்கு வந்து பார்த்தபோது டீசல், பெட்ரோல் பாக்கெட்டுகள் கிடப்பதும், மேஜை, ஜன்னல் சிறிய அளவில் எரிந்து கிடப்பதையும் கண்டு தட்சிணாமூர்த்தி அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அவர் தாலுகா போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு ஏ.டி.எஸ்.பி. கனகேஸ்வரி, டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதுபற்றி தெரியவந்ததும் ஏராளமான பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கடை முன்பு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமிராக்களையும் ஆய்வு செய்தனர். அப்போது சம்பவத்தன்று இரவு பர்னிச்சர் கடைக்கு 4 பேர் கொண்ட கும்பல் வந்து பெட்ரோல், டீசல் ஊற்றி தீ வைத்தது தெரிய வந்தது.

    இதையடுத்து கேமிராவில் பதிவானவர்களை போலீசார் தேடி வந்தனர். அப்போது அவர்கள் கருங்கல்பாளையம் ஜெகன் வீதியை சேர்ந்த முகமதுரபீக் என்பவரது மகன் சதாம்உசேன் (25), பி.பி.அக்ரஹாரம் கைக்கோளர் வீதியை சேர்ந்த முகமது இலியாஸ் என்பவரது மகன் கலில்ரகுமான் (27), இந்திரா நகரை சேர்ந்த அமனுல்லா என்பவரது மகன் ஜாபர்சாதிக் (27), அவரது தம்பி ஆசிக்அலி (23) என்பது தெரிய வந்தது. மேலும் இவர்கள் அனைவரும் எஸ்.டி.பி.ஐ. கட்சியில் இருப்பதும் தெரிய வந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்கள் மீது சொத்தை சேதப்படுத்துதல், கூட்டு சதி செய்தல், தீயை வைத்து சொத்தை சேதப்படுத்துதல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவையில் சிறையில் அடைத்தனர்.

    மேலும் பு.புளியம்பட்டியில் பா.ஜனதா பிரமுகர் சிவசேகர் காருக்கு தீ வைத்தது தொடர்பாக தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் முழுவதும் தொடர்ந்து இரவு ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு ரெயில் நிலையத்திற்கு துப்பாக்கி இந்தியா போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் உடைமைகள் தீவிர பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறது.

    ஈரோடு:

    கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பா.ஜ.க. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு மற்றும் நிர்வாகிகள் வீடுகள், கார் போன்றவை தீ வைத்து வருகின்றன.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் பா.ஜ.க. அலுவலகம், பா.ஜ.க. நிர்வாகி வீடு, இந்து முன்னணி அலுவலகம், இந்து முன்னணி நிர்வாகி வீடுகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதேபோல் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள தலைவர்கள் சிலை வழிபாட்டு தலங்கள், பொதுமக்கள் அதிக கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று 3-வது நாளாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

    இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு ரெயில் நிலையத்திற்கு துப்பாக்கி இந்தியா போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஈரோடு ரெயில் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 100-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன.

    இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்கள், தமிழகத்தில் பல்வேறு பகுதியிலிருந்து வரும் மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரெயில் நிலைய நுழைவு வாயிலில் ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் உடைமைகள் தீவிர பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறது. இதேபோல் ஈரோடு ரெயில்வே போலீசார் ஒவ்வொரு நடைமேடையாக சென்று கண்காணித்து வருகின்றனர். ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வரும் அனைத்து ரெயில்களிலும் ஒவ்வொரு பெட்டியாக சென்று சோதனை செய்து வருகின்றனர். மேலும் ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் உடைமைகளையும் சோதனை செய்து வருகின்றனர்.

    ரெயிலில் இருக்கும் பெட்டிகள், பைகளை தொட வேண்டாம் என்றும், இது குறித்து ரெயில்வே போலீசருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சந்தேகப்படும் நபர்கள் யாராவது இருந்தாலும் தகவல் தெரிவிக்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 5 காட்டு யானைகள் பவானிசாகர் அணையின் கரையை யொட்டி உள்ள பகுதியில் முகமிட்டுள்ளன.
    • காட்டு யானைகள் அணையில் கரைப்பகுதியில் முகாமிட்டு உள்ளதை கண்ட பொது பணித்துறை ஊழியர்கள் அச்சமடை ந்துள்ளனர்.

    ஈரோடு:

    பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியையொட்டி பவானிசாகர் மற்றும் விளாமுண்டி வனப்பகுதி அமைந்துள்ளது. வனப்பகுதி–யில் வசிக்கும் காட்டு யானைகள் குடிநீர் தேடி பவானிசாகர் அணை பகுதிக்கு வந்து செல்வது தொடர்கதையாக இருந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று மாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 5 காட்டு யானைகள் பவானி சாகர் அணையின் கரையை யொட்டி உள்ள பகுதியில் முகமிட்டுள்ளன. கரைப்ப குதியில் உள்ள தீவனங்களை உட்கொண்ட காட்டு யானைகள் ஜாலியாக விளையாடி மகிழ்ந்தன.

    காட்டு யானைகள் அணையில் கரைப்பகுதியில் முகாமிட்டு உள்ளதை கண்ட பொது பணித்துறை ஊழியர்கள் அச்சமடை ந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    பவானிசாகர் அணை–யின் கரையில் நடமாடும் காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள முட்புதற் காட்டில் இரவு நேரத்தில் முகாமிடுவதால் பவானிசாகர் அணை மற்றும் கரை பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை மேய்ச்சலில் ஈடுபடுவோர் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என பொது ப்பணித்துறையினர் மற்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் கரைப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதியில் விரட்ட வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    • குருமூர்த்தி திடீரென ஜீவிதாவின் கழுத்தை பிடித்து கத்தியை காட்டி காதில் அணிந்திருந்த அரை பவுன் தங்க கம்மலை பறித்து கொண்டார்.
    • இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து குருமூர்த்தியை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த துடுப்பதி சாரணர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி ஜீவிதா (28). மணிகண்டன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று மணிகண்டன் வேலை விஷயமாக வெளியே சென்று விட்டார். ஜீவிதா வீட்டில் குழந்தைகளுடன் இருந்தார். அப்போது அவரது வீட்டிற்கு திங்களூர் ஊத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த உறவினர் குருமூர்த்தி (32) என்பவர் திடீரென வந்தார்.

    பின்னர் குருமூர்த்தி திடீரென ஜீவிதாவின் கழுத்தை பிடித்து கத்தியை காட்டி சத்தம் போட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி ஜீவிதாவை கீழே தள்ளி விட்டு காலால் எட்டி உதைத்து அவர் காதில் அணிந்திருந்த அரை பவுன் தங்க கம்மலை பறித்து கொண்டார்.

    வலி தாங்க முடியாமல் ஜீவிதா அலற அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது அவர்களையும் குருமூர்த்தி தாக்கினார். இதைனயடுத்து பொது மக்கள் ஒன்று சேர்ந்து குர்மூர்த்தியை மடக்கி பிடித்தனர்.

    பின்னர் குருமூர்த்தியை பெருந்துறை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர். இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து குருமூர்த்தியை கைது செய்தனர். 

    • பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் சனி மற்றும் புதன்கிழமைகளில் கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது.
    • மொத்தம் 1 லட்சத்து 63 ஆயிரம் கிலோ கொப்பரைகள் விற்பனையாகின. இவற்றின் மொத்த விற்பனை மதிப்பு ரூ. 1 கோடியே 23 லட்சம் ஆகும்.

    பெருந்துறை:

    பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் சனி மற்றும் புதன்கிழமைகளில் கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது.

    அதன்படி நேற்று நடைபெற்ற ஏலத்துக்கு மொத்தம் 3,366 மூட்டைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் முதல் தர கொப்பரைகள் 1,902 மூட்டைகள் வரப் பெற்றிருந்தன.

    இவை குறைந்தபட்ச விலையாக கிலோ ரூ. 76.59-க்கும், அதிகபட்சமாக ரூ.80.19-க்கும் விற்பனையாகின. 2-ம் தர கொப்பரைகள் 1,464 மூட்டைகள் கொண்டு வரப்பட்டிருந்தன.

    இவை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 56.29-க்கும், அதிகபட்சமாக ரூ. 75.50-க்கும் விற்பனையாகின. மொத்தம் 1 லட்சத்து 63 ஆயிரம் கிலோ கொப்பரைகள் விற்பனையாகின. இவற்றின் மொத்த விற்பனை மதிப்பு ரூ. 1 கோடியே 23 லட்சம் ஆகும்.

    • பாலாஜி தனது மனைவி, தம்பியுடன் மாமனார் வீட்டில் இருந்து கிளம்பி தனது வீட்டிற்கு காரில் சென்று கொண்டி ருந்தார்.
    • கார் சென்று கொண்டிருந்த போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அந்த பகுதியில் உள்ள ஒரு சுவற்றில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே பாரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுகன்யா (29).இவருக்கும் நாமக்கல் மாவட்டம் சோழசிராமணி பகுதியை சேர்ந்த டாக்டர் பாலாஜி (30) என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது.

    இந்நிலையில் பாலாஜி தனது மனைவி சுகன்யா மற்றும் தம்பி வெங்கட்ரா மணன் ஆகியோருடன் நேற்று காரில் பாரப்பாளையம் பகுதியில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு வந்தார்.

    பின்னர் மாலை பாலாஜி தனது மனைவி, தம்பியுடன் மாமனார் வீட்டில் இருந்து கிளம்பி தனது வீட்டிற்கு காரில் சென்று கொண்டி ருந்தார். காரை பாலாஜி ஓட்டி வந்து கொண்டிருந்தார்.

    கொடுமுடி அருகே உள்ள சோளகாளிபாளையம் பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அந்த பகுதியில் உள்ள ஒரு சுவற்றில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் பாலாஜி, சுகன்யா மற்றும் பாலாஜி தம்பிக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவ சமாக அவர்கள் உயிர் தப்பினர். இதையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சை க்காக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    இந்த விபத்து குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது.
    • வெளி மார்க்கெட்டுகளை விட உழவர் சந்தைகளில் காய்கறிகள் விலை மலிவாக கிடைப்பதால் மக்கள் இங்கு காய்கறிகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது.

    விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய்கறி களை பல்வேறு பகுதியில் இருந்து உழவர் சந்தைக்கு கொண்டு வந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். வெளி மார்க்கெட்டுகளை விட உழவர் சந்தைகளில் காய்கறிகள் விலை மலிவாக கிடைப்பதால் மக்கள் இங்கு காய்கறிகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், நேற்று புரட்டாசி சனிக்கிழமையை யொட்டியும், இன்று (25-ந் தேதி) புரட்டாசி அமாவா சையை முன்னிட்டும் மாவட்டத்தில் உள்ள 6 உழவர் சந்தைகளிலும் விவசாயிகள் அதிகளவில் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அனைத்து உழவர் சந்தைகளிலும் காலை முதலேமக்கள் கூட்டம் காய்கறிகளை வாங்க அலைமோதியது.

    இதில் ஈரோடு மாநகரில் உள்ள சம்பத் நகர் உழவர் சந்தைக்கு வரத்தான 23.44 டன் காய்கறிகள் ரூ.7 லட்சத்து 38 ஆயிரத்து 627-க்கும், ஈரோடு பெரியார் நகர் உழவர் சந்தைக்கு வரத்தான 9.97 டன் காய்கறிகள் ரூ.2 லட்சத்து 77 ஆயிரத்து 543-க்கும் விற்பனையானது.

    இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள 6 உழவர் சந்தைகளிலும் நேற்று வரத்தான 60.96 டன் காய்கறிகள் ரூ.17 லட்சத்து 82 ஆயிரத்து 212-க்கு விற்பனையானதாக உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • ஈரோடு பவானி கூடுதுறை சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது.
    • அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர்.

    புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையை மகாளய அமாவாசையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நீர் நிலைகளில் பொது மக்கள் புனித நீராடி முன்னேர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

    ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது. இதனால் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கூடுதுறைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ்வர ரை வழிபட்டு வருகிறார்கள்.

    மேலும் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் வட மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் அதிகளவில் வந்து நீராடி வழிபட்டு செல்கிறார்கள்.

    இந்த நிலையில் புரட்டாசி மாத மகாளய அமாவாசை இன்று ஏராளமானோர் பொதுமக்கள் பவானி கூடுதுறைக்கு வந்திருந்தனர். அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி, எள்ளும் தண்ணியும் விடுதல், பிண்டம் விடுதல், பித்ரு பூஜை, தர்ப்பணம் போன்ற பரிகாரங்களை செய்தனர். தொடர்ந்து பொது மக்கள் சங்கமேஸ்வரரை தரிசனம் செய்தனர்.

    நேரம் செல்ல செல்ல பக்தர்களின் கூட்டம் அலை மோதியது. ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை, சென்னை, கரூர் உள்பட பல்வேறு மாவட்ட பக்தர்கள் மற்றும் வெளி மாநில பக்தர்கள் என லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுதுறையில் குவிந்து புனித நீராடினர்.

    இதை யொட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் குளிப்பதற்கு தனி, தனியாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவில் வளாகத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பொது மக்கள் வரிசையாக சென்று வழிபட்டனர். இதனால் பவானி நகரம் முழுவதும் பக்தர்களின் கூட்டமாக காணப்பட்டது.

    அசம்பா வித சம்பவங்கள் நடை பெறாமல் இருக்கும் பொருட்டு கோவில் நிர்வாகத்தின் மூலம் பல்வேறு இடங்களில் 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கக்கபட்டு வருகிறது.

    கோவிலுக்கு செல்லும் நுழைவு வாயில் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பொதுமக்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் புனித நீராடும் பகுதியில் போலீசார் ஒலி பெருக்கி மூலம் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து வழியுறுத்தினர்.

    தீயணைப்பு வீரர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் படகுகள் மூலம் ஆற்றில் சென்று கண்காணித்து ஆழமான பகுதிக்கு செல்ல வேண்டாம் அறிவுறுத்தி வருகிறார்கள்.

    இதனால் பவானி நகரம் முழுவதும் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. ஆயிரக்கணக்கான வாகனங்களில் பொதுமக்கள் வந்ததால் கோவில் வளாகத்தில் வாகனங்கள் அணிவகுத்தன.

    மேலும் வெளியூர்களில் வந்த வாகனங்கள் பவானி பெண்கள் மேல்நிலை ப்பள்ளி, செல்லாண்டி யம்மன் கோவில் வளாகம் மற்றும் தேர் வீதி உள்பட பல் இடங்களில் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதனால் கனரக வாகனங்கள் பவானி நகருக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதையொட்டி கனரக வாகங்கள் பவானி புதிய பஸ் நிலையம், காவிரி ஆற்று பாலம் மற்றும் குமாரபாளையம் வழியாக சென்றன.

    பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு அமிர்தவர்ஷினி மற்றும் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் 100-க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் நகரம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகிறார்கள்.

    இதே போல் கொடுமுடி காவிரி ஆற்றில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். தொடர்ந்து அவர்கள் மகுடேஸ்வரரை வழிபட்டனர். இதே போல் கருங்கல் பாளையம் காவிரி ஆற்றிலும் பக்தர்கள் பலர் திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர்.

    • தினமும் இந்த பகுதிகளிலிருந்து 25 ஆயிரம் கொத்தமல்லி கட்டுகள் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
    • ஈரோடு வ.உ.சி மார்க்கெட்டுக்கு இன்று 5 ஆயிரம் கொத்தமல்லி கட்டுகள் மட்டுமே வரத்தாகி இருந்தன.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் ஓசூர், திருப்பூர், தேனி போன்ற பகுதிகளில் இருந்து கொத்தமல்லி விற்பனைக்கு வருகின்றன. தினமும் இந்த பகுதிகளி லிருந்து 25 ஆயிரம் கொத்தமல்லி கட்டுகள் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

    இந்நிலையில் ஓசூர், தேனி போன்ற மாவட்டங் களில் பரவலாக மழை பெய்ததன் காரணமாக கொத்தமல்லி வரத்து குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக விலையும் அதிகரித்துள்ளது. ஈரோடு வ.உ.சி மார்க்கெட்டுக்கு இன்று 5 ஆயிரம் கொத்தமல்லி கட்டுகள் மட்டுமே வரத்தாகி இருந்தன.

    இதனால் ஒரு கட்டு பத்து ரூபாய்க்கு விற்க ப்பட்ட நிலையில் இன்று ஒரு கட்டு கொத்தமல்லி ரூ.35 முதல் ரூ.40 வரை விற்பனை யானது. இதேபோல் புதினா கட்டு 6 ரூபாய்க்கும், கருவேப்பிலை ஒரு கிலோ ரூ.30-க்கும் விற்கப்பட்டது. 

    • பவானிசாகர் அணை 102 அடியில் தொடர்ந்து 50-வது நாளாக நீடித்து வருகிறது.
    • நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு 2,800 கன அடியாக நீர் வரத்து சரிந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் கொள்ளளவு 105 அடி ஆகும். அணையின் நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் கடந்த மாதம் 5 -ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு 2,800 கன அடியாக நீர் வரத்து சரிந்தது. பாசனத்திற்காக கீழ் பவானி வாய்க்காலில் 2,300 கன அடி தண்ணீரும், பவானி ஆற்றில் 500 கன அடி தண்ணீரும் என 2,800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணை 102 அடியில் தொடர்ந்து 50-வது நாளாக நீடித்து வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரும், பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரும் ஒரே அளவில் இருப்பதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியில் நீடித்து வருகிறது.

    இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு வருகை புரிந்து கற்றல் செயல்பாடுகளில் ஈடுபடுவதாகவும் தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.
    • 'புன்னகை திட்டம்' மூலம் இணைய வழியில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் வழங்குவது குறித்த தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடைபெற்றது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒன்றிய மலைப்பகுதி பள்ளிகளில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவின் அடிப்படையில் 'புன்னகை திட்டம்' மூலம் இணைய வழியில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் வழங்குவது குறித்த தலைமை ஆசிரியர்கள் கூட்டம் ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன் தலைமையில் அந்தியூர் வட்டார வள மையத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மலைப் பள்ளியான ஜிடி.ஆர்.எம்.எஸ்.கத்திரிமலைப் பள்ளியில் நடைமுறையில் உள்ள புன்னகை திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியரால் விளக்க–ப்பட்டது.

    இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு வருகை புரிந்து கற்றல் செயல்பாடுகளில் ஈடுபடுவதாகவும் தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.

    எனவே முதல் கட்டமாக இத்திட்டத்தினை பர்கூர் கிழக்கு மலையில் உள்ள நடுநிலைப் பள்ளிகள் மடம் பெஜிலிட்டி, எப்பத்தாம் பாளையம் மற்றும் தொடக்கநிலைப் பள்ளிகள் கல்வாரை, தேவர்மலை ஆகிய பள்ளிகளில் நடைமுறைப்படுத்துவது குறித்து முதன்மை கல்வி அலுவலர் ஆலோசனை வழங்கினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர் ராமசாமி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ச.வேல்முருகன், மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் மோகன் குமார், வட்டார கல்வி அலுவலர் முருகன், வட்டாரவள மையம் மேற்பார்வையாளர் லிங்கப்பன் அந்தியூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பானுமதி மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.

    • புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையை மகாளய அமாவாசையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது
    • இதையொட்டி நீர் நிலைகளில் பொது மக்கள் புனித நீராடி முன்னேர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

    பவானி:

    புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையை மகாளய அமாவாசையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நீர் நிலைகளில் பொது மக்கள் புனித நீராடி முன்னேர்களுக்கு தர்ப்பணம் ெகாடுப்பது வழக்கம்.இதே போல் இந்த ஆண்டு புராட்டாசி அமா வாசை நாளை (ஞாயிற்றுக்கி ழமை) வரு கிறது.

    ஈரோடு மாவட்டம் பவானியில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.

    இக்கோவிலில் பின் பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படித்துறை பகுதியில் காவேரி, பவானி, கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என மூன்று நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம் தென்னகத்தின் காசி பரிகார தலமாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. இதனால் ஏராளமான பொதுமக்கள் வருவார்கள்.

    பவானி கூடுதுறைக்கு புரட்டாசி மாத மகாளய அமாவாசை தினமான நாளை ஈரோடு மாவட்ட மக்கள் மட்டுமின்றி வெளியூர், வெளிமாநில பக்தர்கள் என ஏராளமானோர் வந்து புனித நீராடி முன்னோர்களுக்கு திதி, எள்ளும் தண்ணியும் விடுதல், பிண்டம் விடுதல், பித்ரு பூஜை, தர்ப்பணம் போன்ற பரிகாரங்களை செய்து சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொள்வார்கள்.

    வழக்கமாக பக்தர்கள் வருவார்கள். மகாளய அமாவாசை என்பதால் வழக்க த்தை விட ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரு வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனைத் தொடர்ந்து பவானி சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தின் சார்பில் கோவில் பின்பகுதியில் பல்வேறு இடங்களில் தற்காலிக இரும்பு செட் அமைக்கப்பட்டு உள்ளது.

    ஆண்கள் மற்றும் பெண்கள் புனித நீராட தனித்தனியாக இரும்பு செட் அமைத்தும் அனைத்து விதமான முன்னேற்பாடு நடவடி–க்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதேபோல் பக்தர்களுக்கு பரிகார பூஜைகளுக்கு தேவையான தேங்காய், வாழைப்பழம் உட்பட பல பொருட்கள் பிளாஸ்டிக் கேரி பேக் தவிர்த்து துணிப்பைகளில் பூஜை பொருட்கள் போடப்பட்டு பணியாளர்கள் மூலம் தயார் நிலையில் வைக்க ப்பட்டுள்ளன.

    மேலும் கோவில் வளாகத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த பகுதியில் அசம்பா வித சம்பவங்கள் நடை பெறாமல் இருக்கும் பொருட்டு கோவில் நிர்வாகத்தின் மூலம் பல்வேறு இடங்களில் 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு பவானி போலீசார் மூலம் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளனர்.

    இதையொட்டி பவானி சங்கமேஸ்வரர் கோவில் கூடுதுறையில் நாளை மகாளய அமாவாசையை யொட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    ×