search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A young man"

    • குட்டைக்குள் 30 வயது மதிக்க தக்க வாலிபர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.
    • வாலிபர் மது போதையில் குட்டைக்குள் தவறி விழுந்தது தெரிய வந்தது.

    கோவை,

    கோவை மாவட்டம் அன்னூர்- ஒதிமலை ரோட்டில் தண்ணீர் இல்லாத குட்டை உள்ளது. இந்த குட்டைக்குள் 30 வயது மதிக்க தக்க வாலிபர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக பொதுமக்கள் இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை ஆய்வு செய்தனர். அப்போது அவர் இறந்த 4 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதால் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. பின்னர் போலீசார் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அன்னூர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் வாலிபர் மது போதையில் குட்டைக்குள் தவறி விழுந்தது தெரிய வந்தது. போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து இறந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • செல்போன் வாங்கி வரும்படி தொந்தரவு கொடுத்து வந்தனர்.

    கோவை,

    கோவை அருகே உள்ள வெள்ளலூரை சேர்ந்தவர் 34 வயது இளம்பெண். இவர் கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

    அந்த புகாரில் கூறியிரு ப்பதாவது:-

    எனக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது எனது பெற்றோர் வரதட் சணையாக 50 பவுன் தங்க நகைகள், ரூ. 2 லட்சம் மதிப்பிலான பரிசு பொருட்கள் மறறும் திருமண செலவுக்காக ரூ.4 லட்சம் கொடுத்தனர். நான் எனது கணவருடன் அவரது வீட்டில் வசித்து வந்தேன்.

    அப்போது எனது கணவரின் குடும்பத்தினர் எனது பெற்றோரிடம் இருந்து கார் மற்றும் செல்போன் வாங்கி வரும்படி தொந்தரவு கொடுத்து வந்தனர். இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனையடுத்து நான் எனது கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்தேன்.

    இந்த நிலையில் எனது கணவருக்கு அவரது பெற்றோர் சேர்ந்த கடந்த 18-ந் தேதி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்து உள்ளனர். எனவே என்னை ஏமாற்றி விட்டு எனக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்த எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அளித்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் கிழக்கு இளம்பெண்ணின் கணவர் உள்பட அவரது குடும்பத்தினர் மீது நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

     

    • குருமூர்த்தி திடீரென ஜீவிதாவின் கழுத்தை பிடித்து கத்தியை காட்டி காதில் அணிந்திருந்த அரை பவுன் தங்க கம்மலை பறித்து கொண்டார்.
    • இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து குருமூர்த்தியை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த துடுப்பதி சாரணர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி ஜீவிதா (28). மணிகண்டன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று மணிகண்டன் வேலை விஷயமாக வெளியே சென்று விட்டார். ஜீவிதா வீட்டில் குழந்தைகளுடன் இருந்தார். அப்போது அவரது வீட்டிற்கு திங்களூர் ஊத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த உறவினர் குருமூர்த்தி (32) என்பவர் திடீரென வந்தார்.

    பின்னர் குருமூர்த்தி திடீரென ஜீவிதாவின் கழுத்தை பிடித்து கத்தியை காட்டி சத்தம் போட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி ஜீவிதாவை கீழே தள்ளி விட்டு காலால் எட்டி உதைத்து அவர் காதில் அணிந்திருந்த அரை பவுன் தங்க கம்மலை பறித்து கொண்டார்.

    வலி தாங்க முடியாமல் ஜீவிதா அலற அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது அவர்களையும் குருமூர்த்தி தாக்கினார். இதைனயடுத்து பொது மக்கள் ஒன்று சேர்ந்து குர்மூர்த்தியை மடக்கி பிடித்தனர்.

    பின்னர் குருமூர்த்தியை பெருந்துறை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர். இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து குருமூர்த்தியை கைது செய்தனர். 

    • அந்தியூர் நோக்கி வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக கார்த்தி வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
    • இந்த சம்பவம் குறித்து அந்தியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள சிந்தகவுண்டம்பாளையம் அடுத்த காட்டுபாளையம் ஏரி தோட்டத்தை சேர்ந்தவர் சொக்கப்பன். இவரது மகன் கார்த்தி ( 19). டிப்ளமோ படித்துள்ளார்.

    இந்த நிலையில் கார்த்தி சம்பவத்தன்று அந்தியூர் அருகே உள்ள பாட்டப்பன் கோவிலுக்கு செல்வதற்காக மோட்டார்சைக்கிளில் சின்னபருவாச்சியில் அந்தியூர்-பவானி ரோட்டை கடக்க முயன்றார்.

    அப்போது அந்தியூர் நோக்கி வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக கார்த்தி வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

    இதில் படுகாயமடைந்த கார்த்தியை அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை கார்த்தி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். 

    • எலி பிடிக்க செல்வதாக கூறி விட்டு கழிவுநீர் கால்வாய் பகுதிக்கு சென்ற ஆறுமுகம் குடிபோதையில் இருந்ததால் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து இறந்தார்.
    • சென்னிமலை போலீசார் ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை டவுன் அம்மாபாளையம் அன்பு நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (33). இவர் மீன்பிடித்தல், எலி பிடித்தல் போன்ற வேலைகள் செய்து வந்தார்.

    இவரது மனைவி செல்வி. ஆறுமுகத்திற்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று இரவு ஆறுமுகம் தனது மனைவி செல்வியிடம் எலி பிடிக்க செல்வதாக கூறி விட்டு சென்னிமலையில் உள்ள காட்டூர் வழியாக செல்லும் கழிவுநீர் கால்வாய் பகுதிக்கு சென்றுள்ளார்.

    அப்போது ஆறுமுகம் குடிபோதையில் இருந்ததால் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து இறந்தார்.

    இது குறித்து ஆறுமுகத்தின் மனைவி செல்வி கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னிமலையில் குட்டையில் மீன் பிடிக்க சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலியானார்.
    • நண்பர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர் ஆனால், முடியவில்லை.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள வாய்ப்பாடி அருகிலுள்ள கொளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மனைவி மல்லிகா. இவர்களது இளைய மகன் அஜய் (18). இவர் கொளத்துப்பாளையத்தில் உள்ள தனது சித்தப்பா வீட்டில் தங்கியுள்ளார்.

    இந்நிலையில் நேற்று அஜய் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து வாய்ப்பாடி அருகிலுள்ள குட்டையில் மீன் பிடிக்க சென்றுள்ளார். அஜய்க்கு நீச்சல் தெரியாது.

    இவர்கள் குட்டையில் மீன் பிடித்துகொ ண்டிருந்தபோது அஜய் எதிர்பாராதவிதமாக திடீரென தண்ணீரில் மூழ்கி விட்டார்.

    உடனே நண்பர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால், முடியவில்லை.

    உடனே இதுகுறித்து சென்னிமலை போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து தேடியபோதும் காப்பாற்ற முடியாமல் அஜயை பிணமாக மாலையில் மீட்டனர். பின்னர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.

    ×