குட்டையில் மீன் பிடிக்க சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலி

சென்னிமலையில் குட்டையில் மீன் பிடிக்க சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலியானார்.நண்பர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர் ஆனால், முடியவில்லை.
குட்டையில் மீன் பிடிக்க சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலி
Published on

சென்னிமலை:

சென்னிமலை அடுத்துள்ள வாய்ப்பாடி அருகிலுள்ள கொளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மனைவி மல்லிகா. இவர்களது இளைய மகன் அஜய் (18). இவர் கொளத்துப்பாளையத்தில் உள்ள தனது சித்தப்பா வீட்டில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று அஜய் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து வாய்ப்பாடி அருகிலுள்ள குட்டையில் மீன் பிடிக்க சென்றுள்ளார். அஜய்க்கு நீச்சல் தெரியாது.

இவர்கள் குட்டையில் மீன் பிடித்துகொ ண்டிருந்தபோது அஜய் எதிர்பாராதவிதமாக திடீரென தண்ணீரில் மூழ்கி விட்டார்.

உடனே நண்பர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால், முடியவில்லை.

உடனே இதுகுறித்து சென்னிமலை போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து தேடியபோதும் காப்பாற்ற முடியாமல் அஜயை பிணமாக மாலையில் மீட்டனர். பின்னர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com