அன்னூர் அருகே குட்டைக்குள் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த வாலிபர்

குட்டைக்குள் 30 வயது மதிக்க தக்க வாலிபர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். வாலிபர் மது போதையில் குட்டைக்குள் தவறி விழுந்தது தெரிய வந்தது.
அன்னூர் அருகே குட்டைக்குள் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த வாலிபர்
Published on

கோவை,

கோவை மாவட்டம் அன்னூர்- ஒதிமலை ரோட்டில் தண்ணீர் இல்லாத குட்டை உள்ளது. இந்த குட்டைக்குள் 30 வயது மதிக்க தக்க வாலிபர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக பொதுமக்கள் இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை ஆய்வு செய்தனர். அப்போது அவர் இறந்த 4 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதால் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. பின்னர் போலீசார் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அன்னூர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் வாலிபர் மது போதையில் குட்டைக்குள் தவறி விழுந்தது தெரிய வந்தது. போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து இறந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com