மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி

அந்தியூர் நோக்கி வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக கார்த்தி வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இந்த சம்பவம் குறித்து அந்தியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி
Published on

அந்தியூர்:

அந்தியூர் அருகே உள்ள சிந்தகவுண்டம்பாளையம் அடுத்த காட்டுபாளையம் ஏரி தோட்டத்தை சேர்ந்தவர் சொக்கப்பன். இவரது மகன் கார்த்தி ( 19). டிப்ளமோ படித்துள்ளார்.

இந்த நிலையில் கார்த்தி சம்பவத்தன்று அந்தியூர் அருகே உள்ள பாட்டப்பன் கோவிலுக்கு செல்வதற்காக மோட்டார்சைக்கிளில் சின்னபருவாச்சியில் அந்தியூர்-பவானி ரோட்டை கடக்க முயன்றார்.

அப்போது அந்தியூர் நோக்கி வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக கார்த்தி வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த கார்த்தியை அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை கார்த்தி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com