search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5 wild elephants"

    • வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறை அறிவுறுத்தி உள்ளனர்.
    • வனவிலங்குகள் தண்ணீர் தேடி இடம் பெயர்ந்து வருகின்றன.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் குட்டியுடன் 5 காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளார்கள்.

    சமவெளி பகுதிகளில் தற்போது மழை இல்லாமல் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் குடிநீருக்கு தட்டுபாடு ஏற்படும் நிலை இருந்து வருகிறது. இதனை சமாளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வறட்சி வனப்பகுதியை விட்டு வைக்காததால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி இடம் பெயர்ந்து வருகின்றன.

    மேட்டுப்பாளையம், காரமடை உள்ளிட்ட மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக நீலகிரி மாவட்ட வன எல்லைக்கு படையெடுக்க தொடங்கிய உள்ளன. இவைகள் மேட்டுப்பாளையம், குன்னூர் சாலை ஓரத்தில் உள்ள வனப்பகுதி வழியாக இடம்பெயர்ந்து வருகின்றன.

    இவ்வாறு இடம்பெயர்ந்த குட்டியுடன் கூடிய 5 காட்டு யானைகள் குன்னூர் அருகே உள்ள காட்டேரி பகுதியில் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் அருகில் உள்ள தோட்டத்தில் நடவு செய்யப்பட்டு இருந்த முட்டைகோஸ்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்துயது. இதனை விரட்டும் கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:- வனப்பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக தண்ணீர் மற்றும் உணவு தேடி வனவிலங்குகள் அடிக்கடி இடம்பெயர்ந்து வருகின்றன. தற்போது குன்னூர் அருகே உள்ள காட்டேரி பகுதியில் 5 யானைகள் முகாமிட்டு உள்ளது. அந்த யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணி நடந்து வருகிறது. எனவே இரவு நேரத்தில் ஒற்றையடி பாதையில் பொதுமக்கள் யாரும் நடந்து செல்ல வேண்டாம். மேலும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • காட்டுயானைகள் கட்டாஞ்சி மலை அடிவாரத்தில் உள்ள கருப்பராயன் கோயில் சுற்றுச்சுவரை உடைத்து உள்ளே நுழைந்தது.
    • கோவில் வளாகத்தில் இருந்து பொருட்களை சூறையாடியது.

    மேட்டுப்பாளைம்,

    மேட்டுப்பாளையம் அருகே மருதூர் ஊராட்சிக்குட்பட்ட சின்னட்டியூர், கட்டாஞ்சி மலை உள்ளிட்ட பகுதிகள் உள்ளது. இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    இந்தநிலையில் வனத்தில் இருந்து உணவு, குடிநீர் தேடி கரடி, காட்டுப்பன்றி, சிறுத்தை, காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு, விளை நிலங்களுக்குள் நுழைந்து பொதுமக்களையும் விவசாயிகளையும் அச்சுறுத்தி வருகின்றன.

    இந்தநிலையில் வனத்தை விட்டு வெளியேறிய 5 காட்டுயானைகள் கட்டாஞ்சி மலை அடிவாரத்தில் உள்ள கருப்பராயன் கோயில் சுற்றுச்சுவரை உடைத்து உள்ளே நுழைந்தது. அப்போது கோவில் வளாகத்தில் இருந்த வாழை மரங்களை சேதப்படுத்தியதுடன், கோவில் வளாகத்தில் இருந்து பொருட்களை சூறையாடியது.

    அதன்பின் அருகிலுள்ள சின்னட்டியூர் கிராமத்தில் ராமசாமி என்பவரது தோட்டத்தில் நுழைந்தது. அப்போது அங்கிருந்த தோட்டத்து வீட்டில் வைத்திருந்த மளிகை பொருட்களை எடுக்க வீட்டின் ஜன்னலை உடைத்தது.

    அப்போது சத்தம் கேட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்கள் எழுந்து மற்றொரு அறைக்கு சென்றனர். அதன்பின் உணவு பொருட்களை எடுத்து ருசித்த காட்டுயானைகள் அங்கிருந்த வனத்திற்குள் சென்றது.

    இதையடுத்து காரமடை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் ஆய்வு செய்தனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதாக உறுதி அளித்தனர். 

    • வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 5 காட்டு யானைகள் பவானிசாகர் அணையின் கரையை யொட்டி உள்ள பகுதியில் முகமிட்டுள்ளன.
    • காட்டு யானைகள் அணையில் கரைப்பகுதியில் முகாமிட்டு உள்ளதை கண்ட பொது பணித்துறை ஊழியர்கள் அச்சமடை ந்துள்ளனர்.

    ஈரோடு:

    பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியையொட்டி பவானிசாகர் மற்றும் விளாமுண்டி வனப்பகுதி அமைந்துள்ளது. வனப்பகுதி–யில் வசிக்கும் காட்டு யானைகள் குடிநீர் தேடி பவானிசாகர் அணை பகுதிக்கு வந்து செல்வது தொடர்கதையாக இருந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று மாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 5 காட்டு யானைகள் பவானி சாகர் அணையின் கரையை யொட்டி உள்ள பகுதியில் முகமிட்டுள்ளன. கரைப்ப குதியில் உள்ள தீவனங்களை உட்கொண்ட காட்டு யானைகள் ஜாலியாக விளையாடி மகிழ்ந்தன.

    காட்டு யானைகள் அணையில் கரைப்பகுதியில் முகாமிட்டு உள்ளதை கண்ட பொது பணித்துறை ஊழியர்கள் அச்சமடை ந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    பவானிசாகர் அணை–யின் கரையில் நடமாடும் காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள முட்புதற் காட்டில் இரவு நேரத்தில் முகாமிடுவதால் பவானிசாகர் அணை மற்றும் கரை பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை மேய்ச்சலில் ஈடுபடுவோர் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என பொது ப்பணித்துறையினர் மற்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் கரைப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதியில் விரட்ட வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    ×