search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையம் அருகே மளிகை பொருட்களை ருசி பார்த்த 5 காட்டு யானைகள்
    X

    மேட்டுப்பாளையம் அருகே மளிகை பொருட்களை ருசி பார்த்த 5 காட்டு யானைகள்

    • காட்டுயானைகள் கட்டாஞ்சி மலை அடிவாரத்தில் உள்ள கருப்பராயன் கோயில் சுற்றுச்சுவரை உடைத்து உள்ளே நுழைந்தது.
    • கோவில் வளாகத்தில் இருந்து பொருட்களை சூறையாடியது.

    மேட்டுப்பாளைம்,

    மேட்டுப்பாளையம் அருகே மருதூர் ஊராட்சிக்குட்பட்ட சின்னட்டியூர், கட்டாஞ்சி மலை உள்ளிட்ட பகுதிகள் உள்ளது. இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    இந்தநிலையில் வனத்தில் இருந்து உணவு, குடிநீர் தேடி கரடி, காட்டுப்பன்றி, சிறுத்தை, காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு, விளை நிலங்களுக்குள் நுழைந்து பொதுமக்களையும் விவசாயிகளையும் அச்சுறுத்தி வருகின்றன.

    இந்தநிலையில் வனத்தை விட்டு வெளியேறிய 5 காட்டுயானைகள் கட்டாஞ்சி மலை அடிவாரத்தில் உள்ள கருப்பராயன் கோயில் சுற்றுச்சுவரை உடைத்து உள்ளே நுழைந்தது. அப்போது கோவில் வளாகத்தில் இருந்த வாழை மரங்களை சேதப்படுத்தியதுடன், கோவில் வளாகத்தில் இருந்து பொருட்களை சூறையாடியது.

    அதன்பின் அருகிலுள்ள சின்னட்டியூர் கிராமத்தில் ராமசாமி என்பவரது தோட்டத்தில் நுழைந்தது. அப்போது அங்கிருந்த தோட்டத்து வீட்டில் வைத்திருந்த மளிகை பொருட்களை எடுக்க வீட்டின் ஜன்னலை உடைத்தது.

    அப்போது சத்தம் கேட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்கள் எழுந்து மற்றொரு அறைக்கு சென்றனர். அதன்பின் உணவு பொருட்களை எடுத்து ருசித்த காட்டுயானைகள் அங்கிருந்த வனத்திற்குள் சென்றது.

    இதையடுத்து காரமடை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் ஆய்வு செய்தனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதாக உறுதி அளித்தனர்.

    Next Story
    ×