என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இணைய வழி கல்வி குறித்து"

    • இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு வருகை புரிந்து கற்றல் செயல்பாடுகளில் ஈடுபடுவதாகவும் தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.
    • 'புன்னகை திட்டம்' மூலம் இணைய வழியில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் வழங்குவது குறித்த தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடைபெற்றது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒன்றிய மலைப்பகுதி பள்ளிகளில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவின் அடிப்படையில் 'புன்னகை திட்டம்' மூலம் இணைய வழியில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் வழங்குவது குறித்த தலைமை ஆசிரியர்கள் கூட்டம் ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன் தலைமையில் அந்தியூர் வட்டார வள மையத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மலைப் பள்ளியான ஜிடி.ஆர்.எம்.எஸ்.கத்திரிமலைப் பள்ளியில் நடைமுறையில் உள்ள புன்னகை திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியரால் விளக்க–ப்பட்டது.

    இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு வருகை புரிந்து கற்றல் செயல்பாடுகளில் ஈடுபடுவதாகவும் தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.

    எனவே முதல் கட்டமாக இத்திட்டத்தினை பர்கூர் கிழக்கு மலையில் உள்ள நடுநிலைப் பள்ளிகள் மடம் பெஜிலிட்டி, எப்பத்தாம் பாளையம் மற்றும் தொடக்கநிலைப் பள்ளிகள் கல்வாரை, தேவர்மலை ஆகிய பள்ளிகளில் நடைமுறைப்படுத்துவது குறித்து முதன்மை கல்வி அலுவலர் ஆலோசனை வழங்கினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர் ராமசாமி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ச.வேல்முருகன், மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் மோகன் குமார், வட்டார கல்வி அலுவலர் முருகன், வட்டாரவள மையம் மேற்பார்வையாளர் லிங்கப்பன் அந்தியூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பானுமதி மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.

    ×