என் மலர்
ஈரோடு
- கொலை செய்யப்பட்ட சரஸ்வதிக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளது.
- தோட்டத்து வீட்டில் வசித்துவந்த மூதாட்டி கே.மேட்டுபாளையம் நடுவீதியில் எப்படி அரிவாளால் வெட்டப்பட்டு கிடந்தார் என்றும் போலீசார் விசாரணை.
கோபி
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கே.மேட்டுபாளையம் என்ற பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி சரஸ்வதி (85).இவர்களுக்கு சுகுமார் என்ற மகனும், ராதா என்ற மகளும் உள்ளனர்.
சரஸ்வதியின் கணவர் ராமசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகன் சுகுமார் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.
தற்போது இவர் சென்னையில் வசித்து வருகிறார். இவர்களது மகள் ராதாவை கோபிசெட்டிபாளைம் பகுதியில் உள்ள டாக்டர் நித்யானந்தம் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். '
மகன், மகள், திருமணமாகி தனித்தனியாக வசித்து வருவதால் மூதாட்டி சரஸ்வதி மட்டும் கே. மேட்டுபாளையத்தில் உள்ள தனது தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 5.30 மணிஅளவில் மூதாட்டி சரஸ்வதி கே. மேட்டுபாளையம் நடுவீதியில் உடலில் அரிவாளால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்.
இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதுகுறித்து கோபி செட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடி கொண்டு இருந்த மூதாட்டி சரஸ்வதியை மீட்டு கோபி செட்டிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த சரஸ்வதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இதையடுத்து போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
சம்பவ இடத்துக்கு துப்பறியும் மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. மேலும் கை ரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
கொலை செய்யப்பட்ட சரஸ்வதிக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளது. மேலும் அவர் தனியாக வசித்து வருவதை நோட்டமிட்டு யாரோ சிலர் சொத்தை அபகரிக்கும் முயற்சியில் கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் தோட்டத்து வீட்டில் வசித்துவந்த மூதாட்டி கே.மேட்டுபாளையம் நடுவீதியில் எப்படி அரிவாளால் வெட்டப்பட்டு கிடந்தார் என்றும் போலீசார் தீவிரவிசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கோபி செட்டிபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பிரசவத்துக்கு 7 நாட்களே உள்ள நிலையில் நிறைமாத கர்ப்பிணி மற்றும் அவரது வயிற்றில் இருந்த குழந்தை இறந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- மலையம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி 1 வருடமே ஆவதால் இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெறுகிறது.
கொடுமுடி:
ஈரோடு மாவட்டம், வெள்ளோட்டாம்பரப்பு பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (60). இவரது மகள் சத்யா (25). பட்டதாரியான இவருக்கும், சிவகிரி அருகே உள்ள சுள்ளிபரப்பை சேர்ந்த குணசேகரன் என்பவரின் மகன் சஞ்சய் அருள் என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் சத்யா கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து கடந்த 3 மாதத்துக்கு முன்பு சத்யாவுக்கு வளைகாப்பு நடத்தி அவரது பெற்றோர் தங்களது வீட்டுக்கு அழைத்து சென்றனர். சஞ்சய் அருள் அவ்வப்போது தனது மாமனார் வீட்டுக்கு சென்று மனைவியை பார்த்து வந்துள்ளார். சத்யா பிரசவத்துக்கு இன்னும் 7 நாட்களே இருந்தது.
இந்நிலையில் சத்யாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்றும், அதற்காக கார் எடுத்து கொண்டு வருமாறும் சத்யாவின் தந்தை மருமகன் சஞ்சய் அருளுக்கு நேற்று போன் செய்துள்ளார். அப்போது தனக்கு உடல் நிலை சரியில்லை என்றும் நாளை மருத்துவமனைக்கு செல்லலாம் என்றும் சஞ்சய் அருள் கூறியுள்ளார்.
இதனால் கோபம் அடைந்த சத்யா வீட்டின் படுக்கையறைக்குள் சென்று கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டுள்ளார். கோபம் ஏற்படும் போதெல்லாம் சத்யா இதுபோல் அறைக்குள் சென்று தாழிட்டு கொண்டு பின்னர் ஒரு மணி நேரம் கழித்து அவராகவே வெளியில் வந்து விடுவது வழக்கம்.
அதனால் இப்போதும் சத்யா அவ்வாறு ஒரு மணி நேரம் கழித்து வெளியில் வந்துவிடுவார் என நினைத்து அவரது பெற்றோர்கள் தங்களது வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் வெகு நேரமாகியும் சத்யா வெளியே வராததால் அவரது தாயார் ஜன்னல் வழியாக பார்த்துள்ளார்.
அப்போது மின் விசிறி மாட்டும் கொக்கியில் சேலையால் தூக்கிட்ட நிலையில் சத்யா தொங்கியுள்ளார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து சத்யாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே சத்யா இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார். மேலும் சத்யா வயிற்றில் இருந்த குழந்தையை பரிசோதித்த போது குழந்தையும் இறந்தது தெரியவந்தது.
இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி 1 வருடமே ஆவதால் இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெறுகிறது.
பிரசவத்துக்கு 7 நாட்களே உள்ள நிலையில் நிறைமாத கர்ப்பிணி மற்றும் அவரது வயிற்றில் இருந்த குழந்தை இறந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- கோபியில உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- இதில் மக்கும் கழிவுகளை கையாளும் முறை குறித்த தொழில்நுட்ப வழிகாட்டுதல் கையேடு வெளியிடப்பட்டது.
கோபி:
கோபியில உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நகர் மன்ற தலைவர் என். ஆர்.நாகராஜ் தலைமை தாங்கினார்.ஆணையாளர் பிரேம் ஆனந்த் முன்னிலை வகித்தார்.
திருப்பூர் பாதுகாப்பு இயக்க நிறுவனர் மற்றும் செயலாளர் டாக்டர். கே வீரபத்மன் அவர்களால் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நகரில் உள்ள வணிக நிறுவனங்களைச் சேர்ந்த பிரமுகர்கள், மருத்துவமனை நிர்வாகத்தினர், ஓட்டல் உரிமையாளர்கள், லாட்ஜ் உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எரியும் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு மாற்றாக கிழங்கு மாவு மற்றும் கரும்பு சக்கை மூலம் தயாரிக்கப்பட்ட டம்ளர்கள், தட்டுகள், ஸ்பூன் மற்றும் பைகள் காட்சிப்படுத்தபட்டது.
இதில் மக்கும் கழிவுகளை கையாளும் முறை குறித்த தொழில்நுட்ப வழிகாட்டுதல் கையேடு வெளியிட–ப்பட்டது. இதன் முதல் பிரதியை நகர் மன்ற தலைவர் என்.ஆர்.நாகராஜ் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியின் இறுதியில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் நன்றி தெரிவித்தார்.
நகராட்சியின் சுகாதார அலுவலர் சோழராஜ், சுகாதார ஆய்வாளர் சவுந்தரராஜன், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், தூய்மை பாரத திட்ட பரப்புரையாளர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.
- மாவு பூச்சிகளை கட்டுப்படுத்திடும் அநா கைரஸ் லோப்பஸி வகை ஒட்டுண்ணிகளை வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விதம், அவற்றின் செயல்பாடுகள் பற்றி பேசினார்.
- மரவள்ளி ரகங்கள் ஒட்டுண்ணிகள் மற்றும் இரை விழுங்கிகள் கொண்ட கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது.
அம்மாபேட்டை:
பெங்களூர் தேசிய வேளாண் பூச்சி வள அமை வகம், பவானிசாகர் வேளாண் ஆராய்ச்சி நிலை யம் மற்றும் பூனாச்சி ஸ்பேக் நிறுவனம் சார்பில் மர வள்ளி மாவு பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு மற்றும் ஒரு நாள் பயிற்சி முகாம் அம்மாபேட்டை அருகே உள்ள ஸ்பேக் நிறுவன வளாகத்தில் நடந்தது.
முன்னதாக பவானிசாகர் வேளாண் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் நா.சக்திவேல் வர வேற்று பேசினார். தேசிய வேளாண் பூச்சிவள அமை வக இயக்குனர் எஸ்.என்.சுசில் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பயிர் பாதுகாப்பு இயக்குனர் எம்.சாந்தி முன்னிலை வகித்தார்.
முகாமில் பெங்களூர் தேசிய ஆராய்ச்சி மைய தலைவர் சைலஷா கலந்து கொண்டு ஆப்பிரிக்கன் வகை மாவு பூச்சிகளை கட்டுப்படுத்திடும் அநா கைரஸ் லோப்பஸி வகை ஒட்டுண்ணிகளை வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விதம், அவற்றின் செயல்பாடுகள் பற்றி பேசினார்.
பயிர் பாதுகாப்பு மைய இயக்குனர் எம்.சாந்தி பேசும் போது, மரவள்ளி பயிரின் முக்கியத்துவம் மாவு பூச்சிகளின் தாக்குதல், அவற்றின் சேதம் மற்றும் வருவாய் இழப்பு குறித்து விவசாயிகளுக்கு எடுத்து உரைத்தார்.
ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சி.சின்னசாமி, தோட்டக் கலைத்துறை துணை இயக்குனர் பி.மரகத மணி, பூச்சியியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் எஸ்.வி.கிருஷ்ண மூர்த்தி மற்றும் ஸ்பேக் நிறுவன முதன்மை செயல் பாட்டு அலுவலர் வெற்றி வேல் ஆகியோர் கலந்து கொண்டு உழவு சார்ந்த கருத்துக்களை கூறினர்.
பெங்களூர் தேசிய வேளாண் ஆராய்ச்சி மைய விஞ்ஞானி எம்.மோகன் தமிழ்நாட்டில் மரவள்ளி மாவு பூச்சிகளின் சேதம் மகசூல் இழப்பு மற்றும் அவற்றுக்கான இயற்கை எதிரிகளை பயன்படுத்தும் சாத்திய கூறுகள் குறித்து எடுத்துரைத்தார்.
விஞ்ஞானி எம்.சம்பத்குமார் மரவள்ளி மாவு பூச்சிகளின் வகைகள் அவ ற்றிற்கான ஒட்டு ண்ணிகள் ஆப்பிரி க்கன் வகை மாவு பூச்சிகளை சிறந்த முறையில் கட்டுப்படு த்திடும் இறக்குமதி செய்யப்பட்ட அனாகைரஸ் லோப்பசி வகை ஒட்டுண்ணி யின் பயன்பாடு மற்றும் செயல்பாடு அவற்றினை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கும் தொழில் நுட்பங்கள் அடங்கிய கையேடு மற்றும் அனா கைரஸ் லோப்பசி வகை ஒட்டுண்ணிகள் ஆகி யவற்றை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கினார்.
முகாமில் மரவள்ளி ரகங்கள் ஒட்டுண்ணிகள் மற்றும் இரை விழுங்கிகள் கொண்ட கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது.
நிகழ்ச்சியை சுந்தரவதனா தொகுத்து வழங்கினார்.வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பூச்சியில் துறை பேராசிரியர் க.கணேசன் மற்றும் ஸ்பேக் நிறுவனத்தின் ரமேஷ் குமார் ஆகியோர் இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
முகாமில் ஈரோடு,சேலம், மற்றும் கர்நாடக மாநிலம் ஆகிய பகுதிகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் ஸ்பேக் நிறுவன துணை மேலாளர் விஸ்வ நாதன் நன்றி கூறினார்.
- ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் கொள்ளளவு 105 அடி ஆகும்.
- அணைக்கு வரும் தண்ணீரும், பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரும் ஒரே அளவில் இருப்பதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியில் நீடித்து வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் கொள்ளளவு 105 அடி ஆகும். அணையின் நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் கடந்த மாதம் 5 -ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் 2,900 கன அடியாக நீர் வரத்து சரிந்தது.
பாசனத்திற்காக கீழ் பவானி வாய்க்காலில் 2,300 கன அடி தண்ணீரும், பவானி ஆற்றில் 600 கன அடி தண்ணீரும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 3,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் தண்ணீரும், பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரும் ஒரே அளவில் இருப்பதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியில் நீடித்து வருகிறது.
- இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் தங்கராஜ் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
- பின்னர் நேற்று காலை வந்து பார்த்த போது, அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது.
பெருந்துறை:
பெருந்துறை தாலுகா கம்புளியம் பட்டி கிராம நிர்வாக அலுவலராக பணி புரிந்து வருபவர் தங்கராஜ். இவரது அலுவலகம் சரளை பஸ் நிறுத்தம் அருகே உள்ளது. கடந்த 15 ஆண்டு களாக சிமெண்ட்டு ஓடு போட்ட அறையில் அலுவலகம் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தங்க ராஜ், அவரது உதவியாளர் ஆகியோர் மாலை அலுவல கத்தை பூட்டி விட்டு சென்று விட்டனர். பின்னர் நேற்று காலை வந்து பார்த்த போது, அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது.
உள்ளே சென்று பார்த்த போது அரசால் வழங்கப்பட்ட லேப்டாப் ஒன்று, லேப்டாப் சார்ஜர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் சிலவற்றை காணவில்லை.
மேலும் இந்த அலுவலக த்தின் அருகே இயங்கி வந்த சண்முகபுரம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க அலுவலக அறையும் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அங்கு இருந்து பணம் திருட்டு போனதாக அதன் செயலாளர் செந்தில் தெரிவித்தார்.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் தங்கராஜ் பெருந்துறை போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மூன்றாவது தளத்தில் இயங்கும் ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் பணியை புறக்கணித்து கருப்பு பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- மாவட்டம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் மற்றும் 225 ஊராட்சி செயலர்களும் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தலமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலராக பணிபுரிந்த முத்தான் (45) என்பவர் நேற்று முன்தினம் அலுவலகத்தில் பணியில் இருந்தார்.
அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு தாளவாடியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சாம்ராஜ்நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்நிலையில் ஊராட்சி செயலர் முத்தான் பணி சுமை காரணமாக இறந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் இன்று பணியை புறக்கணித்து கருப்பு பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு போராட்டம் செய்தனர்.
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மூன்றாவது தளத்தில் இயங்கும் ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் பணியை புறக்கணித்து கருப்பு பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டத் துணைத் தலைவர் பாஸ்கர் பாபு, மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் ஊராட்சி செயலர் மரணத்திற்கு நீதி வேண்டும் எனவும், ஊழியர்களுக்கு பணி சுமையை ஏற்படுத்தக் கூடாது என்றும் பேசினர்.
மேலும் இறந்தவர் குடும்பத்திற்கு உடனடியாக நிதி உதவி செய்ய வேண்டும் என்றும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் எனவும் கூறினர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, சென்னிமலை, பெருந்துறை, பவானி, அம்மாபேட்டை, அந்தியூர், டி. என். பாளையம், கோபி, நம்பியூர் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி ஆகிய 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணிபுரியும் ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் இன்று பணியை புறக்கணித்து கருப்பு பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் மற்றும் 225 ஊராட்சி செயலர்களும் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- கணவன், மனைவி இருவரும், ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி பகுதியில் வாத்துக் கடை வைத்து நடத்தி வந்துள்ளனர்.
- அதில் ராஜேந்திரனுக்கு வலிப்பு நோய் உள்ளதா–கவும், வாய்க்காலில் விழுந்து வலிப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்பது தெரியவந்தது.
ஈரோடு:
தர்மபுரி மாவட்டம், நாயக்கனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (46). இவரது மனைவி ராஜேஸ்வரி (42). இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர்.
கணவன், மனைவி இருவரும், ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி பகுதியில் வாத்துக்கடை வைத்து நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் ராஜேந்திரன், கோபி, புதுக்கரைப் புதூர், தடப்பள்ளி வாய்க்கால், சங்கிலி முனியப்பன் கோயில் மதகு அருகே வாத்து மேய்த்து வரும் தனது தம்பி சரவணனிடம் வாத்து வாங்குவதற்காக நேற்று முன் தினம் மாலை சென்றார்.
இந்த நிலையில் ராஜேந்திரன் வாய்க்காலில் நேற்று காலை இறந்து கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவலின் பேரில் கோபி போலீசார் ராஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோத–னைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்ட–னர்.
அதில் ராஜேந்திரனுக்கு வலிப்பு நோய் உள்ளதாகவும், வாய்க்காலில் விழுந்து வலிப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து ராஜேந்திரன் மனைவி ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அந்தியூர்:
அந்தியூர் அத்தாணி ரோடு பகுதியில் பொரிக் கடை எதிரே கெட்டி விநாயகர் கோவில் பிரிவு உள்ளது. இந்த ரோட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ேராட்டின் குறுக்கே கழிவுநீர் வடிகால் கட்டும் பணி நடந்தது.
அந்த பணி தற்போது நிறைவு பெற்று அந்த 2 பகுதிகளிலும் திட்டுகள் அமைக்கப்பட்டது.
ஆனால் கழிவுநீர் செல்லக்கூடிய சாலை வரை அந்த தடுப்புச் சுவரை கட்ட வேண்டும் இல்லை யென்றால் பேரிகேட் வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் பக்க வாட்டில் நிலை தடுமாறி அந்த பெரிய கழிவுநீர் கால்வாயில் விழுந்து விட்டார். இரவு நேரம் என்பதால் அந்த பகுதியில் யாரும் வர வில்லை.
இதனால் அவரை மேலே தூக்கி விடுவதற்கு ஆட்கள் இல்லாமல் சிறிது நேரத்துக்கு பிறகு அவரே மேலே ஏறி சாலையில் சென்றவர்களை அழைத்தார். இதையடுத்து பொதுமக்கள் கழிவு நீர் வடிகாலில் இருந்த இருசக்கர வாகனத்தை மேலே தூக்கினர்.
இதையடுத்து அங்கு இருந்து வீடு திரும்பி னார் என்பது குறிப்பி டத்தக்கது.
எனவே இதனை கருத்தில் கொண்டு மேலும் இது போன்ற சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்க நெடுஞ் சாலை துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கேட்டு கொண்டு உள்ளனர்.
- தனது வீட்டிற்கு செல்வதற்காக ரோட்டின் இடது புறம் இருந்து வலது புறமாக ரோட்டை கடக்க முயன்றார்.
- அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
அம்மாப்பேட்டை:
அம்மாபேட்டை அருகே உள்ள நெரஞ்சிப்பேட்டை இந்திரா வீதியைச் சேர்ந்தவர் மயிலியம்மாள்(87) இவர் நேற்று மாலை சுமார் 6.30 மணி அளவில் நெரிஞ்சிப் பேட்டையில் மேட்டூர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
தனது வீட்டிற்கு செல்வதற்காக ரோட்டின் இடது புறம் இருந்து வலது புறமாக ரோட்டை கடக்க முயன்றார்.
அப்போது அம்மா–பேட்டை பகுதியில் இருந்து நெருஞ்சிப் பேட்டையை நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்பாராத விதமாக மைலியம்மாள் மீது மோதியதில் பின்னந் தலையில் பலத்த அடிபட்டது உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மேட்டூர் அரசு மருத்துவ–மனையில் சேர்த்தனர்.
சிகிச்சை பலனின்றி இரவு 8.30 மணி அளவில் உயிரிழந்தார் இதுகுறித்து மயிலியம்மாளின் மகன் ஆடலரசன் அம்மாபேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிளை நிறுத்தி போலீசார் சோதனை நடத்திய போது கர்நாடக மாநிலத்தில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரிய வந்தது.
- அவரிடமிருந்து மது பாட்டில்கள், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு:
தாளவாடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சின்னசாமி தலைமையிலான போலீசார் தாளவாடி, அண்ணா நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.
மோட்டார் சைக்கிளை நிறுத்தி போலீசார் சோதனை நடத்திய போது கர்நாடக மாநிலத்தில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் சோதனை நடத்திய போது 55 மது பாக்கெட்டுகளை போலீசார் கைப்பற்றினர்.
விசாரணையில் மதுவை கடத்தியவர் தாளவாடி பகுதியை சேர்ந்த பங்காரு (38) என தெரிய வந்தது. இது குறித்து தாளவாடி போலீசார்
வழக்கு பதிவு செய்து பங்காருவை கைது செய்தனர். அவரிடமிருந்து மது பாட்டில்கள், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
- நேற்று முன் தினம் கார்த்திகா, குழந்தையை மில்லில் உள்ள காவலாளி அறை அருகில் உள்ள அறையில் கட்டிலில் படுக்க வைத்துவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார்.
- பின்னர் மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது குழந்தை மகாஸ்ரீ தூங்கிக் கொண்டிருந்தது.
ஈரோடு:
அரியலூர் மாவட்டம், இளங்குடந்தை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகா (24). இவர் காங்கயத்தில் உள்ள ஒரு நூல் மில்லில் வேலை பார்த்து வந்தபோது விக்னேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கனீஸ் (6) என்ற மகனும், மகாஸ்ரீ (3) என்ற மகளும் உள்ளனர்.
இந்த நிலையில், கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
கார்த்திகா தனது மகளுடன் ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகே உள்ள பழைய அய்யம்பா–ளையம் பகுதியில் உள்ள நூல் மில்லில் உள்ள குடியிருப்பில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் கார்த்திகா, குழந்தையை மில்லில் உள்ள காவலாளி அறை அருகில் உள்ள அறையில் கட்டிலில் படுக்க வைத்துவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார்.
பின்னர் மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது குழந்தை மகாஸ்ரீ தூங்கிக் கொண்டிருந்தது.
இதையடுத்து கார்த்திகாவும் குழந்தை மகா ஸ்ரீ அருகிலேயே படுத்து தூங்கியுள்ளார். சிறிது நேரத்தில் காவலாளி கார்த்திகாவை அழைத்து–ள்ளார். இதையடுத்து கார்த்திகா வெளியே சென்று காவலாளியிடம் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது குழந்தை மகாஸ்ரீ அழும் சத்தம் கேட்டு உள்ளே சென்று கார்த்திகா பார்த்தார். அப்போது கட்டிலில் தூங்கிக் கொண்டி–ருந்த குழந்தை மக ஸ்ரீ கட்டில் இருந்து தவறி கீழே விழுந்து தலையில் அடிபட்டு இருப்பது தெரியவந்தது.
உடனடியாக அவரை கோபி அரசு மருத்துவ–மனையில் சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ–மனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை மகாஸ்ரீ சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.குழந்தையின் உடலைப் பார்த்து கார்த்திகா அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து வரப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






