வாய்க்காலில் விழுந்து வாத்து வியாபாரி சாவு

கணவன், மனைவி இருவரும், ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி பகுதியில் வாத்துக் கடை வைத்து நடத்தி வந்துள்ளனர். அதில் ராஜேந்திரனுக்கு வலிப்பு நோய் உள்ளதா–கவும், வாய்க்காலில் விழுந்து வலிப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்பது தெரியவந்தது.
வாய்க்காலில் விழுந்து வாத்து வியாபாரி சாவு
Published on

ஈரோடு:

தர்மபுரி மாவட்டம், நாயக்கனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (46). இவரது மனைவி ராஜேஸ்வரி (42). இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர்.

கணவன், மனைவி இருவரும், ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி பகுதியில் வாத்துக்கடை வைத்து நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் ராஜேந்திரன், கோபி, புதுக்கரைப் புதூர், தடப்பள்ளி வாய்க்கால், சங்கிலி முனியப்பன் கோயில் மதகு அருகே வாத்து மேய்த்து வரும் தனது தம்பி சரவணனிடம் வாத்து வாங்குவதற்காக நேற்று முன் தினம் மாலை சென்றார்.

இந்த நிலையில் ராஜேந்திரன் வாய்க்காலில் நேற்று காலை இறந்து கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவலின் பேரில் கோபி போலீசார் ராஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோத–னைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்ட–னர்.

அதில் ராஜேந்திரனுக்கு வலிப்பு நோய் உள்ளதாகவும், வாய்க்காலில் விழுந்து வலிப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து ராஜேந்திரன் மனைவி ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com