என் மலர்
நீங்கள் தேடியது "கட்டுப்படுத்தலாம்"
- மாவு பூச்சிகளை கட்டுப்படுத்திடும் அநா கைரஸ் லோப்பஸி வகை ஒட்டுண்ணிகளை வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விதம், அவற்றின் செயல்பாடுகள் பற்றி பேசினார்.
- மரவள்ளி ரகங்கள் ஒட்டுண்ணிகள் மற்றும் இரை விழுங்கிகள் கொண்ட கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது.
அம்மாபேட்டை:
பெங்களூர் தேசிய வேளாண் பூச்சி வள அமை வகம், பவானிசாகர் வேளாண் ஆராய்ச்சி நிலை யம் மற்றும் பூனாச்சி ஸ்பேக் நிறுவனம் சார்பில் மர வள்ளி மாவு பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு மற்றும் ஒரு நாள் பயிற்சி முகாம் அம்மாபேட்டை அருகே உள்ள ஸ்பேக் நிறுவன வளாகத்தில் நடந்தது.
முன்னதாக பவானிசாகர் வேளாண் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் நா.சக்திவேல் வர வேற்று பேசினார். தேசிய வேளாண் பூச்சிவள அமை வக இயக்குனர் எஸ்.என்.சுசில் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பயிர் பாதுகாப்பு இயக்குனர் எம்.சாந்தி முன்னிலை வகித்தார்.
முகாமில் பெங்களூர் தேசிய ஆராய்ச்சி மைய தலைவர் சைலஷா கலந்து கொண்டு ஆப்பிரிக்கன் வகை மாவு பூச்சிகளை கட்டுப்படுத்திடும் அநா கைரஸ் லோப்பஸி வகை ஒட்டுண்ணிகளை வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விதம், அவற்றின் செயல்பாடுகள் பற்றி பேசினார்.
பயிர் பாதுகாப்பு மைய இயக்குனர் எம்.சாந்தி பேசும் போது, மரவள்ளி பயிரின் முக்கியத்துவம் மாவு பூச்சிகளின் தாக்குதல், அவற்றின் சேதம் மற்றும் வருவாய் இழப்பு குறித்து விவசாயிகளுக்கு எடுத்து உரைத்தார்.
ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சி.சின்னசாமி, தோட்டக் கலைத்துறை துணை இயக்குனர் பி.மரகத மணி, பூச்சியியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் எஸ்.வி.கிருஷ்ண மூர்த்தி மற்றும் ஸ்பேக் நிறுவன முதன்மை செயல் பாட்டு அலுவலர் வெற்றி வேல் ஆகியோர் கலந்து கொண்டு உழவு சார்ந்த கருத்துக்களை கூறினர்.
பெங்களூர் தேசிய வேளாண் ஆராய்ச்சி மைய விஞ்ஞானி எம்.மோகன் தமிழ்நாட்டில் மரவள்ளி மாவு பூச்சிகளின் சேதம் மகசூல் இழப்பு மற்றும் அவற்றுக்கான இயற்கை எதிரிகளை பயன்படுத்தும் சாத்திய கூறுகள் குறித்து எடுத்துரைத்தார்.
விஞ்ஞானி எம்.சம்பத்குமார் மரவள்ளி மாவு பூச்சிகளின் வகைகள் அவ ற்றிற்கான ஒட்டு ண்ணிகள் ஆப்பிரி க்கன் வகை மாவு பூச்சிகளை சிறந்த முறையில் கட்டுப்படு த்திடும் இறக்குமதி செய்யப்பட்ட அனாகைரஸ் லோப்பசி வகை ஒட்டுண்ணி யின் பயன்பாடு மற்றும் செயல்பாடு அவற்றினை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கும் தொழில் நுட்பங்கள் அடங்கிய கையேடு மற்றும் அனா கைரஸ் லோப்பசி வகை ஒட்டுண்ணிகள் ஆகி யவற்றை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கினார்.
முகாமில் மரவள்ளி ரகங்கள் ஒட்டுண்ணிகள் மற்றும் இரை விழுங்கிகள் கொண்ட கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது.
நிகழ்ச்சியை சுந்தரவதனா தொகுத்து வழங்கினார்.வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பூச்சியில் துறை பேராசிரியர் க.கணேசன் மற்றும் ஸ்பேக் நிறுவனத்தின் ரமேஷ் குமார் ஆகியோர் இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
முகாமில் ஈரோடு,சேலம், மற்றும் கர்நாடக மாநிலம் ஆகிய பகுதிகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் ஸ்பேக் நிறுவன துணை மேலாளர் விஸ்வ நாதன் நன்றி கூறினார்.






