என் மலர்
ஈரோடு
- சம்பவத்தன்று காலை அலுவலகத்திற்கு வந்து பார்த்த போது அலுவலகத்தின் மெயின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
- பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரொக்கம் ரூ. 12 ஆயிரம் மற்றும் அலுவலக பயன்பாட்டிற்கு இருந்த கம்யூட்டர் பிரிண்டர் திருட்டு போனதும் தெரிய வந்தது.
சென்னிமலை:
சென்னிமலை அருகே காங்கேயம் ரோட்டில் உள்ளது தோப்புகாடு. இங்கு சென்னிமலை அடுத்துள்ள உப்பிலிபாளையத்தினை சேர்ந்த பழனிசாமி என்பவர் உதயமலர் கூட்டு பண்ணை உழவர் உற்பத்தி யாளர் நிறுவனத்தினை நடத்தி வருகிறார்.
100-க்கும் மேற்பட்ட விவசாயிகளை உறுப்பினராக கொண்டு பழனிசாமி தலைவராகவும், வெள்ளோடு கனகபுரத்தினை சேர்ந்த வினோத் குமார் என்பவர் செயலாளராக இருந்து நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வழக்கம் போல் வினோத்குமார் அலுவலக வேலை முடிந்து அலுவலகத்தினை பூட்டு விட்டு சென்று விட்டார். சம்பவத்தன்று காலை 10 மணிக்கு அலுவலகத்திற்கு வந்து பார்த்த போது அலுவலகத்தின் மெயின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரொக்கம் ரூ. 12 ஆயிரம் மற்றும் அலுவலக பயன்பாட்டிற்கு இருந்த கம்யூட்டர் பிரிண்டர் திருட்டு போனதும் தெரிய வந்தது.
இது குறித்து தலைவர் பழனிசாமி கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீஸ் சிறப்பு சப்–-இன்ஸ்பெக்டர் பெரியண்ணன் வழக்கு பதிவு செய்து திருடிய மர்ம நபரை தேடி வருகிறார்.
சென்னிமலை டவுன் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள், பணம் திருட்டு நடந்த அடுத்த நாளே மீண்டும் பூட்டை உடைத்து பணம் திருட்டு போன சம்பவம் சென்னிமலை பகுதி மக்களுக்கு பெரும் அச்சத்தினை ஏற்படுத்தி உள்ளது.
- தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு பட்டாசுகள் விற்பனை செய்ய தற்காலிக உரிமம் மற்றும் நிரந்தர உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
- இதில் ரசாயன பட்டாசுகள் விற்பனை செய்வதும் கண்டறியப்பட்டால் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஈரோடு, அக். 19-
தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு பட்டாசுகள் விற்பனை செய்ய தற்காலிக உரிமம் மற்றும் நிரந்தர உரிமம் கூடுதல் மாவட்ட நிர்வாக நடுவர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
பட்டாசு உரிமம் பெறப்பட்ட இடங்களில் மட்டுமே பட்டாசுகள் விற்பனை செய்யப்பட வேண்டும். பட்டாசு உரிமம் பெறப்படாமலும், தடை செய்யப்பட்ட குடிமக்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பச்சை பட்டாசுகள் (பேரியம் கலந்த) ரசாயன பட்டாசுகள் விற்பனை செய்வதும் கண்டறியப்பட்டால் வெடிபொருள் சட்டம் மற்றும் விதிகளின்படி தீவிர நடவடிக்கை மேற்கொள்ள ப்படும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
- பவானியில் 141 குடும்பத்தினர், கொடுமுடியில் 104 குடும்பத்தினர், கருங்கல்பாளையம் காவேரி பகுதியில் 17 குடும்பங்களை சேர்ந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
- வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு:
தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக மேட்டூர் அணை இந்த ஆண்டில் 2-வது முறையாக தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.
இதையடுத்து மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றுக்கு உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஈரோடு மாவட்டத்திலுள்ள காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கடந்த 16-ந் தேதி 1.15 லட்சம் கன அடி நீர் வெளி யேற்றப்பட்டது. கடந்த 17-ந் தேதி 2 லட்சம் கன அடி நீராக வெளியேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து பவானியில் 141 மேற்பட்ட வீடுகள், கொடுமுடியில் 104 வீடுகள், ஈரோடு கருங்கல் பாளையம் காவிரிக்கரை பகுதியில் உள்ள 17-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து இருந்தது.
இந்நிலையில் நேற்று காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைய தொடங்கி யதால் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவும் 1.75 லட்சம் கனஅடியாக குறைக்க ப்பட்டது.
எனினும் தொடர்ந்து காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பவானி பகுதியில் 141 குடும்பத்தினர், கொடுமுடியில் 104 குடும்பத்தினர், கருங்கல்பாளையம் காவேரி பகுதியில் 17 குடும்பங்களை சேர்ந்த 800 -க்கும் மேற்பட்ட மக்கள் 12 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 16-ந் தேதி மதியம் இந்த மக்கள் முகாமுக்கு தங்க சென்றனர். இன்றுடன் 4 -வது நாளாக முகாம்களில் தொடர்ந்து தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இன்று 4 -வது நாளாக மேட்டூர் அணையிலிருந்து ௬௫ ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
பவானியில் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வருவதால் பவானி கூடுதுறை தனி தீவாக மாறி உள்ளது. கூடுதுறையில் பரிகாரங்கள் செய்ய தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
- குத்தியாலத்தூர் காப்புகாட்டுப் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
- அப்பொழுது அங்கு சந்தன மரம் வெட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது.
தாளவாடி:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கேர்மாளம் வனச்சரகத்திற்கு உட்பட்ட குத்தியாலத்தூர் காப்புகாட்டுப் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்பொழுது அங்கு சந்தன மரம் வெட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது. சந்தன மரம் வெட்டிய நபர்கள் யார் என வனச்சரகர் தினேஷ் தலை மையில் வனத்துறையினர் ரகசிய ஆய்வில் ஈடுபட்டனர்.
இதில் கேர்மாளம் அருகே உள்ள கானாகரை கிராமத்தை சேர்ந்த ஜடைசாமி (35), முருகேஷ் (32), மகாதேவா (48) மற்றும் கர்நாடக மாநிலம் எத்தே கவுடண்தொட்டியை சேர்ந்த மாதேகவுடா (45) என 4 பேரும் சந்தன மரம் வெட்டியது தெரிய வந்தது.
அவர்களை பிடித்து விசாரணை மேற்கொ ண்டதில் 4 பேரும் சந்தன மரம் வெட்டியதை ஒப்பு க்கொண்டனர். பின்னர் ஆசனூர் மாவட்ட வன அலுவலர் தேவேந்திர குமார் மீனா உத்தரவில் 4 நபர்களுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு 40 கிலோ சந்தன கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
- பிடாரியூர் மாரியம்மன் கோவில். மாரியம்மனுக்கு ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும் .
- நாளை மஞ்சள் நீர் நிகழ்ச்சியுடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது.
சென்னிமலை:
சென்னிமலை அடுத்துள்ள முகாசி பிடாரியூரில் அமைந்துள்ளது பிடாரியூர் மாரியம்மன் கோவில். மாரியம்மனுக்கு ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும் .
இந்த ஆண்டு பொங்கல் விழா கடந்த 4-ந் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 11-ந் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. அன்று முதல் தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
மேலும் காலை பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடந்து வந்தது. கம்பத்திற்கு தினமும் பெண்கள் பயபக்தியுடன் மஞ்சள் நீர் ஊற்றியும், கம்பத்திற்கு வேப்பிலை அலங்காரம் செய்தும், மஞ்சள் பூசியும் வழிபாடு நடத்தினர்.
பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும் நேர்த்திகடன் செலுத்தி வந்தனர்.
நேற்று இரவு (செவ்வாய்க்கிழமை) மாவிளக்கு ஊர்வலமும் சிறப்பு பூஜையும் நடந்தது. இன்று புதன்கிழமை காலை பொங்கல் விழா நடந்தது.
பக்தர்கள் காலை முதல் பொங்கல் வைத்தும், ஆடு, கோழி பலிகொடுத்தும், பக்திபரவசத்துடன் மாரியம்மனை வழிபாடு செய்தனர். இரவு கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
நாளை மஞ்சள் நீர் நிகழ்ச்சியுடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை பிடாரியூர் கிராம மக்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.
- இரவு பெய்த கனமழையால் மழை வெள்ளம் கசிவுநீர் ஓடைகளில் கலந்து பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
- கொடிவேரி அணையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் பொதுபணித்து றையினர் தடை விதித்துள்ளனர்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் கீழே விழும் தண்ணீர் அருவிபோல் கொட்டுவதால் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் குளித்து விட்டு மகிழ்ச்சியாக செல்வது வழக்கம்.
இந்நிலையில் சத்தியமங்கலம், கோபி செட்டிபாளையம், நம்பியூர், அரசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இரவு பெய்த கனமழையால் மழை வெள்ளம் கசிவுநீர் ஓடைகளில் கலந்து பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
இதனால் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்ப ட்டுள்ள கொடிவேரி அணையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் பொதுபணித்து றையினர் தடை விதித்துள்ளனர்.
மேலும் பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 100 கன அடி திறக்கப்பட்டுள்ள நிலையில் மழை வெள்ளம் வினாடிக்கு 4200 கன அடி மேலாக பெருக்கெடுத்து ஓடுவதால் பாலத்தில் நின்று செல்பி எடுக்கவும், ஆற்றில் இறங்கவும் தடை என அறிவிக்கப்பட்டுள்ளனர்.
- வருகிற 25-ந் தேதி மாலை 5.23 மணிக்கு சூரியகிரகணம் தொடங்கி 6.23 மணிக்கு முடிவடைவதால் சென்னிமலை முருகன் கோவில் சுவாமி மூலஸ்தான நடை சாத்தப்படும்.
- இந்நேரத்தில் மக்கள் அர்ச்சனை செய்யவோ, தரிசிக்கவோ அனுமதி இல்லை.
சென்னிமலை:
வருகிற அக்டோபர் மாதம் 25-ந் தேதி அன்று மாலை 5.23 மணிக்கு சூரியகிரகணம் தொடங்கி 6.23 மணிக்கு முடிவடைவதால் காலசந்தி பூஜை, உச்சிகாலம், சாயரட்சை பூஜை நடைபெற்று பகல் 2.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை சென்னிமலை முருகன் கோவில் சுவாமி மூலஸ்தான கதவுகள் அடைக்கப்பட்டு நடை சாத்தப்படும்.
இந்நேரத்தில் மக்கள் அர்ச்சனை செய்யவோ, தரிசிக்கவோ அனுமதி இல்லை. இரவு 7:35 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்ப–டுவர். அன்று மட்டும் இரவு வேங்கை மர ரதம் உலா நடைபெறாது என கோவில் நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- கடந்த சில நாட்களாக மீண்டும் நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.
- பவானி ஆற்றுக்கரையோரப் பகுதியில் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்த 2-வது பெரிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாக கடந்த 17-ந் தேதி மாலை பவானிசாகர் அணை மீண்டும் 102 அடியை எட்டியது. அணையின் விதிப்படி 102 அடி எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி கீழ் மதகு வழியாக அணைக்கு வரும் நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் பவானி ஆற்றுக்கரையோரப் பகுதியில் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5,100 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து அப்படியே 5, 100 கன அடி நீர் உபரிநீராக பவானி ஆற்றுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பவானி சாகர், தொட்டம்பாளையம் , நடுப்பாளையம், சத்தியமங்கலம், அரியப்பம்பாளையம், சதுமுகை, பவானிசாகர் கூடுத்துறை வரை உள்ள ஆற்று கரையோர பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கக்கூடும் என்பதால் நீர் அதிக அளவில் திறக்கக்கூடும். இதனால் பவானி ஆற்று கரையோர பகுதி வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரிக்கும் என்பதால் பொதுப்பணித்துறையினர் வருவாய் துறையினர் உஷார்படுத்தப்பட்டு நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
- சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி தண்டபாணி சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டு பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார்.
- அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக தண்டபாணி ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்திருந்தார்.
ஈரோடு:
ஈரோடு முத்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 32 ). இவர் ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அப்போது அந்த ஓட்டலுக்கு 16 வயது சிறுமி அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமியிடம் தண்டபாணி பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு நெருங்கி பழகி உள்ளார்.
இந்நிலையில் அந்த சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி தண்டபாணி சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டு பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். பின்னர் அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக தண்டபாணி ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்திருந்தார். சிறுமியின் வயதில் சந்தேகம் அடைந்த டாக்டர்கள் இது குறித்து அந்த சிறுமிடம் கேட்டபோது நடந்த சம்பவத்தை அவர் கூறினார்.
இது குறித்து ஈரோடு அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் தண்டபாணியை பிடித்து விசாரித்த போது சிறுமிக்கு 16 வயதே ஆவது தெரியவந்தது.
இதை அடுத்து தண்டபாணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
- தாளவாடியில் இருந்து கோடிபுரம் கிராமத்துக்கு இயக்கப்படும் அரசு பஸ் இயக்கப்படாததால் பள்ளி மாணவ, மாணவிகள் பஸ் நிலையத்திலேயே 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்துக் கிடந்தனர்.
- தங்கள் குழந்தைகள் வீட்டுக்கு வராததால் பெற்றோர்கள் அலறி அடித்து கொண்டு தாளவாடி பேருந்து நிலையம் வந்தனர்.
தாளவாடி:
தாளவாடி அடுத்த தலமலை, கோடிபுரம், நெய்தாளபுரம், முதியனூர், தொட்டாபுரம், சிக்கள்ளி, இக்களூர் போன்ற மலை கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் சுமார் 150-க்கும் மேற்ப ட்டோர் தாளவாடியில் உள்ள அரசு மேல்நிலை ப்பள்ளியில் படித்து வருகின்றனர்.
இவர்கள் தினந்தோறும் அரசு பஸ்சில் பள்ளிக்கு வந்து செல்வது வழக்கம்.காலையில் 7 மணிக்கும், 8.30 மணிக்கும் இயக்க ப்படும் பஸ் மூலமாக பள்ளிக்கு வருகின்றனர். பின்னர் மாலையில் 6 மணிக்கு இயக்கப்படும் அரசு பஸ் மூலம் தங்கள் கிராமத்துக்கு செல்கின்றனர்.
இந்த நிலையில் வழக்கம் போல தாளவாடியில் இருந்து கோடிபுரம் கிராமத்துக்கு இயக்கப்படும் அரசு பஸ் இயக்கப்ப டாததால் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பஸ் நிலையத்திலேயே 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்துக் கிடந்தனர்.
இந்நிலையில் தங்கள் குழந்தைகள் வீட்டுக்கு வராததால் பெற்றோர்கள் அலறி அடித்து கொண்டு தாளவாடி பேருந்து நிலையம் வந்தனர்.
பின்னர் விசாரித்த போது பஸ் இயக்கப்படாதது தெரிய வந்தது. இது பற்றி போக்குவரத்து துறை அதிகாரியிடம் கேட்டபோது பொது மக்களுக்கு சரிவர பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் வழக்கம் போல் 6 மணிக்கு இயக்கப்படும் அரசு பஸ் 7 மணி அளவில் தாளவாடியில் இருந்து கோடிபுரம் கிராமத்திற்கு இயக்கப்பட்டது.
இது பற்றி பள்ளி மாணவ, மாணவிகள் கூறும்போது,
நாங்கள் மலை கிராமத்தில் இருந்து இங்கு வந்து படித்து செல்கிறோம். காலையில் 7 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி வந்தால் மாலை 7 மணி அல்லது 8 மணிக்கு தான் வீட்டிற்கு செல்ல முடிகிறது. வீட்டுக்கு சென்று படிக்கக்கூட முடிவதில்லை. கடந்த சில நாட்களாக 6 மணிக்கு இயக்கப்படும் அரசு பஸ் சரிவர இயக்கப்ப டுவதில்லை. இதனால் நாங்கள் வீட்டிற்கு செல்ல இரவு 9 மணி வரை ஆகிறது.
அடர்ந்த வனப்பகுதியில் வனவிலங்கு நடமாட்டம் உள்ள பகுதியில் தங்கள் வீடுகளுக்கு செல்ல அச்சமாக உள்ளதாகவும் தற்போது மழை காலம் என்பதாலும் அச்சத்துடனே பள்ளிக்கு சென்று வருதாகவும் மாணவ, மாணவிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சரியான நேரத்துக்கு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினர்.
- தாளவாடி அடுத்த தொட்டகாஜனூர் இருந்து மெட்டல்வாடி செல்லும் சாலையில் உள்ள தரைப் பாலத்தை 3-வது நாளாக காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றது.
- இதனால் நேற்று மாலை 4 மணி முதல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
தாளவாடி:
தாளவாடிஅதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே இரவு, பகல் நேரங்களிலும் விட்டுவிட்டு பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. குளம், குட்டைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது.
இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் தாளவாடி அடுத்த திகனாரை, பனக்கள்ளி, எரகனள்ளி, கரளவாடி, சூசைபுரம் போன்ற பகுதிகளில் ஒரு மணி நேரம் கன மழை கொட்டி தீர்த்தது. இந்த கனமழையால் விவசாய நிலங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையின் போது சூறைகாற்றும் வீசியது.
இதில் திகனாரை கிராமத்தை சேர்ந்த சிதம்பரம் என்பவரின் 200 வாழைகள் காற்றில் முறிந்து சேதமானது.மேலும் தாளவாடி அடுத்த தொட்டகாஜனூர் இருந்து மெட்டல்வாடி செல்லும் சாலையில் உள்ள தரைப் பாலத்தை 3-வது நாளாக காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றது.
இதனால் நேற்று மாலை 4 மணி முதல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவருக்கு உள்ளாகினர். தொடர் மழையால் விவசாய பணிகள் முடங்கி உள்ளது.
- செட்டிபாளையம் பிரிவு என்ற பகுதியில் சென்ற போது திடீரென மொபட்டில் இருந்து நிலை தடுமாறி தம்பதியினர் ரோட்டில் கீழே விழுந்தனர்.
- அந்த வழியாக வந்த ஒரு கிரேன் வாகனம் கண் இமைக்கும் நேரத்தில் தம்பதி மீது ஏறி இறங்கியது.
ஈரோடு:
ஈரோடு மூலப்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (75). ஓய்வுபெற்ற வன ஊழியர். இவரது மனைவி பாப்பாத்தி (65). இவர்கள் 2 பேரும் இன்று காலை 9 மணி அளவில் நாதகவுண்டம்பாளையத்திற்கு உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு மொபட்டில் புறப்பட்டனர்.
அவர்கள் செட்டிபாளையம் பிரிவு என்ற பகுதியில் சென்ற போது திடீரென மொபட்டில் இருந்து நிலை தடுமாறி ரோட்டில் கீழே விழுந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு கிரேன் வாகனம் கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் மீது ஏறி இறங்கியது. இதில் சுப்பிரமணி அவரது மனைவி பாப்பாத்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். இந்த விபத்தை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் 2 பேர் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
பின்னர் கிரேன் எந்திரத்தில் சிக்கி இருந்த மொபட்டை மீட்டனர். இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து கிரேன் வாகனத்தை ஓட்டி வந்தவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் வயதான தம்பதிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.






