search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றதால் போக்குவரத்து பாதிப்பு
    X

    தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றதால் போக்குவரத்து பாதிப்பு

    • தாளவாடி அடுத்த தொட்டகாஜனூர் இருந்து மெட்டல்வாடி செல்லும் சாலையில் உள்ள தரைப் பாலத்தை 3-வது நாளாக காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றது.
    • இதனால் நேற்று மாலை 4 மணி முதல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    தாளவாடி:

    தாளவாடிஅதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே இரவு, பகல் நேரங்களிலும் விட்டுவிட்டு பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. குளம், குட்டைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது.

    இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் தாளவாடி அடுத்த திகனாரை, பனக்கள்ளி, எரகனள்ளி, கரளவாடி, சூசைபுரம் போன்ற பகுதிகளில் ஒரு மணி நேரம் கன மழை கொட்டி தீர்த்தது. இந்த கனமழையால் விவசாய நிலங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையின் போது சூறைகாற்றும் வீசியது.

    இதில் திகனாரை கிராமத்தை சேர்ந்த சிதம்பரம் என்பவரின் 200 வாழைகள் காற்றில் முறிந்து சேதமானது.மேலும் தாளவாடி அடுத்த தொட்டகாஜனூர் இருந்து மெட்டல்வாடி செல்லும் சாலையில் உள்ள தரைப் பாலத்தை 3-வது நாளாக காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றது.

    இதனால் நேற்று மாலை 4 மணி முதல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவருக்கு உள்ளாகினர். தொடர் மழையால் விவசாய பணிகள் முடங்கி உள்ளது.

    Next Story
    ×