என் மலர்tooltip icon

    ஈரோடு

    • குலவிளக்கு ஊராட்சிக்கு உட்பட்ட பாண்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 25.30 ஏக்கர் நிலம் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமானது.
    • இந்து அறநிலையத்துறை குழுவினர் சம்பந்தப்பட்ட நிலங்களை அளவிட்டு ஆய்வு செய்து அப்பகுதியில் மீட்பு பலகையினை நட்டனர்.

    கொடுமுடி:

    மொடக்குறிச்சி ஒன்றியம் குலவிளக்கு ஊராட்சிக்கு உட்பட்ட பாண்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 25.30 ஏக்கர் நிலம் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமானது.

    இதை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் பயன்படுத்தி வந்தனர். இது குறித்து பல்வேறு வழக்குகளும் நடந்து வந்தன.

    இந்நிலையில் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி, உதவி ஆணையர் அன்னக்கொடி, தாசில்தார் கவுசல்யா, ஓய்வு பெற்ற தாசில்தார்கள் பழனிசாமி, அழகு ராஜன், செயல் அலுவலர் கீதா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் சம்பந்தப்பட்ட நிலங்களை அளவிட்டு ஆய்வு செய்து அப்பகுதியில் மீட்பு பலகையினை நட்டனர்.

    அதில் குலவிளக்கு கிராமத்தில் 25.30 ஏக்கர் நிலம் பாண்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்த மானது. அந்நியர்கள் யாரும் நுழையக்கூடாது என்று பெயர் பலகை வைக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் சிவகிரி போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

    • திம்பம் மலைப்பாதையில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு கடும் பனி பொழிவு ஏற்பட்டது.
    • மலைப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள். அவர்கள் சுவட்டர் மற்றும் குல்லா அணிந்தபடி வெளியே வந்து செல்கிறார்கள்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் வனப்பகுதி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது.

    திண்டுக்கல்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையாக உள்ளதால் இந்த வழியாக பஸ், வேன், இரு சக்கர வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் என பல்வேறு வாகனங்கள் சென்று வரு கின்றன.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாளவாடி, ஆசனூர், திம்பம், பண்ணாரி மற்றும் சுற்று வட்டார வனப்பகுதி களில் பரவலாக பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் திம்பம் வனப் பகுதியில் உள்ள நீர் நிலைகள் நிரம்பியது.

    மேலும் வனப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் அருவிகள் தோன்றி தண்ணீர் கொட்டி வருகிறது.

    இதையடுத்து கடந்த 2 நாட்களாக வனப்பகுதியில் மழை பொழிவு குறைந்தது. ஆனால் தொடர்ந்து மேக மூட்டமாக காணப்பட்டு வருகிறது. இதனால் வனப்பகுதி முழுவதும் பச்சை பசேலென பனி துளிகளுடன் பசுமையாக காட்சி அளித்து வருகிறது.

    மேலும் தொடர் மழை காரணமாக தாளவாடி, திம்பம், ஆசனூர், பெஜ லெட்டி, பண்ணாரி உள்பட வனப்பகுதிகளில் கடும் பனி பொழிவு நிலவி வருகிறது. இதனால் கடும் குளிர் வாட்டி வருகிறது.

    இதையொட்டி மலைப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள். அவர்கள் சுவட்டர் மற்றும் குல்லா அணிந்தபடி வெளியே வந்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் இன்று காலை திம்பம் மலைப்பாதையில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு கடும் பனி பொழிவு ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் காலை 8 மணி வரையும் முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படியே சென்று வந்தனர்.

    இந்த நிலையில் திம்பம் மலைப்பாதையில் இன்று காலை 2 வாகனங்கள் வந்து கொண்டு இருந்தது.

    அப்போது அந்த 2 வாகனங்களும் திம்பம் மலைப்பாதை 13-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் வந்தபோது பனி பொழிவு காரணமாக எதிர்பாராத விதமாக பக்க வாட்டில் உரசி கொண்டது.

    இதனால் அந்த வாகனங்கள் தொடர்ந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் டிரைவர்கள் வாகனங்களை நடு ரோட்டில் அப்படியே நிறுத்தினர்.

    இதனால் அந்த வழியாக வந்த மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் நிறுத்தப்பட்டன. இதையொட்டி திம்பம் மலைப்பாதையில் ரோட்டோரம் கார், லாரி, சரக்கு வாகனங்கள் மற்றும் 2 சக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து நின்றன.

    இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • ஈரோடு புதுமை காலனி பகுதியில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சூரம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ஷேக் தாவூத்தை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு புதுமை காலனி பகுதியில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சூரம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் புதுமை காலனியில் உள்ள வீடுகளில் சோதனை செய்த போது ஒரு வீட்டில் 10 கிராம் அளவு கொண்ட 164 கஞ்சா பாக்கெட்டுகள் இருப்பதை கண்டு பிடித்தனர். மொத்தம் 1¼ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ராஜா என்கிற ஷேக் தாவூத் (28) என்பவரிடம் விசாரணை நடத்திய போது அவர் தான் வீட்டில் கஞ்சாவை பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ஷேக் தாவூத்தை கைது செய்தனர். அவரிடமிருந்து கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அவர் யாரிடம் இருந்து கஞ்சா வாங்கினார். இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசார ணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னிமலை மலை கோவிலுக்கு செல்ல முடியாத அளவு மலை பாதை பனி பொழிவால் மூடி இருந்தது.
    • மக்கள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டு சென்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை பகுதியில் இன்று காலை வானம் மேக மூட்டத்துடன் பனி பொழிவும் காணப்பட்டதால் மலை கோவிலுக்கு வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்தனர்.

    சென்னிமலை பகுதியில் கடந்த வாரத்தில் இடைவிடாது 2 நாட்கள் மழை அதிக அளவில் பெய்யதது. நேற்று இரவு முதல் வானம் மேகமூட்டத்துடனும், திடீர் திடீர் என சாரல் மழையும் பெய்தது.

    இதனையடுத்து இன்று அதிகாலை முதல் வானம் மேக மூட்டத்துடன காணப்பட்டது, பனி பொழிவும் அதிகமாக இருந்தது. சென்னிமலை மலை கோவிலுக்கு செல்ல முடியாத அளவு மலை பாதை பனி பொழிவால் மூடி இருந்தது.

    காலை 8 மணிக்கு கூட மக்கள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டு சென்றனர்.

    • ரஞ்சன்மாலிக் பனியம்பள்ளியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குபோட்டு தற்ெகாலை செய்து கொண்டார்.
    • இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஒடிசா மாநிலம் பார்டர்க் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சன் மாலிக் (25). இவர் கடந்த சில மாதங்களாக ஈரோடு மாவட்டம் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்நிலையில் சம்பவத் தன்று ரஞ்சன்மாலிக் பனியம்பள்ளியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குபோட்டு தற்ெகாலை செய்து கொண்டார்.

    அவரது நண்பர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ரஞ்சன் மாலிக்கை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் ஏற்கனவே ரஞ்சன் மாலிக் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ரஞ்சன் மாலிக் எதற்காக தற்கொலை செய்து கொ ண்டார் என தெரியவில்லை.

    திருமணம் ஆகாத ஏக்கத்தால் தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது வேறு என்ன காரணம் என்பது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெற்பயிரில் உற்பத்தியை அதிகரிக்க செம்மை நெல் சாகுபடி எனப்படும் ஒற்றை நாற்று நெல் நடவு முறை மூலம் கூடுதல் மகசூல் பெறலாம்.
    • இவை தொழில் நுட்ப ரீதியாக நிருபித்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி, காளிங்கராயன், தடப்பள்ளி – அரக்கன் கோட்டை மற்றும் மேட்டூர் மேற்கு கரை பாசனங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு முழு அளவில் சாகுபடி பணிகள் நடக்கிறது. குறிப்பாக அதிக அளவில் நெல் பயிர் நடவுப்பணி நடக்கிறது.

    மாவட்டத்தில் கடந்தாண்டு உணவு தானிய சாகுபடி பரப்பு இலக்காக 63,800 ஹெக்டேர் உணவு தானிய உற்பத்தி இலக்கு 3.1 லட்சம் டன் என நிர்ணயித்தனர். இந்த இலக்கை எட்டிய நிலையில் செம்பை நெல் சாகுபடி எனும் ஒற்றை நெல் சாகுபடி மூலம் கூடுதல் மகசூலை பெற்றனர்.

    இதுகுறித்து ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி கூறியதாவது:

    நெற்பயிரில் உற்பத்தியை அதிகரிக்க செம்மை நெல் சாகுபடி எனப்படும் ஒற்றை நாற்று நெல் நடவு முறை மூலம் கூடுதல் மகசூல் பெறலாம். இவை தொழில் நுட்ப ரீதியாக நிருபித்துள்ளனர்.

    இந்நுட்பம் மூலம் 3 கிலோ விதை பயன்படுத்தி ஒரு சென்ட் நாற்றங்காலில் நாற்று உற்பத்தி செய்து 15 நாள் வயதுடைய செழிப்பான ஒற்றை நாற்றை போதிய இடை வெளி விட்டு நடலாம்.

    இதன் மூலம் விவசாயிகள் 20 சதவீதம் வரை கூடுதல் மகசூல் பெறலாம். கூடுதல் விலை கிடைக்கும் வாய்ப்பும் ஏற்படும். எனவே விவசாயிகள் ஒற்றை நெல் சாகுபடி தொழில் நுட்பத்தை கடைபிடிக்க வலியுறுத்துகிறோம்.

    அதனையே வேளாண் துறையும் வலியுறுத்துகிறது. ஈரோடு மாவட்ட விவசாயிகள் ஒற்றை நெல் சாகுபடி தொடர்பான விழிப்புணர்வு ஏற்கனவே உள்ளதால் கூடுதல் மகசூல் பெறும் நோக்கில் இம்முறையை கையாள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இடுப்பு வலியால் மன வேதனையில் இருந்தவர் சம்பவத்தன்று திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
    • இது குறித்து வரப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த கேடரை, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாப்பாத்தி (60). 4 வருடமாக இடுப்பு வலிக்கு மாத்திரை சாப்பிட்டு வந்தார். எனினும் இடுப்பு வலி குணமாகவில்லை.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆடு மேய்க்கும் போது வலது கணுக்காலில் மேல் காயம் ஏற்பட்டு வலியால் அவதி அடைந்து வந்தார். ஏற்கனவே இடுப்பு வலியால் மன வேதனையில் இருந்தவர் சம்பவத்தன்று திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக பாப்பாத்தியை சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பாப்பாத்தி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வரப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
    • பவானிசாகர் அணையில் இருந்து 2,800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    பவானிசாகர் அணை யின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக பவானிசாகர் அணை 104 அடியில் நீடித்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.29 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 600 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து பவானி ஆற்றின் வழியாக உபரிநீராக 1,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    இதேபோல் கீழ்பவானி வாய்க்காலுக்கு 1,800 கன அடி தண்ணீர் என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

    • சோளகர் சமூகத்தை சேர்ந்த மலைவாழ் மக்களான பூமிகா-வெள்ளையன் என்பவரது வீட்டில் மதிய உணவாக களி உணவை அண்ணாமலை விரும்பி சாப்பிட்டார்.
    • மலைவாழ் மக்களுடன் செல்போனில் புகைப்படம் எடுத்து கொண்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி பேசினார். பின்னர் ஆர்ப்பாட்டத்தை முடித்து கொண்டு அண்ணாமலை அங்கிருந்து மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான பர்கூர் தாமரைகரை பகுதிக்கு சென்றார்.

    அப்போது மலைவாழ் மக்களில் உள்ள சோளகர், லிங்காயத்து, இந்து மலையாளி என்ற சமூக மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் இந்து மலையாளி என்ற சமூகத்தை சேர்ந்த மலைவாழ் மக்களுக்கு மற்ற மாவட்டத்தில் கொடுப்பது போல சாதி சான்றிதழ் கொடுப்பது இல்லை என்று கூறி அந்த சமூகத்தை சேர்ந்த ஒருவர் அண்ணாமலையின் காலில் விழுந்தார்.

    பதிலுக்கு அவரது காலில் திரும்ப விழுந்த அண்ணாமலை கண்ணீர் விட்டு கோரிக்கை விடுத்தவரை தனது தோளில் சாய்த்து ஆறுதல் கூறி, வரும் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும் போது உங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.

    இதனை தொடர்ந்து சோளகர் சமூகத்தை சேர்ந்த மலைவாழ் மக்களான பூமிகா-வெள்ளையன் என்பவரது வீட்டில் மதிய உணவாக களி உணவு விரும்பி சாப்பிட்டார். பின்பு அங்கு உள்ள மலைவாழ் மக்களுடன் செல்போனில் புகைப்படம் எடுத்து கொண்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.

    • வீட்டில் பணம் வைத்து சூதாடியவர்களை போலீசார் விசாரித்துக் கொண்டிருந்தனர்.
    • வீட்டில் திடீரென லைட்டை அணைத்து விட்டனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள புது கொத்துக்காடு என்ற பகுதியில் ஒரு வீட்டில் பணம் வைத்து சூதாடுவதாக கடத்தூர் சப்- இன்ஸ்பெக்டர் பெருமாளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீஸ்காரர்கள் அன்பழகன், வேல்முருகன் ஆகியோர் திடீர் சோதனை செய்தனர்.

    அப்பொழுது அந்த வீட்டில் பணம் வைத்து சூதாடியவர்களை போலீசார் விசாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டில் திடீரென லைட்டை அணைத்து விட்டனர். பின்னர் வீட்டின் வெளியே கூடியிருந்தவர்கள் திடீரென போலீசாரை சூழ்ந்து கொண்டு தகாத வார்த்தைகளால் பேசியும், சூதாட்டத்திற்கு பயன்படுத்திய சீட்டுக்கட்டு மற்றும் அதில் இருந்த பணத்தை பிடுங்கிக் கொண்டு தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இது தொடர்பாக கடத்தூர் போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் (28), துரைசாமி (54), குமார் (27), சுரேஷ் (30), பிரபு (28), ராமசாமி (38), சந்திரசேகர் (32), பழனிச்சாமி (54), ஆறுமுகம் (50), வெள்ளியங்கிரி (40), முருகன் (35), பழனிச்சாமி (35), வசால் (30), ராதா (35), பொன்னுச்சாமி (40) ஆகிய 15 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரை சூதாட்ட கும்பல் சுற்றி வளைத்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஒருவர் நைசாக குணசேகரன் பையில் வைத்திருந்த ரூ.16,750 பணத்தை திருடி அருகில் இருந்த மற்றொரு நபரிடம் கொடுத்தார்.
    • இது குறித்து குணசேகரன் சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    ஈரோடு:

    ஈரோடு கொல்லம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (57). ஈரோடு ரெயில் நிலையத்தில் ஆட்டோ ஸ்டேண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மாலை ஆட்டோ ஸ்டாண்ட் அருகே குணசேகரன் புதிய ஆட்டோ வாங்குவதற்காக ரூ.16,750 வைத்திருந்தார். பின்னர் அந்த பகுதியில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவர் அருகே 2 வாலிபர்கள் வந்து அமர்ந்தனர்.

    அதில் ஒருவர் நைசாக குணசேகரன் பையில் வைத்திருந்த ரூ.16,750 பணத்தை திருடி அருகில் இருந்த மற்றொரு நபரிடம் கொடுத்தார்.

    திடீரென எழுந்து இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குணசேகரன் திருடன்.. திருடன் என அலறினார். அதற்குள் அந்த 2 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்து குணசேகரன் சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த திருட்டு தொடர்பாக கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்த நாகராஜ் (35), வெட்டுக்காட்டுவலசு, சங்கரன் மாரியம்மன் கோவில் பின்புறம் பகுதியை சேர்ந்த குமார் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து குணசேகரிடம் இருந்து திருடிய பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் நாகராஜ் மீது ஏற்கனவே கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் 4 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    பின்னர் நாகராஜ், குமார் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். 

    • பழைய குற்றவாளியை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
    • கைது செய்யப்பட்ட குமரேசன், தமிழ்ச்செல்வன் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு இந்திரா நகரில் ஜெயின் சமூகத்தினர் வழிபடும் ஜெயின் கோவில் உள்ளது. கடந்த 11-ந் தேதி இரவு பூசாரி சுப்தேவ் என்பவர் கோவிலை பூட்டி சென்றார்.

    பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு மூலவர் மகாவீர் சிலையின் கழுத்தில் கிடந்த 8 பவுன் தங்க சங்கிலி மற்றும் கோவிலில் வைக்கப் பட்டிருந்த உண்டியலை மர்ம நபர்கள் திருடி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தபோது கோவிலுக்குள் மர்ம நபர்கள் நுழைந்து உண்டி யலையும், நகையையும் திருடி செல்வது பதிவாகி இருந்தது.

    இந்நிலையில் மணிக்கூண்டு பகுதியில் டவுன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகம் படும்படி ஒரு வாலிபர் வந்தார். அவரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் கிருஷ்ணசெட்டி தெருவை சேர்ந்த குமரேசன் (27) என்பதும், ஜெயின் கோவில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் குமரேசன் கொடுத்த தகவலின் பேரில் திருட்டில் தொடர்பு உடைய வீரப்பன்சத்திரம் கொத்து க்காரர் தோட்டத்தை சேர்ந்த தமிழ்செல்வன் (27) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

    இந்த திருட்டு வழக்கில் கடலூரை சேர்ந்த பழைய குற்றவாளி ஒருவர் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. அவரிடம் தான் திருட்டு போன நகை உள்ளது. அந்த பழைய குற்றவாளியை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இதற்கிடையே கைது செய்யப்பட்ட குமரேசன், தமிழ்ச்செல்வன் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

    ×