மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை

இடுப்பு வலியால் மன வேதனையில் இருந்தவர் சம்பவத்தன்று திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.இது குறித்து வரப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த கேடரை, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாப்பாத்தி (60). 4 வருடமாக இடுப்பு வலிக்கு மாத்திரை சாப்பிட்டு வந்தார். எனினும் இடுப்பு வலி குணமாகவில்லை.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆடு மேய்க்கும் போது வலது கணுக்காலில் மேல் காயம் ஏற்பட்டு வலியால் அவதி அடைந்து வந்தார். ஏற்கனவே இடுப்பு வலியால் மன வேதனையில் இருந்தவர் சம்பவத்தன்று திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக பாப்பாத்தியை சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பாப்பாத்தி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து வரப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com