என் மலர்
நீங்கள் தேடியது "மலை கோவிலுக்கு"
- சென்னிமலை மலை கோவிலுக்கு செல்ல முடியாத அளவு மலை பாதை பனி பொழிவால் மூடி இருந்தது.
- மக்கள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டு சென்றனர்.
சென்னிமலை:
சென்னிமலை பகுதியில் இன்று காலை வானம் மேக மூட்டத்துடன் பனி பொழிவும் காணப்பட்டதால் மலை கோவிலுக்கு வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்தனர்.
சென்னிமலை பகுதியில் கடந்த வாரத்தில் இடைவிடாது 2 நாட்கள் மழை அதிக அளவில் பெய்யதது. நேற்று இரவு முதல் வானம் மேகமூட்டத்துடனும், திடீர் திடீர் என சாரல் மழையும் பெய்தது.
இதனையடுத்து இன்று அதிகாலை முதல் வானம் மேக மூட்டத்துடன காணப்பட்டது, பனி பொழிவும் அதிகமாக இருந்தது. சென்னிமலை மலை கோவிலுக்கு செல்ல முடியாத அளவு மலை பாதை பனி பொழிவால் மூடி இருந்தது.
காலை 8 மணிக்கு கூட மக்கள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டு சென்றனர்.






