என் மலர்tooltip icon

    ஈரோடு

    • மர்ம நபர்கள் சிலர் வீட்டின்பூட்டைஉடைத்து உள்ளே நுழைந்து உள்ளனர்.
    • இது குறித்து கொடுமுடி போலீசார் விசாரணை நடத்தினர்.

    கொடுமுடி:

    ஈேராடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள ஆவுடையார் பாறை ஊராட்சி மன்ற தலைவராக உள்ளவர் வசந்தி தனபால்.இவருக்கு நாகம நாயக்கன் பாளையத்தில் 2 வீடுகள் உள்ளன.

    இதில் நேற்று ஒரு வீட்டை பூட்டி விட்டுஅதே பகுதியில் உள்ள மற்றொருவீட்டிற்கு சென்று இரவில் தங்கினர். இந்த நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் இவர்களது வீட்டின்பூட்டைஉடைத்து உள்ளே நுழைந்து உள்ளனர்.

    இன்று காலை வீட்டின் பூட்டி உடைக்கப்பட்டது பற்றி தெரியவந்ததும் வசந்தி தனபால் மற்றும் அவரது கணவர் சென்று பார்த்தனர். மேலும் இது குறித்து கொடுமுடி போலீசுக்கும்தகவல் கொடுக்கப்பட்டது.

    அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.அப்போது கொள்ளை முயற்சி நடந்து இருப்பது தெரியவந்தது.

    • சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியல் படி தொடர்ந்து 3-வது நாளாக யாருக்கும் புதிதாக பாதிப்பு ஏற்படவில்லை.
    • மாவட்டத்தில் 9 பேர் மட்டுமே கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா தினசரி பாதிப்பு அதிக அளவில் இருந்தது. பின்னர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவ டிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாக கொரோனா தாக்கம் குறைய தொடங்கியது.

    கடந்த சில மாதங்களாகவே கொரோனா தினசரி தாக்கம் குறைய தொடங்கியது. தொடர்ந்து தினசரி பாதிப்பு சரிந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2 வாரமாக கொரோனா தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கில் பதிவாகி வருகிறது.

    இந்நிலையில் கடந்த மாதம் 30-ந் தேதி சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா ஏற்படவில்லை.

    இந்நிலையில் நேற்று முன்தினமும் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்ட பட்டியல் படி தொடர்ந்து 3-வது நாளாக யாருக்கும் புதிதாக பாதிப்பு ஏற்படவில்லை.

    மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 646 ஆக உள்ளது.

    கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 4 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1லட்சத்து 35 ஆயிரத்து 903 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை மாவட்டத்தில் 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

    தற்போது மாவட்டத்தில் 9 பேர் மட்டுமே கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கொரோனா இல்லாத மாவட்டமாக ஈரோடு மாற உள்ளது.

    • நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
    • காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.23 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாகவே நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.23 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,358 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 2,200 கன அடி, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 400 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 2,700 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. 

    • போலீசார் கோபிசெட்டி பாளையம் கச்சேரி மேடு பகுதியில் உள்ள ஒரு கடையில் சோதனை செய்து விசாரணை நடத்தினர்.
    • அந்த கடையில் பரமசிவம் என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை ெபாருட்கள் விற்பனைக்கு வைத்து இருந்தது தெரிய வந்தது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் கோபிசெட்டி பாளையம் கச்சேரி மேடு பகுதியில் உள்ள ஒரு கடையில் சோதனை செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அந்த கடையில் பரமசிவம் (68) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை ெபாருட்கள் விற்பனைக்கு வைத்து இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து கடையில் இருந்த 5 பாக்கெட் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் வழக்கு பதிவு செய்து கடை உரிமையாளர் பரமசிவத்தை கைது செய்தார்.

    • ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் 19 லட்சத்து 45 ஆயிரத்து 856 வாக்காளர்கள் உள்ளனர்.
    • முகாமில் மொத்தம் 57,637 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பவானி, அந்தியூர், கோபி, பவானிசாகர், பெருந்துறை ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

    இதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் 19 லட்சத்து 45 ஆயிரத்து 856 வாக்காளர்கள் உள்ளனர். வரும் ஜனவரி 5-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

    இதனையடுத்து புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், திருத்தம் போன்ற பணிகள் ஆன்லைனிலும், அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகங்கள், தேர்தல் பிரிவு அலுவலக–ங்களில் நடந்து வருகிறது.

    இது தவிர கடந்த 12 மற்றும் 13-ந் தேதிகளிலும், இதுபோல் 26 மற்றும் 27-ந் தேதி ஆகிய 4 நாட்கள் மாவட்டத்தில் உள்ள 2,222 வாக்குச்சாவடி மையங்க ளில் வாக்காளர் சேர்தல், நீக்கல் முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 43,958 விண்ணப்பங்கள் நேரில் பெறப்பட்டதாகவும், ஆன்லைன் மூலம் 13,679 விண்ணப்பங்கள் என மொத்தம் 57,637 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

    இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் கள விசாரணை செய்யப்பட்டு தகுதியான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். இதையடுத்து வரும் ஜனவரி மாதம் 5-ந் தேதி வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலில் புதிதாக விண்ணப்பித்த வாக்காளர்கள் சேர்க்கப்படுவார்கள்.

    இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் 19 லட்சத்து 45 ஆயிரத்து 856 வாக்காளர்களில் இதுவரை 11 லட்சத்து 72 ஆயிரத்து 779 வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்து ள்ளனர் என்றனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 187 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் குற்ற தடுப்பு, துப்பு துலக்குதல், குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கைது செய்தல், சட்டம் ஒழுங்கு நிலை நாட்டும் நடவடி க்கையில் ஈடுபடுவோரை ஊக்கப்படுத்தும் வகையில் நற்சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கூட்டரங்கில் நடைபெற்றது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 3 டி.எஸ்.பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என 184 பேர் மற்றும் ஊர்க்காவல் படையை சேர்ந்த 3 பேருக்கு என மொத்தம் 187 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

    • பிரிதா கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க ப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
    • செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள மொடச்சூர் பகுதியை சேர்ந்தவர் ஜெய ராஜ். இவரது மகள் பிரிதா (வயது 22). இவர் பெங்களூருவில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இதை யடுத்து கடந்த 28-ந் தேதி ஜெயராஜ் பெங்களூருவில் இருந்து அவரது மகள் பிரிதாவை கோபிசெட்டிபாளையம் அழைத்து வந்தார்.

    தொடர்ந்து பிரிதா கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க ப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    மேல் சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரிதாவை கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • பவானிசாகர் கோடேபாளையம் பகுதியில் பிரசித்தி பெற்ற மலையாள பகவதி அம்மன் கோவில் உள்ளது.
    • கோவிலில் இருந்த உண்டியல் பெயர்த்து எடுக்கப்பட்டு கோவிலுக்கு பின்னால் கிடப்பது தெரியவந்தது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் கோடேபாளையம் பகுதியில் பிரசித்தி பெற்ற மலையாள பகவதி அம்மன் கோவில் உள்ளது.

    சம்பவத்தன்று இரவு கோவிலில் பூைஜகள் முடிந்ததும் பூசாரி வழக்கம்போல் கோவிலை பூட்டி சென்றார். நள்ளிரவில் கோவிலுக்கு வந்த மர்ம நபர்கள் கோவில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் அவர்கள் கோவிலில் இருந்த உண்டியலை பெயர்த்து எடுத்தனர்.

    தொடர்ந்து அவர்கள் உண்டியலை கோவிலுக்கு பின் பகுதிக்கு கொண்டு சென்று உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    காலையில் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த ெபாதுமக்கள் இது குறித்து பவானிசாகர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது கோவிலில் இருந்த உண்டியல் பெயர்த்து எடுக்கப்பட்டு கோவிலுக்கு பின்னால் கிடப்பது தெரியவந்தது. மேலும் உண்டியலில் சுமார் ரு. 5 ஆயிரம் பணம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இது தொடர்பாக பவானிசாகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • சதீஷ் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அஜித்குமார் மோட்டார்சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதி விபத்தை ஏற்படுத்தியது.
    • விபத்தில் பலத்த காயம் அடைந்த அஜித்குமார் பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

    பவானி, டிச. 2-

    ஆப்பக்கூடல் காமராஜர் காலனி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (22). இவர் இரவு தனது மோட்டார் சைக்கிளில் பவானி-ஆப்பக்கூடல் மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது திப்பிச்செட்டிப்பாளையம் பகுதியில் சென்ற போது எடப்பாடியை சேர்ந்த சதீஷ் தனது மோட்டார் சைக்கிளில் சின்னமணி (60), ராஜா (37), பூபதி (27) ஆகிய 3 பேரை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த போது அஜித் குமார் மோட்டார்சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதி விபத்தை ஏற்படுத்தியது.

    இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த அஜித்குமார் பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

    மேலும், சதீஷ் பவானி தனியார் அரசு மருத்துவ மனையிலும், சின்னமணி, ராஜா, பூபதி ஆகிய 3 பேர் பவானி அரசு மருத்துவ மனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    • இன்று 4-வது நாளாக ஒப்பந்த ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
    • ஒப்பந்த ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்கள் தங்களுக்கு மாவட்டம் நிர்வாகம் அறிவித்த ஊதியமான நாள் ஒன்றுக்கு ரூ.707 வீதம் மாதம் ரூ.21,260 வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவமனையில் உடை மாற்ற, ஓய்வெடுக்க, உணவு சாப்பிட ஓய்வு அறை ஒதுக்கிட வேண்டும்.

    ஒப்பந்த முறைப்படி 3 ஷிப்ட் வழங்க வேண்டும். வேலை நேர பணி அட்டை வழங்க வேண்டும். வார விடுமுறை சுழற்சி முறையில் வழங்க வேண்டும். தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களில் பணியாற்றுபவர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

    இதில் உடன்பாடு ஏற்படாததால் ஒப்பந்த பணியாளர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றக் கோரி பணியை புறக்கணித்து கடந்த மாதம் 29-ந் தேதி இரவு முதல் திடீரென அரசு மருத்துவமனை வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மேலும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தங்களது போராட்டம் தொடரும் என அறிவித்திருந்தனர். இதன்படி அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் ஈரோடு அரசு மருத்துவமனையில் ஆட்கள் பற்றா குறை ஏற்பட்டு சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு பணிகள் பாதிக்க ப்படும் சூழ்நிலை உருவாகி யுள்ளது.

    இந்நிலையில் நேற்று இரவு தாசில்தார் பாலசுப்பிரமணியம், ஆர்.எம்.ஓ. கவிதா, அரசு மருத்துவமனை சூப்பிரண்டு வெங்கடேஷ், டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் ஆகியோர் ஒப்பந்த ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

    இதையடுத்து ஒப்பந்த பணியாளர்கள் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. இன்று 4-வது நாளாக ஒப்பந்த ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    அரசு மருத்துவமனை வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று ஒப்பந்த ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றனர்.

    • கொடுமுடி வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2 கிராம பஞ்சாயத்துக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • தொழில் முனைவோராக விருப்பமுள்ள வேளாண் பட்டதாரிகள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெற கொடுமுடி வேளாண்மை உதவி இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    ஈரோடு:

    கொடுமுடி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் கடந்த நிதியாண்டில் இருந்து கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்பட்டு வருகிறது.

    நடப்பு ஆண்டில் கொடுமுடி வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2 கிராம பஞ்சாயத்துக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    தேர்வு செய்யப்பட்டுள்ள கிராம பஞ்சாயத்துகளை சேர்ந்த வேளாண் பட்டதாரிகளை தொழில் முனைவோராக்கும் நோக்க த்தில் ஒரு பயனாளிக்கு அதிக பட்சமாக ரூ.1 லட்சம் வீதம் 2 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சம் மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

    இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் குறைந்த பட்சம் இளநிலை வேளாண்மை, இளநிலை தோட்டக்கலை அல்லது இளநிலை வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு படித்து இருக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் துறையில் பணியாற்று பவராக இருக்க கூடாது.

    கணிணி மற்றும் இதர வேளாண் செயலிகளில் பணியாற்ற தெரிந்தவராக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு பட்டதாரி மட்டுமே இத்திட்டத்தில் பயன் பெற முடியும்.

    முன் வைக்கும் திட்டத்தின் உரிமையானது ஒற்றை உரிமையாள ருடையதாக இருக்க வேண்டும். நிலம் மற்றும் தளவாடங்க ளுக்கான செலவு முன் வைக்கும் திட்ட மதிப்பில் சேர்க்க இயலாது. 21 வயது முதல் 40 வயதுடைய வர்களாக இருக்க வேண்டும்.

    இத்திட்டத்தின் கீழ் அக்ரி கிளினிக், இயற்கை உரம் தயாரித்தல், மரக்கன்று உற்பத்தி செய்தல், நாற்றங்கால் பண்ணை அமைத்தல், பசுமை குடில் அமைத்தல், உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனை நிலையம் அமைத்தல், வேளாண் மருந்தகம் தொடங்குதல், நுண்ணீர் பாசன சேவை மையம் தொடங்குதல், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை விளை பொருட்களை மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்ப டுத்துதல் போன்ற வேளாண் சார்ந்த தொழில்களை தொடங்க நிதி உதவி அளிக்கப்பட உள்ளது.

    தொழில் முனைவோராக விருப்பமுள்ள வேளாண் பட்டதாரிகள் உரிய விண்ணப்பத்துடன் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றி தழ், பட்டதாரி சான்றிதழ், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து விரிவான திட்ட அறிக்கை யினை இம்மாதத்தி ற்குள் திண்டல் வித்யா நகரில் உள்ள ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.

    தொழில் முனைவோராக விருப்பமுள்ள வேளாண் பட்டதாரிகள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெற கொடுமுடி வேளாண்மை உதவி இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • ஈரோடு மாநகராட்சி எல்லை பகுதி தேவை அடிப்படையில் வரிவுபடுத்தப்படும்.
    • புதிதாக ஈரோடு பகுதியில் துணை நகரம் அமைக்கலாமா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    ஈரோடு:

    ஈரோட்டில் பன்னீர்செல்வம் பார்க்க அருகே கனி மார்க்கெட் (ஜவுளி சந்தை) ஒருங்கிணைந்த வணிக வளாகத்தை இன்று அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார்.

    பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகும். எனவே எனக்கும் அந்த விருப்பம் உள்ளது.

    ஈரோடு மாநகராட்சியில் புறநகர் பஸ்கள் வந்து செல்ல சோலார் பகுதியில் தற்காலிக பஸ் நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து வரும் பஸ்கள் அங்கு நிற்கும். இதேபோன்று சத்தி, கோபி பகுதியில் இருந்து வரும் பஸ்கள் நிற்க கனி ராவுத்தர் குளம் அருகே மற்றொரு பஸ் நிலையம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்காக இடம் கையகப்படுத்த பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. அரசின் நிதி ஒதுக்கீடு கிடைத்ததும் இடம் வாங்கப்பட்டு அங்கும் பஸ் நிலையம் அமைக்கப்படும். எனவே ஒரே சமயத்தில் 2 தற்காலிக பஸ் நிலையங்கள் செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டு வருகிறது. பின்னர் அவைகள் நிரந்தர பஸ் நிலைய கட்டிட வசதியுடன் அமையும்.

    அத்திக்கடவு -அவினாசி திட்ட பணிகளை வரும் ஜனவரி 15-ந்தேதிக்குள் முடிக்க அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

    சென்னை கிளாம்பாக்கம் பகுதியில் மிகப்பெரிய புறநகர் பஸ் நிலையம் அமைக்கப்படுகிறது. அப்பணிகளை வரும் ஜனவரி 15-ந் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை பெருநகரம் அச்சரப்பாக்கம் மற்றும் அரக்கோணம் வரையும் விரிவுபடுத்தப்படுகிறது. இதனால் மக்களுக்கு பல அடிப்படை வசதிகள் உருவாகும். வளர்ச்சி மேலும் துரிதப்படும்.

    எனவே தற்போது சென்னையில் உள்ள சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் அலுவலகங்கள் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளிலும் புதிதாக உருவாக்கப்படும்.

    ஈரோடு மாநகராட்சி எல்லை பகுதி தேவை அடிப்படையில் வரிவுபடுத்தப்படும். புதிதாக ஈரோடு பகுதியில் துணை நகரம் அமைக்கலாமா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். ஆனால் ஏற்கனவே முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரியபகுதியில் பல மனைகள் விற்பனையாகாமல் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×