என் மலர்
நீங்கள் தேடியது "outstanding performance"
- ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 187 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் குற்ற தடுப்பு, துப்பு துலக்குதல், குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கைது செய்தல், சட்டம் ஒழுங்கு நிலை நாட்டும் நடவடி க்கையில் ஈடுபடுவோரை ஊக்கப்படுத்தும் வகையில் நற்சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கூட்டரங்கில் நடைபெற்றது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 3 டி.எஸ்.பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என 184 பேர் மற்றும் ஊர்க்காவல் படையை சேர்ந்த 3 பேருக்கு என மொத்தம் 187 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.






