என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்"

    • இன்று 4-வது நாளாக ஒப்பந்த ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
    • ஒப்பந்த ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்கள் தங்களுக்கு மாவட்டம் நிர்வாகம் அறிவித்த ஊதியமான நாள் ஒன்றுக்கு ரூ.707 வீதம் மாதம் ரூ.21,260 வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவமனையில் உடை மாற்ற, ஓய்வெடுக்க, உணவு சாப்பிட ஓய்வு அறை ஒதுக்கிட வேண்டும்.

    ஒப்பந்த முறைப்படி 3 ஷிப்ட் வழங்க வேண்டும். வேலை நேர பணி அட்டை வழங்க வேண்டும். வார விடுமுறை சுழற்சி முறையில் வழங்க வேண்டும். தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களில் பணியாற்றுபவர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

    இதில் உடன்பாடு ஏற்படாததால் ஒப்பந்த பணியாளர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றக் கோரி பணியை புறக்கணித்து கடந்த மாதம் 29-ந் தேதி இரவு முதல் திடீரென அரசு மருத்துவமனை வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மேலும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தங்களது போராட்டம் தொடரும் என அறிவித்திருந்தனர். இதன்படி அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் ஈரோடு அரசு மருத்துவமனையில் ஆட்கள் பற்றா குறை ஏற்பட்டு சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு பணிகள் பாதிக்க ப்படும் சூழ்நிலை உருவாகி யுள்ளது.

    இந்நிலையில் நேற்று இரவு தாசில்தார் பாலசுப்பிரமணியம், ஆர்.எம்.ஓ. கவிதா, அரசு மருத்துவமனை சூப்பிரண்டு வெங்கடேஷ், டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் ஆகியோர் ஒப்பந்த ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

    இதையடுத்து ஒப்பந்த பணியாளர்கள் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. இன்று 4-வது நாளாக ஒப்பந்த ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    அரசு மருத்துவமனை வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று ஒப்பந்த ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றனர்.

    ×