search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "engineer dies"

    • பிரிதா கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க ப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
    • செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள மொடச்சூர் பகுதியை சேர்ந்தவர் ஜெய ராஜ். இவரது மகள் பிரிதா (வயது 22). இவர் பெங்களூருவில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இதை யடுத்து கடந்த 28-ந் தேதி ஜெயராஜ் பெங்களூருவில் இருந்து அவரது மகள் பிரிதாவை கோபிசெட்டிபாளையம் அழைத்து வந்தார்.

    தொடர்ந்து பிரிதா கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க ப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    மேல் சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரிதாவை கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவான்மியூர் கடற்கரையில் மனைவியின் காதலனால் கத்தியால் குத்தப்பட்ட என்ஜினீயர் பரிதாபமாக உயிரிந்தார். இதையடுத்து மனைவி, காதலன் மீது போலீசார் கொலை வழக்கை பதிவு செய்துள்ளனர்.
    சோழிங்கநல்லூர்:

    பல்லாவரத்தைச் சேர்ந்தவர் கதிரவன் (வயது30). கம்ப்யூட்டர் என்ஜினீயர். இவரது மனைவி அனிதா (25). இவர்களுக்கு கடந்த மாதம் திருமணம் நடந்தது.

    கடந்த 13-ந்தேதி மாலை இருவரும் திருவான்மியூர் கடற்கரைக்கு வந்தனர். அப்போது மர்ம வாலிபர் கதிரவனை கத்தியால் குத்தி விட்டு அனிதா அணிந்து இருந்த நகையை பறித்துச் சென்றார்.

    போலீசார் விசாரணையில் அனிதாவே தனது காதலனான அந்தோணி ஜெகனை ஏவி கணவரை தாக்கியது தெரிந்தது.

    அந்தோணி ஜெகன் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். பல்கலைக்கழக விடுதியில் பதுங்கி இருந்த அந்தோணி ஜெகன் மற்றும் அனிதாவை போலீசார் கைது செய்தனர்.

    படுகாயம் அடைந்த கதிரவன் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று இரவு சிகிச்சை பலனின்றி கதிரவன் பரிதாபமாக இறந்தார்.

    அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கதிரவனின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    கதிரவன் இறந்ததையடுத்து அவரது மனைவி அனிதா, காதலன் அந்தோணி ஜெகன் ஆகியோர் மீது கொலை வழக்கு பதியப்பட்டது. 2 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    அனிதா திருமணத்திற்கு முன்பே அந்தோணி ஜெகனை காதலித்தார். பெற்றோரின் வற்புறுத்தலால் என்ஜினீயர் கதிரவனை திருமணம் செய்தார். எனினும் அவர் மீது விருப்பம் இல்லாத அனிதா காதலன் அந்தோணி ஜெகனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து விட்டார்.

    இதற்காக திருவான்மியூர் கடற்கரைக்கு கணவரை அழைத்து வந்து கண்ணை கட்டி கண்ணாம்மூச்சி ஆடி திட்டத்தை நிறைவேற்றியது விசாரணையில் தெரிய வந்தது.

    திருமணம் ஆன நாள் முதலே அனிதா, கணவர் கதிரவனை தீர்த்து கட்ட முடிவு செய்தததாக தெரிகிறது. இந்த கொலை திட்டத்துக்கு வேறு யாரேனும் உதவி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இதையடுத்து சிறையில் உள்ள அனிதாவையும், காதலன் அந்தோணி ஜெகனையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு குன்றத்தூரைச் சேர்ந்த அபிராமி கள்ளக்காதலனுக்காக 2 குழந்தைகளையும் வி‌ஷம் கொடுத்து கொன்றார். கணவரையும் வி‌ஷம் கொடுத்து கொல்ல முயன்ற சம்பவம் நடந்தது. தற்போது அனிதா, காதலனுக்காக கணவரை திட்டமிட்டு தீர்த்து கட்டி உள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருவொற்றியூரில் லாரி மோதிய விபத்தில் என்ஜினீயர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர், சாத்து மாநகரை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் மதன் (வயது 21), சமீபத்தில் என்ஜினீயரிங் படிப்பு முடித்து வேலை தேடி வந்தார்.

    இந்த நிலையில் கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து மதனுக்கு வேலைக்கான நேர்முக அழைப்பு வந்து இருந்தது. இன்று காலை அவர் நேர்முக தேர்வில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    திருவொற்றியூர் டோல்கேட் அருகே வந்த போது பின்னால் வந்த டேங்கர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மதன் பரிதாபமாக இறந்தார்.

    விபத்து நடந்ததும் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×