search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Corona decreased to 9"

    • சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியல் படி தொடர்ந்து 3-வது நாளாக யாருக்கும் புதிதாக பாதிப்பு ஏற்படவில்லை.
    • மாவட்டத்தில் 9 பேர் மட்டுமே கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா தினசரி பாதிப்பு அதிக அளவில் இருந்தது. பின்னர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவ டிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாக கொரோனா தாக்கம் குறைய தொடங்கியது.

    கடந்த சில மாதங்களாகவே கொரோனா தினசரி தாக்கம் குறைய தொடங்கியது. தொடர்ந்து தினசரி பாதிப்பு சரிந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2 வாரமாக கொரோனா தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கில் பதிவாகி வருகிறது.

    இந்நிலையில் கடந்த மாதம் 30-ந் தேதி சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா ஏற்படவில்லை.

    இந்நிலையில் நேற்று முன்தினமும் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்ட பட்டியல் படி தொடர்ந்து 3-வது நாளாக யாருக்கும் புதிதாக பாதிப்பு ஏற்படவில்லை.

    மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 646 ஆக உள்ளது.

    கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 4 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1லட்சத்து 35 ஆயிரத்து 903 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை மாவட்டத்தில் 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

    தற்போது மாவட்டத்தில் 9 பேர் மட்டுமே கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கொரோனா இல்லாத மாவட்டமாக ஈரோடு மாற உள்ளது.

    ×