என் மலர்tooltip icon

    ஈரோடு

    • சம்பவத்தன்று மாலை ஜெயலட்சுமி சோலார் புதூர் புது பஸ் நிலையம் அருகில் சாலையை கடக்க முயன்றார்.
    • அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே ஜெயலட்சுமி உயிரிழந்தார்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அருகே சோலார் புதூர் அடுத்த இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 40). கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு கண்ணன், காளிதாஸ் என 2 மகன்கள் உள்ளனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மாலை ஜெயலட்சுமி சோலார் புதூர் புது பஸ் நிலையம் அருகில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஜெயலட்சுமி உயிரிழந்தார்.

    இது குறித்து தகவலறிந்த ஜெயலட்சுமியின் உறவினர்கள் மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஜெயலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

    மேலும் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கான்கிரீட் கலவை மிஷின் என்ஜின் பகுதியில் பாப்பாயி சேலை சிக்கிக் கொண்டது
    • பாப்பாயி கலவை மிஷின் மீது மோதி சம்பவ இடத்திலேயே தலை துண்டிக்கப்பட்டு பரிதாப மாக இறந்தார்

    சிவகிரி,

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தலைய நல்லூர் காலனியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது மனைவி பாப்பாயி (வயது 62). கட்டிட கூலி தொழிலாளி. இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் சிவகிரி அருகே உள்ள ரங்க சமு த்திரம் பகுதியில் தங்கவேல் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். பாப்பாயி அங்கு வேலை செய்தார். தொடர்ந்து அவர் அங்கு கான்கிரீட் கலவை மிஷினில் ஜல்லி அள்ளி போட்டு கொண்டு இருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக கான்கிரீட் கலவை மிஷின் என்ஜின் பகுதியில் பாப்பாயி சேலை சிக்கிக் கொண்டது. இதில் பாப்பாயி கலவை மிஷின் மீது மோதி சம்பவ இடத்திலேயே தலை துண்டிக்கப்பட்டு பரிதாப மாக இறந்தார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவருடன் வேலை செய்த தொழிலாளர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து போலீசார் பாப்பாயின் உடல் பிரேத பரிசோதனை க்காக பெரு ந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

    • கீழ்பவானி வாய்க்காலில் இருந்து ஓடை வழியாக பொதுப்பணித்துறையினர் தண்ணீரை திறந்து விட்டுள்ளனர்
    • ஓடையை ஒட்டியுள்ள பகுதிகளில் நெல் பயிர்கள் மற்றும் வாழைகள் தண்ணீரில் மூழ்கியது

    சென்னிமலை,

    கீழ்பவானி வாய்க்கால் தண்ணீர் செல்லும் கடை மடை பகுதியான திருப்பூர் மாவட்டம், முத்தூர், மங்களப்பட்டி பகுதியில் பலத்த மழை பெய்ததால் அங்கு விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

    அங்கு மேலும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சென்னிமலை அருகே அய்யம்பாளையத்தில் உள்ள முதலைமடை என்னும் இடத்தில் கீழ்பவானி வாய்க்காலில் இருந்து ஓடை வழியாக பொதுப்பணித்துறையினர் தண்ணீரை திறந்து விட்டுள்ளனர்.

    ஓடையில் செல்லும் தண்ணீர் மேட்டூர், கரைப்புதூர், சரளைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 5 தரைப்பாலங்களை மூழ்கடித்தபடி செல்கிறது. இதனால் இந்த வழியே பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

    மேலும் ஓடையை ஒட்டியுள்ள பகுதிகளில் நெல் பயிர்கள் மற்றும் வாழைகள் தண்ணீரில் மூழ்கியது.

    கடைமடை பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் வடியும் வரை ஓடையில் தண்ணீர் திறந்து விடப்படும் என பொதுப்பணித்துறை ஊழியர்கள் தெரிவித்தனர்.

    • பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் இரவு கல் தூண்களில் மகா தீபம் ஏற்றப்பட்டது
    • ராஜகோபுரத்தில் 5 நிலைகளில் மகாதீபம் ஏற்றிய பிறகு ராஜகோபுரத்தின் முன் பகுதியில் சொக்கப்பனை எரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

    பவானி,

    பவானியில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் மற்றும் காசி விஸ்வநாதர் கோவில் போன்றவற்றில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    இதையொட்டி பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் இரவு சங்கமேஸ்வரர், வேதநாயகி அம்மன், மற்றும் ஆதிகேசவ பெருமாள் சன்னதி ஆகியவை முன்னுள்ள கல் தூண்களில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் ராஜகோபுரத்தில் 5 நிலைகளில் மகாதீபம் ஏற்றிய பிறகு ராஜகோபுரத்தின் முன் பகுதியில் சொக்கப்பனை எரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் ஈரோடு ஆதீனம் பாலாஜி சிவம் மற்றும் தி.மு.க. நகர செயலாளர் நாகராஜன் உள்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். சிவனடியார்கள் சிவபெருமானை பாடல் பாடி வழிபாடு மேற்கொண்டனர்.

    அதே போல் பவானி காவேரி வீதியில் அமைந்துள்ள சின்ன கோவில் என அழைக்கப்படும் விசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாதர் கோவிலில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு

    108 வலம்புரி சங்கு பூஜைகள், ருத்ரஜெபம், ருத்ர பாராயணம் உட்பட பல்வேறு பூஜைகளை சின்ன கோவில் சிவா சிவாச்சாரியார் தலைமையில் பூஜைகள் நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டனர்.

    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104 அடியாக உள்ளது.
    • அணைக்கு வரும் நீர் வரத்தை விட பாசனத்தி ற்காக அதிக அளவில் தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாகவே மழை பெய்ததால் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பவானிசாகர் அணை தொடர்ந்து 104 அடியில் நீடித்து வந்தது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,266 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 2,000 கன அடி, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 400 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 2,500 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் நீர் வரத்தை விட பாசனத்தி ற்காக அதிக அளவில் தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    ஆனால் அதே சமயம் மற்ற பிரதான அணைகளான குண்டேரி பள்ளம் அணை தனது முழு கொள்ளளவான 41. 75 அடியிலும், பெரும்பள்ளம் அணை தனது முழு கொள்ளளவான 30.84 அடியிலும், வரட்டுபள்ளம் அணை தனது முழு கொள்ளளவான 33.46 அடியிலும் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    • ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலையை புறக்கணித்து கல்லூரி மருத்துவமனைக்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராடி வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

    இவர்களை தனியார் நிறுவனம் ஒன்று தினக்கூலி அடிப்படையில் இவர்களை பணியில் அமர்த்தி உள்ளது.

    கடந்த 3 ஆண்டுகளாக இவர்களுக்கு சராசரி தினக்கூலியாக ரூ.490 என்ற அடிப்படையில் கூலிக்கு அமர்த்தியுள்ளனர். ஆனால் தற்போது வரை ரூ.360 மட்டுமே வழங்கி வருவதாக கூறப்படுகிறது.

    மேலும் இவர்களுக்கு வருடம் ஒருமுறை வழங்கக்கூடிய ஊதிய உயர்வு, போனஸ் மற்றும் தூய்மை பணியாளர் னளுக்கான உபகரணங்கள் எதுவும் வழங்கப்பட வில்லை.

    இதனை கண்டித்து நேற்று மாலை முதல் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலையை புறக்கணித்து கல்லூரி மருத்துவமனைக்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராடி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று 2-வது நாளாக ஒப்பந்த பணியாளர்கள் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    • சென்னிமலை முருகன் கோவிலில் திருக்கார்த்திகை விழாவினை முன்னிட்டு முருகப்பெருமான் வெள்ளிமயில் வாகனத்தில் கோவில் உலா நடந்தது.
    • டவுன் கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டு கூத்தப்பனை கொழுத்தப்பட்டது.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் திருக்கார்த்திகை விழாவினை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் மகாதீபாரதனை நடைபெற்றது. பின்னர் மாலை 5 மணிக்கு முருகப்பெருமான் வெள்ளிமயில் வாகனத்தில் கோவில் உலா நடந்தது.

    அதை தொடர்ந்து 6.20 மணிக்கு சென்னிமலை முருகன் கோவில் ராஜகோபுரம் முன்பு உள்ள தீபஸ்தம்பத்தில் தீபம் ஏற்றப்பட்டது. அதன் பின்பு 60-ம் படி என்று சொல்லப்படுகிறது 60 திருப்படிகளில் குத்துவிளக்கு ஏற்றி குத்துவிளக்கு பூஜை நடந்தது.

    இரவு 8 மணிக்கு முருகப்பெருமான் மூலவருக்கு அபிேஷகம், அதை தொடர்ந்து மகா தீபாரதனையும், திருகார்த்திகை தீப விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் சென்னிமலை டவுன் கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டு கூத்தப்பனை கொழுத்தப்பட்டது. முருங்கத்தொழுவு பிரலிங்கேஸ்வரர் கோவி லிலும் திருகார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு கூத்தப்பனை கொழுத்தப்பட்டது.

    • நெடுஞ்சாலைத்துறை சார்பில் நாளை சாலை அகலப்படுத்தும் பணி நடக்கிறது.
    • இதனால் ஈங்கூர் துணை மின் நிலையம் பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை மின்சாரம் இருக்காது.

    ஈரோடு:

    நெடுஞ்சாலைத்துறை சார்பில் நாளை (வியாழக்கிழமை) சாலை அகலப்படுத்தும் பணி நடக்கிறது.

    இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஈங்கூர் துணை மின் நிலையம் பாலப்பாளையம், நெசவாளர் காலனி மற்றும் புலவனூர் மின் பாதை பகுதிகளான ஈங்கூர், பாலப்பாளையம், முகாசி பிடாரியூர், வேலாயுதம்பாளையம், புலவனூர், கூரபாளையம், கோவில்பாளையம், கொளத்துப்பாளையம், சென்னியங்கிரிவலசு, நெசவாளர் காலனி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்து கொண்டிருந்தனர்.
    • சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபர்களை மடக்கி பிடித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பர்கூர் சோதனை சாவடியில் பர்கூர் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபர்களை மடக்கி பிடித்தனர்.

    மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது ஒரு பாலித்தீன் பை இருந்தது. அதனை திறந்து பார்த்த போது 150 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது.

    போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் சேலம் மாவட்டம் உத்தமசோழபுரம் பகுதியை சேர்ந்த தனசேகரன் (24), நந்தகுமார் (27) என்பதும் இவர்கள் கர்நாடக மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி விற்பனைக்கு கொண்டு வந்ததும் தெரிய வந்தது.

    இது குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கஞ்சா பொட்டலங்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெப்பிலி துணை ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் 3,993 கிலோ தேங்காய்கள் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 45-க்கு விற்பனையானது.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.

    ஏலத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 8,703 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் ஒரு கிலோ குறைந்த பட்ச விலையாக ரூ.23.75-க்கும், அதிக பட்ச விலையாக ரூ.34.59-க்கும், சராசரி விலையாக ரூ.28.89-க்கும் ஏலம் போனது.

    மொத்தம் 3,993 கிலோ தேங்காய்கள் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 45-க்கு விற்பனையானது.

    • வட்டார அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் இன்று தொடங்கி உள்ளது.
    • மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க அழைத்து செல்லப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து அரசு நடுநிலை, இடைநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயிலும் மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கவும், நமது பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறையினரிடம் உயிர்ப்புடன் வைத்திருக்கவும் கலைத்திருவிழா போட்டிகள் அரசு பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகின்றது.

    ஆடல், பாடல், மொழித்திறன், மனப்பாடம், இசை வாசித்தல், பலகுரல், ஓவியம் உள்ளிட்ட பல்வேறு வகையிலான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகள் அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு அதில் தேர்வான மாணவர்கள் வட்டார அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டனர்.

    வட்டார அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் இன்று தொடங்கி உள்ளது.

    இதில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அந்தியூர் ஐடியல் பள்ளியிலும், 9-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாமரத்துப்பாளையம் இந்து கல்வி நிலையத்திலும், பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு நந்தா பொறியியல் கல்லூரியிலும் நடைபெற்று வருகின்றது.

    போட்டிகளை நடத்த ஈரோடு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், ஈரோடு மாவட்ட கல்வி அலுவலர், கோபி கல்வி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்னர். இப்போட்டிகள் வரும் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    இதனையடுத்து மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க அழைத்து செல்லப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவரும் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்.
    • இதனால் ஈரோடு மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா தினசரி பாதிப்பு அதிக அளவில் இருந்தது. பின்னர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவ டிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாக கொரோனா தாக்கம் குறைய தொடங்கியது.

    கடந்த சில மாதங்க ளாகவே கொரோனா தினசரி தாக்கம் குறைய தொடங்கியது. இந்நிலையில் கடந்த 2 வாரமாக கொரோனா தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கில் பதிவாகி வருகிறது.

    கடந்த 7 நாட்களாக மாவட்டத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் அதே சமயம் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர்.

    நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியல் படி 8-வது நாளாக யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 646 ஆக உள்ளது.

    கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவரும் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார். இதனால் ஈரோடு மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது.

    இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 911 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மாவட்டத்தில் 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

    ×