பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104 அடியாக உள்ளது.அணைக்கு வரும் நீர் வரத்தை விட பாசனத்தி ற்காக அதிக அளவில் தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

கடந்த சில நாட்களாகவே மழை பெய்ததால் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பவானிசாகர் அணை தொடர்ந்து 104 அடியில் நீடித்து வந்தது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,266 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 2,000 கன அடி, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 400 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 2,500 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீர் வரத்தை விட பாசனத்தி ற்காக அதிக அளவில் தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

ஆனால் அதே சமயம் மற்ற பிரதான அணைகளான குண்டேரி பள்ளம் அணை தனது முழு கொள்ளளவான 41. 75 அடியிலும், பெரும்பள்ளம் அணை தனது முழு கொள்ளளவான 30.84 அடியிலும், வரட்டுபள்ளம் அணை தனது முழு கொள்ளளவான 33.46 அடியிலும் தொடர்ந்து நீடித்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com