என் மலர்
ஈரோடு
- தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் இன்று 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- போராட்டம் காரணமாக இது வரை ஊதியம் வழங்க வில்லை.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஈரோடு மருத்துவ கல்லூரி மருத்துவ மனை செயல்பட்டு வரு கிறது. இங்கு தூய்மை பணி, காவலர், ஹவுஸ் கீப்பிங் ஆகிய பணிகளில் தனியார் நிறுவனம் சார்பில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் வேலை செய்து வரு கிறார்கள்.
இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவித்த குறைந்த பட்ச ஊதியம் வழங்க வேண்டும். மேலும் வார விடுமுறை சூழற்சி முறையில் வழங்க வேண்டும். ஒப்பந்த முறை ப்படி 3 சிப்ட் வழங்க வேண்டும்.
பெண் ஊழியர்களுக்கு இரவு பணி வழங்க கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கடந்த 6-ந் முதல் தமிழக மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் தொடங்கி நடந்து வருகிறது.
அவர்கள் நேற்று 3-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் இன்று (வெள்ளிக்கிழமை) 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
நாங்கள் கோரிக்கைகள் வலியுறுத்தி இன்று 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். மருத்துவமனை டீன் எங்களி டம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அவர் பேசும் போது, தனி யார் நிறுவனம் தான் உங்களின் கோரிக்கை ஏற்க வேண்டும் என தெரிவி த்தனர்.
மேலும் மாதம் தோறும் 7-ந் தேதி எங்களுக்கு ஊதியம் வழங்கப்படும். ஆனால் போராட்டம் காரணமாக இது வரை ஊதியம் வழங்க வில்லை. போராட்டம் கைவிட பல அழுத்தம் கொடுக்க ப்படுகிறது. கோரிக்கைகள் நிறை வேறும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றனர்.
- நவகாளியம்மன் உருவச்சலைக்கு விரைவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
- தமிழகத்தில் எங்கும் இல்லாத 71 அடி உயர பிரம்மாண்டம் கொண்ட நவகாளியம்மன் சிலை இங்கு அமைந்துள்ளது
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடுத்து காரப்படி கிராமத்தில் 71 அடி உயர நவகாளியம்மன் பிரம்மாண்ட சிலை அமைக் கப்பட்டு நவகாளியம்மன் அறக்கட்டளையின் சார்பாக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இக்கோவிலில் குடும்பப் பிரச்சினை, தொழில் முன்னேற்றம், மாந்திரீகம், நட்சத்திரங்களுக்கு பரிகாரம், கால பைரவர், வாராகி அம்மன் ஆதி கருப்பண்ண சுவாமி போன்ற தெய்வங்கள் மற்றும் கரூர் சித்தரின் அருள் பெற்ற அய்யாக்கண்ணு சுவாமிகள் அருள்வாக்கு கூறி வருகிறார்.
விரைவில் 71 அடி உயரத்தில் உள்ள நவகாளியம்மன் உருவச்சலைக்கு சித்திரை 10-ம் நாள் 23.4.2023 தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.15 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
தமிழகத்தில் எங்கும் இல்லாத 71 அடி உயர பிரம்மாண்டம் கொண்ட நவகாளியம்மன் சிலை இங்கு அமைந்துள்ளது என விழா குழுவினர் தெரிவித்தனர்.
- முத்துலட்சுமி தனது குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு தொட்டிலில் தூங்க வைத்தார்.
- பின்னர் மீண்டும் மாலை 3 மணியளவில் பார்த்த போது குழந்தை பேச்சு, மூச்சு இல்லாமல் இருந்தது.
கோபி:
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள வெள்ளரவெள்ளி பகுதியை சேர்ந்தவர் மதிவாணன். டிராக்டர் டிரைவர். இவரது மனைவி முத்துலட்சுமி (30). இவருக்கு கடந்த 3 மாதத்துக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு கோகுலஸ்ரீ என்று பெயர் வைத்தனர்.
இந்த நிலையில் குழந்தை பிறந்ததும் முத்துலட்சுமி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பெரியகொரவன் பாளையம் என்ற பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்தார்.
சம்பவத்தன்று முத்துலட்சுமி தனது குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு தொட்டிலில் தூங்க வைத்தார். பின்னர் மீண்டும் மாலை 3 மணியளவில் பார்த்த போது குழந்தை பேச்சு, மூச்சு இல்லாமல் இருந்தது.
இதையடுத்து அவர்கள் குழந்தையை கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பிறந்த 3 மாதத்தில் பெண் குழந்தை இறந்து விட்டதால் இதுகுறித்து சிறுவலுர் போலீசாரும், மருத்துவ துறையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கோபி செட்டிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
- கொடுமுடி, பவானி, பு.புளியம்பட்டி, சென்னிமலை, அந்தியூர், சத்தியமங்கலம், தாளவாடி, பர்கூர், பெருந்துறை, சிவகிரி உள்பட மாவட்டம் முழுவதும் சாரல்மழை பெய்து வருகிறது.
ஈரோடு:
மாண்டஸ் புயல் காரணமாக ஈரோடு மாவட்டத்திற்கு நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதே போல் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களில் வீரர்கள் பேரிடர் மீட்பு கருவிகளுடன் தயார் நிலையில் உள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்று வீசிவருகிறது. ஒரு சில இடங்களில் சாரல் மழையும் பெய்து வருகிறது.
கோபி செட்டிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதே போல் கொடுமுடி, பவானி, பு.புளியம்பட்டி, சென்னிமலை, அந்தியூர், சத்தியமங்கலம், தாளவாடி, பர்கூர், பெருந்துறை, சிவகிரி உள்பட மாவட்டம் முழுவதும் சாரல்மழை பெய்து வருகிறது.
மேலும் பலத்த காற்றும் வீசி வருகிறது. இதனால் கடுங்குளிர் நிலவி வருகிறது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், சுவட்டர் அணிந்த படி சென்றனர். தாளவாடி, பர்கூர் மலை பகுதிகளில் பலத்த காற்று வீசிவருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-
பெருந்துறை-3, கோபி செட்டிபாளையம்-1.20, பவானி-1.40, கொடுமுடி-2, சென்னிமலை-2, மொடக்குறிச்சி-3.4, எலந்தகுட்டை மேடு-1.8, கொடிவேரி-3, மொத்தம் 17.80 மி.மீ.மழை பதிவாகி இருந்தது.
- புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் புதன் மற்றும் வியாழன் கிழமை மாடு, ஆடு போன்ற கால்நடைகள் விற்பனையாவது வழக்கம்.
- கூடிய மாட்டுச்சந்தையில் கால்நடைகள் ரூ.75 லட்சத்திற்கு விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் புதன் மற்றும் வியாழன் கிழமை மாடு, ஆடு போன்ற கால்நடைகள் விற்பனையாவது வழக்கம்.
இது தமிழ்நாட்டின் 2-வது பெரிய சந்தை ஆகும்.
இதில் திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம் போன்ற மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை வாங்கி செல்வது வழக்கம்.
இந்நிலையில் இன்று கூடிய மாட்டுச்சந்தையில் மாடு, ஆடு, கன்று போன்ற கால்நடைகள் ரூ.75 லட்சத்திற்கு விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
- கோட்டபாளையம் காரப்பாடியை சேர்ந்த செந்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
- பின்னர் போலீசார் செந்தில் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே கோட்டபாளையம் குளியங்காட்டு தோட்டம் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை நடைபெற்று வருவதாக புளியம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் ரபி, பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். உடனே போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் கோட்டபாளையம் காரப்பாடியை சேர்ந்த செந்தில் (42) என்பதும், சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் அவரிடம் இருந்து 8 லிட்டர் சாராயம், 200 லிட்டர் சாராய ஊறல், ஊறல் போட பயன்படுத்திய டிரம், குடம், பாத்திரம் மற்றும் ரொக்கப்பணம் ரூ.3200 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பின்னர் போலீசார் செந்தில் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் செந்தில் மீது ஏற்கனவே சாராயம் காய்ச்சிய வழக்கு மற்றும் நாட்டுது ப்பா க்கி வைத்தி ருந்த வழக்கும் உள்ளது குறிப்பி டத்தக்கது.
- ஈரோடு மாவட்டத்திற்கு வரும் 10-ந் தேதி கனமழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- ஈரோடு மாவட்டத்திற்கு வரும் 10-ந் தேதி கனமழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பொழிவு அதிகமாக இருப்பதாலும், வங்காள விரிகுடா கடலில் 'மாண்டஸ்" புயல் உருவாகி இருப்பதால் ஈரோடு மாவட்டத்திற்கு வரும் 10-ந் தேதி கனமழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழையின் காரணமாக பெரும் பாலான நீர் நிலைகள் நிரம்பி உள்ளதால் ஆறு, நீர் நிலைகளில் பொதுமக்கள் குளிக்க செல்லுவதை தவிர்க்க வேண்டும்.
தாழ்வான பகுதிகளிலும், நீர்நிலைகளின் இருகரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.
மின்கம்பம், மழை, வெள்ளநீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டிவைக்க கூடாது. வெள்ளபெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் கால்நடைகளை பாதுக்காப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.
இடி, மின்னல் ஏற்படும்போது மரத்தின் அருகில் பொதுமக்கள் செல்லவோ, கால்நடைகளை கட்டி வைக்கவோ கூடாது. மழை பொழிவின்போது பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும்.
இடி, மின்னல் ஏற்படும் போது மின்சாதனங்களை பொதுமக்கள் கவனமுடன் கையாள தெரிவிக்கப்படுகிறது. மின் கம்பிகள் ஏதும் அறுந்து விழுந்துவிட்டால் உடனடியாக மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.
- சந்தோஷ் தாய் சரஸ்வதி போன் செய்து பார்த்த போது போன் எடுக்கவில்லை.
- தண்ணீரில் இறங்கி பார்த்த போது சந்தோஷ் தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தது தெரியவந்தது.
கொடுமுடி:
கொடுமுடி அருகே உள்ள இச்சிபாளையம் கிராமம் கருத்தி பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் சந்தோஷ் (வயது 24). ஆடு மேய்க்கும் தொழிலாளி.
சந்ேதாஷ் காலை ஆடு மேய்க்க சென்றால் மாலை தான் வீடு திரும்புவார். இந்நிலையில் சம்பவத்தன்று ஆடு மேய்க்க சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை.
இதனால் சந்தோஷ் தாய் சரஸ்வதி போன் செய்து பார்த்த போது போன் எடுக்கவில்லை. அக்கம் பக்கம் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து வழக்கமாக ஆடு மேய்க்கும் இடத்திற்கு சென்று பார்த்த போது தண்ணீர் தேங்கி பாறைக்குழி அருகில் சந்தோஷின் சட்டை, லுங்கி, செல்போன் இருந்தது. பின்னர் கொடுமுடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் அடிப்படையில் கொடுமுடி போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று பார்த்தனர். மேலும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு துறையினர் நேரில் வந்து தண்ணீரில் இறங்கி பார்த்த போது சந்தோஷ் தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் சந்தோஷ் உடலை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சிறுமியிடம் ஸ்ரீதர் ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
- போலீசார் விசாரணை நடத்தி ஸ்ரீதர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (24). இவர் மொடக்குறிச்சியை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் நட்பாக பழகினார்.
இந்த பழக்கம் நாள டைவில் காதலாக மாறியது. இதன்பேரில் சிறுமியிடம் ஸ்ரீதர் ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்நிலையில் சிறுமியின் நடவடிக்கையில் மாற்றத்தை அறிந்த பெற்றோர் அவரிடம் விசாரிக்க அவர் நடந்ததை தெரிவித்து ள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் விசாரணை நடத்தி ஸ்ரீதர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.
- இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.95 அடியாக உள்ளது.
- அணைக்கு வினாடிக்கு 1,832 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாகவே நீலகிரி மலைப்பகுதியில் மழை பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தும் வருகிறது.
தற்போது அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.95 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,832 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 2,000 கன அடி, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 400 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 2,500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- செல்போன் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் லேப்டாப் திருடப்பட்டது.
- விஜயகுமார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈரோடு:
ஈரோடு-மேட்டூர் ரோட்டில் உள்ள ஒரு செல்போன் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் லேப்டாப் திருடப்பட்டது. இது பற்றி தெரிய வந்ததும் , ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் விரைந்து வந்தனர்.
மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கடையில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்து இருந்தனர். அப்போது கடையின் முன்பக்க கண்ணாடி உடைந்து ரத்த கரை படிந்து இருந்தது. அதையும் கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர்.
இதனையடுத்து கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது அதிகாலை 5 மணி அளவில் மர்மநபர் ஒருவர் கையில் அழுக்கு சாக்குடன் கடையின் பூட்டை உடைத்து உள்ளே செல்வதும், அவர் கடையில் இருந்த விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் லேப்டாப்பை சாக்கு மூட்டையில் போட்டு தப்பி செல்லும் காட்சியும் பதிவாகி இருந்தது.
இந்நிலையில் செல்போன்களை திருடிய திருடன் அந்த கடையில் உபயோகப்படுத்தும் செல்போனையும் கையில் எடுத்து சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அந்த செல்போன் எண்ணை வைத்து கண்காணித்தனர். அப்போது அந்த நபர் இருக்கும் இடம் தெரிந்தது. இதையடுத்து போலீசார் அந்த நபரை மடக்கி பிடித்தனர்.
போலீசார் விசாரணையில் அந்த நபர் கன்னியாகுமரி மாவட்டம் சாந்தாபுரம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (42) என தெரிய வந்தது.
அவர் ஈரோட்டில் சில நாட்களாகவே தங்கி தெருவோரம் படுத்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார். அழுக்கு சட்டை, அழுக்கு வேட்டி அணிந்திருக்கும் அவர் மீது யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை.
சம்பவத்தன்றும் செல்போன் கடை முன்பு இரவு முழுவதும் படுத்து தூங்கினார். பின்னர் அதிகாலை செல்போன் கடையை உடைத்து கைவரிசை காட்டி உள்ளார்.
மேலும் விஜயகுமார் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவை சென்றுள்ளார். அங்கேயும் செல்போன் கடையின் பூட்டை உடைத்து 40-க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த செல்போன்களை திருடி சென்றது தெரிய வந்தது.
திருடிய செல்போன்களை வெளி சந்தையில் விற்று அதன் மூலம் பணம் சேர்த்துள்ளார். தற்போது சி.சி.டி.வி. கேமிரா மூலம் சிக்கி உள்ளார்.
இதனையடுத்து விஜயகுமார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார். கொள்ளை நடந்த 4 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- உற்பத்தி அதிகரிப்பின் காரணமாக இன்று காய்கறி வரத்து 25 டன்னாக அதிகரித்து காணப்பட்டது.
- பனிப்பொழிவின் காரணமாக கருவேப்பிலை மட்டுமே விலை உயர்ந்து காணப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
தினமும் 15 டன் அளவுக்கு காய்கறிகள் வந்த நிலையில் தற்போது உற்பத்தி அதிகரிப்பின் காரணமாக இன்று காய்கறி வரத்து 25 டன்னாக அதிகரித்து காணப்பட்டது. இதனால் காய்கறிகளின் விலையும் குறைந்து காணப்பட்டது.
பனிப்பொழிவின் காரணமாக கருவேப்பிலை மட்டுமே விலை உயர்ந்து காணப்பட்டது. மற்ற காய்கறிகள் அனைத்தும் கடந்த வாரத்தை விட குறைந்த அளவிலேயே விற்பனை செய்யப்படுகிறது. இதில் தக்காளி அதிகளவில் வருவதால் கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஈரோடு வ.உ.சி.காய்கறிமார்க்கெட்டில் இன்று விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை கிலோ கணக்கில் வருமாறு-
கேரட்-60, பீட்ருட்-60, கத்திரிக்காய்-60, புடல ங்காய்-30, பீர்க்கங்காய்-40, பாவக்காய்-40, சுரைக்காய்-15, பச்சை மிளகாய்-50, பீன்ஸ் ரூ.30 முதல் ரூ.40வரை, வெண்டை க்காய்-30,உருளைகிழங்கு-ரூ. 50,காலிபிளவர்-40, சின்னவெங்காயம்-80, பெரிய வெங்காயம்-40
கறிவேப்பிலை கிலோ 70 முதல் 80 வரை விற்பனை செய்யப்படுகிறது. முருங்கைக்காய் கிலோ ரூ. 140 முதல் ரூ. 160 வரை விற்பனை செய்யப்படுகிறது.






