search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு மாவட்டத்துக்கு 10-ந் தேதி கனமழை எச்சரிக்கை
    X

    ஈரோடு மாவட்டத்துக்கு 10-ந் தேதி கனமழை எச்சரிக்கை

    • ஈரோடு மாவட்டத்திற்கு வரும் 10-ந் தேதி கனமழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • ஈரோடு மாவட்டத்திற்கு வரும் 10-ந் தேதி கனமழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பொழிவு அதிகமாக இருப்பதாலும், வங்காள விரிகுடா கடலில் 'மாண்டஸ்" புயல் உருவாகி இருப்பதால் ஈரோடு மாவட்டத்திற்கு வரும் 10-ந் தேதி கனமழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வடகிழக்கு பருவமழையின் காரணமாக பெரும் பாலான நீர் நிலைகள் நிரம்பி உள்ளதால் ஆறு, நீர் நிலைகளில் பொதுமக்கள் குளிக்க செல்லுவதை தவிர்க்க வேண்டும்.

    தாழ்வான பகுதிகளிலும், நீர்நிலைகளின் இருகரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.

    மின்கம்பம், மழை, வெள்ளநீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டிவைக்க கூடாது. வெள்ளபெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் கால்நடைகளை பாதுக்காப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

    இடி, மின்னல் ஏற்படும்போது மரத்தின் அருகில் பொதுமக்கள் செல்லவோ, கால்நடைகளை கட்டி வைக்கவோ கூடாது. மழை பொழிவின்போது பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும்.

    இடி, மின்னல் ஏற்படும் போது மின்சாதனங்களை பொதுமக்கள் கவனமுடன் கையாள தெரிவிக்கப்படுகிறது. மின் கம்பிகள் ஏதும் அறுந்து விழுந்துவிட்டால் உடனடியாக மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

    Next Story
    ×