என் மலர்
நீங்கள் தேடியது "was caught in a"
- கான்கிரீட் கலவை மிஷின் என்ஜின் பகுதியில் பாப்பாயி சேலை சிக்கிக் கொண்டது
- பாப்பாயி கலவை மிஷின் மீது மோதி சம்பவ இடத்திலேயே தலை துண்டிக்கப்பட்டு பரிதாப மாக இறந்தார்
சிவகிரி,
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தலைய நல்லூர் காலனியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது மனைவி பாப்பாயி (வயது 62). கட்டிட கூலி தொழிலாளி. இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் சிவகிரி அருகே உள்ள ரங்க சமு த்திரம் பகுதியில் தங்கவேல் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். பாப்பாயி அங்கு வேலை செய்தார். தொடர்ந்து அவர் அங்கு கான்கிரீட் கலவை மிஷினில் ஜல்லி அள்ளி போட்டு கொண்டு இருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக கான்கிரீட் கலவை மிஷின் என்ஜின் பகுதியில் பாப்பாயி சேலை சிக்கிக் கொண்டது. இதில் பாப்பாயி கலவை மிஷின் மீது மோதி சம்பவ இடத்திலேயே தலை துண்டிக்கப்பட்டு பரிதாப மாக இறந்தார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவருடன் வேலை செய்த தொழிலாளர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து போலீசார் பாப்பாயின் உடல் பிரேத பரிசோதனை க்காக பெரு ந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வரு கிறார்கள்.






