என் மலர்
ஈரோடு
- வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது.
- சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 5 ஆயிரத்து 654 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
சென்னிமலை:
சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது.
ஏலத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 5 ஆயிரத்து 654 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 26 ரூபாய் 76 காசுக்கும், அதிகபட்ச விலையாக 30 ரூபாய் 49 காசுக்கும், சராசரி விலையாக 27 ரூபாய் 15 காசுக்கும் ஏலம் போனது.
மொத்தம் 2 ஆயிரத்து 881 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.78 ஆயிரத்து 344-க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
- உங்களுக்கு உழைக்கவே எனது வாழ்க்கையின் இறுதி லட்சியமாக இருக்கும்.
- நல்லவன் என்று சொன்னாலும் சொல்லாவிட்டாலும் கெட்டவன் என்று சொல்கின்ற அளவிற்கு நடக்க மாட்டேன்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முதன் முதலில் நேற்று மாலை பிரசாரத்தில் ஈடுபட்டார். மாணிக்கம்பாளையம் பகுதியில் முதல் நாள் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பொதுமக்கள் மத்தியில் பேசினார்.
எனது மகன் திருமகன் ஈ.வெ.ரா 1½ ஆண்டுகளாக இந்த பகுதி மக்களுக்காக உழைத்திருக்கிறார். திருமகன் ஈ.வெ.ரா மறைந்தவுடன் என்ன செய்வதென்று தெரியாமல் துக்கத்தில் துடித்துக்கொண்டிருந்த எனக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறியதோடு மட்டுமல்லாமல் ஊக்கமும் கொடுத்தார்.
நான் போட்டியிட முதலமைச்சரும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் விருப்பம் தெரிவித்ததால் நான் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்.
ஈரோடு நகர் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்து இருக்கிறது. அதனை தீர்க்க வேண்டும். தற்போது அமைச்சர் முத்துசாமியுடன் இணைந்து ஈரோட்டு மக்களின் குறைகளை தீர்க்க பாடுபடுவேன் என உறுதி அளிக்கிறேன். ஈரோட்டில் கடந்த ஒரு வாரங்களாக கூட்டணி கட்சியினர் முத்துசாமி தலைமையில் மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து கொண்டிருக்கிறேன்.
முதல் முதலாக முத்துசாமியுடன் உங்களை சந்திப்பது இங்கு தான் என்றும். எனக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ நீங்கள் நம்புகின்ற விஷயம் என்பதால் சொல்கிறேன் "பிள்ளையார் சுழியை இங்குதான் போட்டிருக்கிறேன்.
மேலும் என்னை உங்களுக்காக உழைக்க வாய்ப்பு ஏற்படுத்தி தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சோனியா காந்தி மற்றும் அமைச்சர் முத்துசாமி ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுக்கு உழைக்கவே எனது வாழ்க்கையின் இறுதி லட்சியமாக இருக்கும். நல்லவன் என்று சொன்னாலும் சொல்லாவிட்டாலும் கெட்டவன் என்று சொல்கின்ற அளவிற்கு நடக்க மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் மறைந்த எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா முதலில் நாம் தமிழர் கட்சியில் இணைவதாக இருந்ததாக சீமான் பொதுக்கூட்டத்தில் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சீமான் உணர்ச்சிவசப்படக்கூடிய நபர் என்றும், அவர் மீது பாசம் உள்ளது. ஆனால் அடிக்கடி சொன்னதையே மாற்றி மாற்றி சொல்லக்கூடியவர்.
சீமான் எனது பாசத்திற்கு உரியவர் என்றார். மேலும் என்னை இகழ்ந்தாலும், எனது மகனை பற்றி சொன்னாலும் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டேன். அன்பின் மிகுதியால் சொல்கிறார் என எடுத்துக்கொள்வேன் என்றார்.
- அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு ஈரோடு தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு 2001-ல் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
- பின்னர் தொகுதி மறுசீரமைப்புக்கு பின்பு 2016-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் கே.எஸ். தென்னரசு போட்டியிடுவார் என்று இன்று காலை அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கே.எஸ்.தென்னரசு (வயது 65) 1988-ம் ஆண்டு ஈரோடு நகர அ.தி.மு.க. செயலாளராக பணியாற்றினார்.
* 1992-ம் ஆண்டு ஈரோடு நகர இணைச் செயலாளராகவும், 1995-ம் ஆண்டு நகர செயலாளராகவும், 1999-ம் ஆண்டு கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராகவும் இருந்தார்.
* மீண்டும் 2000-ம் ஆண்டு ஈரோடு நகர அ.தி.மு.க. செயலாளர் ஆனார். 2010-ம் ஆண்டு முதல் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.
* அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு ஈரோடு தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு 2001-ல் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் தொகுதி மறுசீரமைப்புக்கு பின்பு 2016-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
* கடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வுக்கு ஒதுக்கப்பட்டதால் போட்டியிடவில்லை.
இவர் ஈரோடு கருங்கல்பாளையம் சொக்காய் தோட்டம் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு பத்மினி என்ற மனைவியும், கலையரசன் என்ற மகனும், கலைவாணி என்ற மகளும் உள்ளனர்.
- தேர்தல் பணியாற்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசியல் கட்சியினர் ஈரோடு தொகுதியில் குவிந்து உள்ளனர்.
- நேற்று முதல் நாளில் ஏராளமான சுயேச்சை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்ய வந்திருந்தனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பணியாற்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசியல் கட்சியினர் ஈரோடு தொகுதியில் குவிந்து உள்ளனர்.
காலை மற்றும் மாலை நேரங்களில் அவர்கள் தொகுதி முழுவதும் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்து வருகிறார்கள்.
தேர்தல் பிரசாரத்துக்கு வெளியூர் ஆட்கள் அதிகளவில் வந்து இருப்பதால் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. இந்த இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று முதல் நாளில் ஏராளமான சுயேச்சை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்ய வந்திருந்தனர்.
அவர்கள் ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், ஓட்டுக்கு பணம் வாங்குவதும் தவறு என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் மறுமலர்ச்சி மக்கள்இயக்கம் என்றபெயரில் பரபரப்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் ஓட்டுக்கு பணம் நாட்டுக்கு அழிவு, பெரியார் மண் விற்பனைக்கல்ல என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருவதாக கூறியவர்கள் தரவில்லை.
- எனக்கு கட்சியா எனது இல்ல திருமண விழாவா என்று கேட்டால் முதலில் கட்சி தான் எனக்கு என் உயிரோடு கலந்தது என்பேன்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் கருங்கல்பாளையம் பகுதியில் வார்டு எண் 38-ல் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், மதுரை திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு மண்ணில் நடைபெறும் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. எனும் ஆலமரத்தின் மகத்தான இடைக்கால பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நம் அனைவரும் அணிவகுத்து நிற்கின்றோம். ஈரோடு மண்ணின் மக்களின் மகிழ்ச்சியில் இன்று தெரிகிறது. நம் பெரிய வெற்றியை காண இருக்கிறோம்.
இன்று நாம் செல்லும் இடங்களில் எல்லாம் ஆண்களும், பெண்களும் இரட்டை இலை சின்னத்தை தேடி வர ஆரம்பித்து உள்ளனர். ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் தி.மு.க. சொன்ன அனைத்து வாக்குறுதிகளும் இதுவரை நிறைவேற்றவே இல்லை.
பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருவதாக கூறியவர்கள் தரவில்லை. அமைச்சர்கள் செல்லும் இடங்களில் பெண்களே நீங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆயிரம் ரூபாய் தருவதாக கூறினீர்களே ஆயிரம் ரூபாய் இதுவரை தரவே இல்லை என்று நேரடியாக வாக்குவாதத்திலும் ஈடுபடுகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் டெபாசிட்டை இழப்பார். நாம் செல்லும் இடங்களில் எல்லாம் ஆண்களும், பெண்களும் முகம் மலர்ச்சியுடன் நம்மை வரவேற்று உபசரிப்பதை பார்த்தால் இதுவே நாம் கண்டுள்ள வெற்றியின் முதல் படி . எனது மூத்த மகள் திருமண விழா பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது.
ஆனால் அந்த வேலையை விட்டுவிட்டு கழகத்திற்காக நான் இன்று ஈரோட்டில் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு உள்ளேன். எனக்கு கட்சியா எனது இல்ல திருமண விழாவா என்று கேட்டால் முதலில் கட்சி தான் எனக்கு என் உயிரோடு கலந்தது என்பேன்.
அதிக வாக்கு வித்தியாசத்தில் நாம் வெற்றி பெற்று வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெற்று கொங்கு நாட்டு சிங்கம் அண்ணன் எடப்பாடி பழனிசாமி கரங்களை வலு சேர்ப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக அமைக்கப்பட்ட பறக்கும் படை அதிகாரிகள், கருங்கல்பாளையம் போலீஸ் சோதனை சாவடி அருகே நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- சென்னை அட்சினாபுரத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவர் ஜவுளி வாங்குவதற்காக ரூ.1 லட்சம் ரொக்கப்பணத்தை காரில் கொண்டு வந்தார். அத்தொகைக்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக 3 பறக்கும் படை, 4 நிலை கண்காணிப்பு குழு ஆகியவை அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர்.
உரிய ஆவணங்கள் இன்றி ரொக்கப்பணமாக ரூ.50 ஆயிரத்துக்கு மேலும், ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பரிசு பொருட்களை கொண்டு சென்றாலும் அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இதுவரை 9 பேரிடம் ரூ.9.43 லட்சம் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து உள்ளனர். இதில் உரிய ஆவணங்களை காண்பித்து மேல்முறையீட்டு குழுவில் முறையிட்டு சிலர் உரிய ஆவணங்களை வழங்கி வருகின்றனர்.
இதன்படி மேல்முறையீட்டு குழு பரிந்துரைப்படி சில நாட்களுக்கு முன் கரூரை சேர்ந்த பைனான்ஸ் நிறுவனத்தை சேர்ந்த கவீன் என்பவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.34 லட்சம் உரிய ஆவணங்கள் சமர்பித்ததால் அத்தொகையை அவரிடம் திரும்ப வழங்கினர்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக அமைக்கப்பட்ட பறக்கும் படை அதிகாரிகள், கருங்கல்பாளையம் போலீஸ் சோதனை சாவடி அருகே நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சென்னை அட்சினாபுரத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவர் ஜவுளி வாங்குவதற்காக ரூ.1 லட்சம் ரொக்கப்பணத்தை காரில் கொண்டு வந்தார். அத்தொகைக்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை.
இதனால் அத்தொகையை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் ஒப்படைத்தார். அவரது உத்தரவுப்படி, ஈரோடு மாவட்ட கருவூலத்தில் அத்தொகை ஒப்படைக்கப்பட்டது.
- இதுவரை எம்.எல்.ஏ, எம். பி., வார்டு கவுன்சிலர் என 40 முறை தேர்தலில் நின்று உள்ளேன்.
- தற்போது 41-வது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக கழுத்தில் செருப்பு மாலை அணிந்து வந்துள்ளேன்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று ஏற்கனவே 3 சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் 4-வதாக கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த நூர்முகமது (63) என்பவர் செருப்பை மாலையாக கழுத்தில் அணிந்து கொண்டு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார்.
அப்போது அவர் கூறும் போது,
நான் இதுவரை எம்.எல்.ஏ, எம். பி., வார்டு கவுன்சிலர் என 40 முறை தேர்தலில் நின்று உள்ளேன். தற்போது 41-வது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக கழுத்தில் செருப்பு மாலை அணிந்து வந்துள்ளேன்.
மக்களுக்காக நாயாக உழைத்து அவர்கள் கால்களுக்கு செருப்பாக இருப்பேன் என்பதை உணர்த்துவதற்காக கழுத்தில் செருப்பு மாலை அணிந்து வந்துள்ளேன். மக்கள் உண்மையிலேயே தங்களுக்காக யார் உழைப்பார்கள் என்று தெரிந்து அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் பணத்துக்காக வாக்களிக்கக் கூடாது என்றார்.
- மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தேர்தல் களத்தில் இறங்கி இருக்கின்றோம்.
- ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவரும் 10 ரூபாய் நாணயங்களுடன் மனு தாக்கல் செய்ய வந்தார்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று சுயேச்சைகள் ஆர்வத்துடன் மனு தாக்கல் செய்ய வந்திருந்தனர்.
மதுரை மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த மாரியப்பன் (51), அவரது மனைவி இளையராணி(45), அவர்களது ஒரே மகள் சத்யா (24) ஆகியோர் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய வந்திருந்தனர்.
இது குறித்து மாரியப்பன் கூறும் போது,
நான் அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மதுரை மாவட்ட அமைப்பாளராக உள்ளேன். எனது மனைவி துணை அமைப்பாளராக உள்ளார். எனது மகள் பி.ஏ.பி. எட். முடித்து உள்ளார். நாங்கள் குடும்பத்தினருடன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கை சின்னத்தில் போட்டியிடுவதற்காக முடிவு செய்துள்ளோம்.
ஏற்கனவே இங்கு கை சின்னத்தில் வேட்பாளர் உள்ளார். தேர்தல் நடத்தும் அலுவலர் எங்களுக்கு என்ன சின்னம் ஒதுக்கிறாரோ அதில் நாங்கள் போட்டியிட தயாராக இருக்கிறோம். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தேர்தல் களத்தில் இறங்கி இருக்கின்றோம் என்றார்.
இதேப்போல் திருச்சியை சேர்ந்த ராஜேந்திரன் (61) என்பவர் 10 ஆயிரம் மதிப்புள்ள 10 ரூபாய் நாணயங்களுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார்.
அவர் கூறும் போது, நான் அரசு போக்குவரத்துக் கழக டிரைவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளேன். ரிசர்வ் வங்கி 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என்று அறிவித்துள்ளது. ஆனால் வங்கிகள் மற்றும் வெளியிடங்களில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கிறார்கள்.
அறிவிப்பு ஒன்று நடைமுறை ஒன்றாக உள்ளது. இதனை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி 10 ரூபாய் நாணயங்களை எடுத்து வந்துள்ளேன். நான் ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே.நகர், ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டுள்ளேன். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் எனக்கு 3-வது தேர்தலாகும் என்றார்.
- ஆறுமுகசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கார்த்தியையும், கவுதமையும் சரமாரியாக குத்தினார்.
- 2 பேரையும் பிடிக்க டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு :
ஈரோடு முனிசிபல் காலனி கிருஷ்ணசாமி வீதியை சேர்ந்தவர் லோகநாதன். இவர்களுக்கு கவுதம் (வயது 30), கார்த்தி (26) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
இவர்கள் செக் எண்ணெய், மசாலா பொடிகள், மலை தேன் போன்றவற்றை வீட்டிலேயே விற்பனை செய்து வந்தனர். இவர்களு க்கும் அவரது மாமாவான மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகசாமிக்கும் முன்விரேதம் இருந்து வந்தது.
இந்நிலையில் கவுதம், கார்த்தி ஆகியோருக்கும் ஆறுமுகசாமிக்கும் செல்போனில் பேசிக்கொள்ளும்போது வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு 8.30 மணிஅளவில் கவுதம், கார்த்தி ஆகிய 2 பேரும் வீட்டில் இருந்தனர்.
அப்போது அவர்களது வீட்டுக்கு ஆறுமுகசாமி வந்து தகராறு செய்து உள்ளார். சத்தம் கேட்டு கவுதம், கார்த்தி ஆகியோர் வீட்டில் இருந்து வெளியே வந்தனர்.
அப்போது அண்ணன்-தம்பிக்கும், ஆறுமுக சாமிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதை கார்த்தி செல்போனில் வீடியோ எடுத்து பதிவு செய்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஆறுமுகசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கார்த்தியையும், கவுதமையும் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் 2 பேரும் அங்கேயே சரிந்து விழுந்தனர்.
பின்னர் ஆறுமுகசாமி அங்கிருந்து தப்பி ஓடினார். உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த கவுதம், கார்த்தி ஆகிய 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஒரு காரில் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் பலனளிக்காமல் அவர்கள் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட கார்த்திக் நாம் தமிழர் கட்சியின் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக இருந்து வந்தார்.
மேலும் இந்த கொலையில் ஆறுமுக சாமியுடன் மற்றொரு வரும் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து 2 பேரும் தலைமறைவாகி விட்டனர்.
இந்நிலையில் அவர்கள் 2 பேரையும் பிடிக்க டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வரும் நிலையில் அண்ணன், தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மயிலம்பாடி கரிய காளியம்மன் கோவில் பின்பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
- மேலும் அவர்களிடம் இருந்து ஒரு சீட்டுக்கட்டு மற்றும் ரொக்கப்பணம் ரூ.1,330 பறிமுதல் செய்யப்பட்டது.
பவானி:
பவானி மயிலம்பாடி கரிய காளியம்மன் கோவில் பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பவானி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து பவானி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மயிலம்பாடி கரிய காளியம்மன் கோவில் பின்பகுதியில் மறைவான இடத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட மைலம்பாடியை சேர்ந்த ராஜேஷ் (37), செல்வராஜ் (34), சரவணன் (31), ஒலகடத்தை சேர்ந்த பூபதி (28), பாலன் (32), கண்ணடிபாளையத்தை சேர்ந்த சதீஷ் (34) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து ஒரு சீட்டுக்கட்டு மற்றும் ரொக்கப்பணம் ரூ.1,330 பறிமுதல் செய்யப்பட்டது.
- பங்களாபுதூர் போலீசார் கே.என்.பாளையம், மோடூர் பிரிவு நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த நபர் ஒருவரிடம் சோதனையிட்டதில் அவரிடம் 700 கிராம கஞ்சா இருந்தது தெரியவந்தது.
ஈரோடு:
தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் அடிப்படையில் பங்களாபுதூர் போலீசார் கே.என்.பாளையம், மோடூர் பிரிவு நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த நபர் ஒருவரிடம் சோதனையிட்டதில் அவரிடம் 700 கிராம கஞ்சா இருந்தது தெரியவந்தது.
மேலும், அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் அவர், சத்தியமங்கலம், கே.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் (27) என்பது தெரியவந்தது.
மேலும், கர்நாடக மாநிலம், புளிஞ்சூர் பகுதியில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, பங்களாபுதூர் போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் அவரிடமிருந்த ரூ. 700 மதிப்பிலான கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்
- அரசு மதுபானத்தை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து 4 பேர் விற்பனை செய்து கொண்டிருந்தனர்.
- அவர்களிடம் இருந்து 33 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க மாவட்ட முழுவதும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன்படி ஈரோடு வடக்கு, கோபி, அந்தியூர் போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அரசு மதுபானத்தை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து 4 பேர் விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 33 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.






