பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

மயிலம்பாடி கரிய காளியம்மன் கோவில் பின்பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடம் இருந்து ஒரு சீட்டுக்கட்டு மற்றும் ரொக்கப்பணம் ரூ.1,330 பறிமுதல் செய்யப்பட்டது.
பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
Published on

பவானி:

பவானி மயிலம்பாடி கரிய காளியம்மன் கோவில் பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பவானி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து பவானி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது மயிலம்பாடி கரிய காளியம்மன் கோவில் பின்பகுதியில் மறைவான இடத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட மைலம்பாடியை சேர்ந்த ராஜேஷ் (37), செல்வராஜ் (34), சரவணன் (31), ஒலகடத்தை சேர்ந்த பூபதி (28), பாலன் (32), கண்ணடிபாளையத்தை சேர்ந்த சதீஷ் (34) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து ஒரு சீட்டுக்கட்டு மற்றும் ரொக்கப்பணம் ரூ.1,330 பறிமுதல் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com