என் மலர்tooltip icon

    ஈரோடு

    • சட்டசபை பொதுத்தேர்தலின்போது இவ்வளாகத்தில் 8 சட்டசபை தொகுதிக்குமான ஓட்டுப்பெட்டிகள் பாதுகாப்பாக வைத்து எண்ணப்படும்.
    • குடிநீர், கழிப்பறை போன்றவற்றையும் புதுப்பித்தும், புதிதாக ஏற்படுத்தியும் வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் நடக்கிறது. இத்தேர்தலில் ஓட்டுப்பதிவுக்குப்பின் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் சித்தோடு ஐ.ஆர்.டி.டி பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது.

    இதற்காக கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவு கட்டிடங்களை பொதுப்பணித்துறையினர் வசம் ஒப்படைத்தனர். அங்கு ஓட்டுப்பெட்டிகள் வைக்கும் பாதுகாப்பு அறை, ஓட்டு எண்ணும் அறை, போலீஸ் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் தங்கும் அறை, கண்காணிப்பு அறை ஆகியவை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    சட்டசபை பொதுத்தேர்தலின்போது இவ்வளாகத்தில் 8 சட்டசபை தொகுதிக்குமான ஓட்டுப்பெட்டிகள் பாதுகாப்பாக வைத்து எண்ணப்படும். தற்போது ஒரு தொகுதிக்கான தேர்தல் என்பதால் கல்லூரி செயல்பாடுகள் பாதிக்காத வகையில் ஒரு பகுதியை மட்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் தேர்தல் பிரிவினர் கொண்டு வந்து அங்கு பணிகள் நடந்து வருகிறது.

    மலையின் மேற்பகுதியில் இவ்விடம் உள்ளதாலும் பிற வகுப்பறைகள் செல்வோர் பாதிக்காத வகையில் பாதைகள் சீரமைப்பு, மின் விளக்குகள் அமைப்பு, வாகன நிறுத்தம், வேட்பாளர்களின் பிரதிநிதிகள், அவர்களுடன் வருவோர் காத்திருக்கும் பகுதி, குடிநீர், கழிப்பறை போன்றவற்றையும் புதுப்பித்தும், புதிதாக ஏற்படுத்தியும் வருகின்றனர்.

    • ஈரோடு எல்லாவற்றிற்கும் வழிகாட்டக்கூடிய ஒரு தனித்த அரசியல் களம்.
    • தமிழ்நாட்டில் உண்மையான செயல்படக்கூடிய அரசியல் கட்சிகள் எவை என்பதை மக்களுக்கு அடையாளம் காட்டக்கூடிய அளவில் இந்த தேர்தல் இருக்கும்.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    பேரறிஞர் அண்ணா நினைவு நாளான இன்று ஈரோட்டில் திராவிடர் கழகத்தின் சார்பில் சமூக நீதி, மாநில உரிமை, சேது சமுத்திர கால்வாய் திட்டம் இதையெல்லாம் மையப்படுத்தி பிரச்சாரத்தை ஈரோட்டில் தொடங்க இருக்கின்றோம்.

    அதற்கு முன்பாக வெற்றி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இல்லத்தில் திருமகன் ஈவெரா படத்திற்கு மாலை அணிவித்தேன். ஈரோடு எல்லாவற்றிற்கும் வழிகாட்டக்கூடிய ஒரு தனித்த அரசியல் களம். ஆகவே இடைத்தேர்தலில் நிச்சயமாக வெற்றி இருக்கும்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தும். திராவிட மாடல் ஆட்சியின் தமிழ்நாட்டில் உண்மையான செயல்படக்கூடிய அரசியல் கட்சிகள் எவை என்பதை மக்களுக்கு அடையாளம் காட்டக்கூடிய அளவில் இந்த தேர்தல் இருக்கும்.

    மிகப்பெரிய அரசியல் எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய ஒரு கட்சி இன்று அடமான பொருளாக மாறி இருக்கிறது. அதை பந்தாடிக் கொண்டிருக்கும் நிலை இருக்கிறது. அதற்கு விடை இந்த தேர்தலில் கிடைக்கும்.

    அண்ணாமலை, எடப்பாடி சந்திப்பு குறித்த கேள்விக்கு, எதுவாக இருந்தாலும் நட்ட கணக்கில் இருந்தவர்கள் மீள முடியாது. அடமான பொருள் எப்போது திரும்பி மீட்கிறார்களோ அப்போது தான் அவர்கள் எதிர்க்கட்சி என்ற தகுதியை கூட பெற முடியும். இல்லையென்றால் அதையும் இழக்க கூடிய சூழ்நிலையை இந்த தேர்தல் ஏற்படுத்தும். நாளை நடப்பதை யார் அறிவார் என்ற பாட்டு பாடக்கூடிய பரிதாப நிலையில் அ.தி.மு.க. இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எடப்பாடி தலைமையில் வெற்றி என்ற இலக்கை கிழக்கு தொகுதி அடையும்போது இந்தியாவே திரும்பி பார்க்க இருக்கிறது.
    • ஈரோடு அ.தி.மு.க.வின் எக்கு கோட்டை. இதை எவராலும் தகர்க்க முடியாது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் பணிக்குழு கூட்டம் கருங்கல்பாளையம் பகுதியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    எடப்பாடி தலைமையில் வெற்றி என்ற இலக்கை கிழக்கு தொகுதி அடையும்போது இந்தியாவே திரும்பி பார்க்க இருக்கிறது.

    மேலும் அனைவரும் இந்த இயக்கம் பிரிந்து இருக்கிறது என சொல்கிறார்கள். பிரிந்தவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தேடிப்பார்க்கின்ற அளவிற்கு இந்த இயக்கம் இருக்கிறது. நாங்கள் யாரும் பிரியவில்லை ஒன்றாக இணைந்திருக்கிறோம். ஒன்றாகவே இணைந்து பணிகளை செய்து வருகிறோம் என்பதற்கு இந்த தேர்தல் களம் அமைந்துள்ளது.

    தென் மாநிலமான தமிழகத்தில் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு அ.தி.மு.க.வின் எக்கு கோட்டை. இதை எவராலும் தகர்க்க முடியாது. கழகம் எப்படி பணியாற்றுகிறது என்பதை களப்பணிகளில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 2 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தென்னரசு ஒருமனதாக வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் தேர்தல் நடத்தை விதிமுறை மீறியதாக 28 வழக்குகள் போலீசாரால் பதிவு செய்யப்பட்டன.
    • இதுவரை ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் விதிமுறை மீறியதாக 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான உடனே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன. தேர்தல் நடத்தை விதிமுறை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் தேர்தல் நடத்தை விதிமுறை மீறியதாக 28 வழக்குகள் போலீசாரால் பதிவு செய்யப்பட்டன.

    இந்நிலையில் ஓட்டுக்கு பணம் நாட்டுக்கு அழிவு, பெரியார் மண் விற்பனைக்கு அல்ல என்ற போஸ்டரை ஈரோடு மாநகர பகுதி முழுவதும் ஆங்காங்கே ஒட்டியதாக மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் மீது ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதுவரை ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் விதிமுறை மீறியதாக 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    • தி.மு.க. கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.
    • பிரச்சாரத்திற்காக மு.க. ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி ஆகியோர் ஈரோடுக்கு வருகை தர உள்ளதால் அதற்கான அட்டவணை தயாராகி வருகிறது.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    திருமகன் ஈவெரா பொதுமக்களிடம், தொகுதி மக்களிடமும் நெருக்கமாக இருந்து வந்துள்ளார். அவர் பொதுமக்களிடம் பழகும் விதம். அணுகும் விதம் அமைதியாக இருக்கும்.

    குறுகிய காலத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் மேற்கொண்டார். நாங்கள் கடந்த 12 நாட்களாக வாக்கு சேகரிக்கும் போது பெண்கள் மிகவும் துயரத்துடன் திருமகன் மறைவை கூறி வேதனைப்பட்டு எங்கள் ஓட்டு உங்களுக்கு தான் என்று கூறி வருகின்றனர்.

    திருமகன் ஈவெரா நடவடிக்கையை முதலமைச்சர் சட்ட சபையில் நன்கு கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த முதலமைச்சர் உடனடியாக அன்று இரவு ஈரோட்டுக்கு கிளம்பி வந்தார். மறுநாள் எனக்கு போன் செய்து திருமகன் நினைவாக நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறினார்.

    அப்போது திருமகன் ஈவெரா வசித்த கச்சேரி வீதியை திருமகன் ஈவெரா வீதி என்று பெயர் மாற்றினார். நாங்கள் நிச்சயமாக இடைத் தேர்தலில் வெற்றி பெறுவோம்.

    நாளை தி.மு.க. கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். தேர்தல் பிரச்சாரத்திற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, கனிமொழி எம்.பி. ஆகியோர் ஈரோடுக்கு வருகை தர உள்ளனர். அதற்கான அட்டவணை தயாராகி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது அமைச்சர்கள் கே.என். நேரு, நாசர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • அக்கம்பக்கத்தில் உள்ள பொதுமக்கள் உதவியுடன் ஜீவாவை சுற்றி வளைத்து பிடித்து அந்தியூர் போலீசில் ஒப்படைத்தனர்.
    • ஆசிரியையின் சகோதரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜீவாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மைக்கேல்பாளையம் அரசு உதவி பெறும் பள்ளியில் நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண் தற்காலிக ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று அந்த ஆசிரியை பள்ளி முடிந்து அந்தியூர் புதுப்பாளையம் பகுதியில் இருந்து ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார். அப்போது அதே ஆட்டோவில் பயணம் செய்த குன்னூரை சேர்ந்த ஜீவா (35) என்பவர் திடீரென ஆசிரியையின் கழுத்தை கத்தியால் அறுத்தார்.

    இதில் வலி தாங்க முடியாத ஆசிரியை அலறி சத்தம் போட்டு கதறினார். இதைப்பார்த்த ஆட்டோ டிரைவர் ஆட்டோவை நிறுத்தியபோது ஜீவா தப்பியோட முயன்றார்.

    உடனடியாக அக்கம்பக்கத்தில் உள்ள பொதுமக்கள் உதவியுடன் ஜீவாவை சுற்றி வளைத்து பிடித்து அந்தியூர் போலீசில் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து படுகாயம் அடைந்த ஆசிரியையை, ஆட்டோ டிரைவர், அந்தியூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தார்.

    அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆசிரியை அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து ஆசிரியையின் சகோதரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜீவாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேர் திருவிழாவில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பக்தர்கள் 15 நாட்கள் விரதம் இருந்து குண்டம் இருந்து நேர்த்தி க்கடன் செலுத்துவது வழக்கம்.
    • தொடர்ந்து கரும்பு, விறகுகள் கொண்டு குண்டம் திறப்பு விழா செய்யப்பட்டு குண்டத்திற்கு தீ மூட்டப்பட்டது.

    கோபி

    கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கோரக்காட்டூர் கரிய காளியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழா வருடம் தோறும் தை மாதம் முதல் வாரம் தொடங்கும்.

    இந்த குண்டம் தேர் திருவிழாவில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பக்தர்கள் 15 நாட்கள் விரதம் இருந்து குண்டம் இருந்து நேர்த்தி க்கடன் செலுத்துவது வழக்கம்.

    அந்த வகையில் இந்த ஆண்டிற்கான குண்டம் தேர் திருவிழா கடந்த மாதம் 18-ந் தேதி பூச்சாட்டுகளுடன் தொடங்கியது. தொடர்ந்து தீர்த்தம் கொண்டு வருதல், முதல் கால பூஜை, காப்பு கட்டுதல், கொடியேற்றம், சந்தன காப்பு, சுமங்கலி யாக பூஜை, உள்ளிட்டு பல்வேறு வழிபாடுகள் செய்யப்பட்டது.

    பின்னர் நேற்று இரவு மாடு கரும்பு கொண்டு வருதல், மாவிளக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கரும்பு, விறகுகள் கொண்டு குண்டம் திறப்பு விழா செய்யப்பட்டு குண்டத்திற்கு தீ மூட்டப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதனை யொட்டி அதிகாலை அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின் குதிரையிடம் வாக்கு கேட்ட பின்பு திருகோடி ஏற்றப்பட்டது.

    அதனை தொடர்ந்து தலைமை பூசாரி சதீஷ்குமார் குண்டத்திற்கு பூஜை செய்து இறங்கி தொடங்கி வைத்தார். தொடர்ந்து கோரக்காட்டூர், கடுக்காயம்பாளையம், கொளத்துப்பாளையம், புளியகாட்டூர், ஐய்யம்புதூர், வெள்ளாங்கோவில் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் கையில் வேப்பிலையுடனும், அக்கினி சட்டியுடன் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.

    • யாகோபு குடும்பத்தை கவனிக்காமல் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியையும், மகனையும் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
    • விமலா தனது மகனுடன் கடந்த 15 வருடங்களாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

    ஈரோடு

    ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பாலாஜி கார்டன் பகுதியை சேர்ந்தவர் விமலா (49). இவரது கணவர் யாகோபு (54).

    இந்நிலையில் யாகோபு குடும்பத்தை கவனிக்காமல் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியையும், மகனையும் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

    இதனால் விமலா தனது மகனுடன் கடந்த 15 வருடங்களாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

    யாகோபு தங்களது பழைய வீடு இருக்கும் வெள்ளோடு சி.எஸ்.ஐ. காலனியில் வசித்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் விமலாவை போன் மூலமாக தொடர்பு கொண்ட யாகோபுவின் சகோதரர் சி.எஸ்.ஐ. காலனியில் உள்ள அவர்களது பழைய வீட்டில் யாகோபு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மனைவி விமலா அளித்த புகாரின் பேரில் வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சத்தியமங்கலம் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகில் மோட்டர் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
    • அவர்களிடம் சட்ட விரோதமாக விற்பனை செய்ய 15 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    ஈரோடு

    சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி, பங்களாபுதூர் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டிருந்தனர்.

    அப்போது சத்தியமங்கலம் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகில் மோட்டர் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர்கள் அதிக விலைக்கு விற்பதற்காக மது பாட்டில்களை எடுத்துச் செல்வது தெரியவந்தது.

    விசாரணையில் அவர்கள் கோபி, டி.என்.பாளையத்தை சேர்ந்த நன்மணி முத்து (25), ரவிவர்மா (31) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து பங்களாபுதூர் போலீசார் அவர்கள் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து 39 மதுபாட்டில்கள் மற்றும் மோட்டார்சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல பழனிகவுண்டம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படு வதாக கடத்தூர் போலீசா ருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    அதன்பேரில் அங்கு சென்ற போலீசாரை கண்டவுடன் மொபட்டில் தப்பி செல்ல முயன்ற நபர்களை மடக்கிப் பிடித்து சோதனையிட்டனர்.

    அப்போது அவர்களிடம் சட்ட விரோதமாக விற்பனை செய்ய 15 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    விசாரணையில் சிவங்கங்கை மாவட்டம், தேவகோட்டையை அடுத்துள்ள கண்டியூரை சேர்ந்த விக்னேஷ்வரன், கோவை ரத்தினபுரியை சேர்ந்த பசுபதி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து பங்களாபுதூர் போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து 15 மதுபாட்டில்கள், மொபட் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    • மதன்குமார் சில நாட்களாக மன உளை ச்சலில் இருந்துள்ளார்.
    • டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு 

    ஈரோடு சிதம்பரம் காலனியை சேர்ந்தவர் மதன்குமார் (29). திருமணமாக வில்லை. இவர் கடந்த ஒரு வருடமாக பல்வேறு இடங்களில் கடன் வாங்கியுள்ளார்.

    மேலும் கடனை அடைப்பதற்காக தனது மோட்டார் சைக்கிள், தான் அணிந்திருந்த தங்க செயினையும் அடமானம் வைத்தும் அவரால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை.

    இதனால் மதன்குமார் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு மதன் குமார் தற்கொலை செய்ய முடிவு எடுத்து வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு கொண்டார்.

    அப்போது வெளியே சென்று வந்த அவரது பெற்றோர் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மதன்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கோவிலில் உள்ள விமானங்கள், கருவறை, மகா மண்டபம் ஆகியவை பழுது பார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.
    • விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கோபுர கலசங்கள் வைத்தல், முதல் கால யாக பூஜை, நடந்தது.

    சென்னிமலை, 

    சென்னிமலை டவுன், காங்கேயம் ரோடு, ஐயப்பா நகரில் அய்யப்பன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் உள்ள விமானங்கள், கருவறை, மகா மண்டபம் ஆகியவை பழுது பார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.

    பின்னர் இதற்கான கும்பாபிஷேக விழா நேற்று கணபதி ஹோமத்துடன் தொடங்கி நவக்கிரக ஹோமம், தன பூஜை, கோ பூஜை, நடந்தது.

    பக்தர்கள் கொடிவேரி சென்று தீர்த்தம் கொண்டு வந்தனர். பின்னர் தீர்த்த குடங்களுடன் பக்தர்கள் அரச்சலூர் ரோட்டில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு 4 ராஜ வீதிகள் வழியாக வலம் வந்து ஐயப்பா நகரில் உள்ள கோவிலுக்கு சென்றனர்.

    அங்கு விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கோபுர கலசங்கள் வைத்தல், முதல் கால யாக பூஜை, நடந்தது. தொடர்ந்து இன்று காலை 2-ம் கால யாக பூஜையும், மாலை 3-ம் கால யாக பூஜைகள் நடக்கிறது.

    கும்பாபிஷேக விழா நாளை (வெள்ளிக்கிழமை) காலை நடக்கிறது.

    கும்பாபிஷேகத்தை ஐயப்ப சாமி கோவில் அர்ச்சகர் ஜி.மணிவாசக குருக்கள் தலைமையில் தபராஜ் சிவாச்சாரியார், ராஜேஷ் சிவாச்சாரியார் ஆகியோர் நடத்தி வைக்கிறார்கள்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய திருப்பணி குழுவினர் மற்றும் ஐயப்ப பக்தர்கள் வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    • ஈரோட்டில் உள்ள உள்ளூர் கட்சிக்காரர்களுக்கும் பொறுப்பாளர்கள் தான் பணம் செலவழிக்கின்றனர்.
    • ஈரோடு இடைத்தேர்தலில் பணம் தண்ணீராக செலவு செய்யப்பட்டு வருவதால் அங்கு பணப்புழக்கம் அதிகரித்து உள்ளது.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனுதாக்கல் தொடங்கி விட்டதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது.

    இந்த தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.

    அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு அறிவிக்கப்பட்டு உள்ளார். ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் செந்தில்முருகன் நிறுத்தப்பட்டு உள்ளார். அ.ம.மு.க. கட்சி சார்பில் சிவபிரசாந்த் அறிவிக்கப்பட்டு உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நவநீதன் போட்டியிடுகிறார்.

    வேட்பு மனுதாக்கலுக்கு 7-ந்தேதி கடைசி நாள் என்பதால் ஒவ்வொரு கட்சி நிர்வாகிகளும் ஈரோட்டில் முகாமிட்டு தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

    இதற்காக வெளியூர்களில் இருந்து ஒவ்வொரு கட்சி சார்பிலும் ஏராளமான நிர்வாகிகள் ஈரோட்டில் முகாமிட்டு உள்ளனர்.

    தி.மு.க.வில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மாவட்டச் செயலாளர்கள், வாரிய தலைவர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் தங்களது ஆதரவாளர்கடன் தங்கி உள்ளனர். காங்கிரஸ் கட்சியிலும் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட தலைவர்கள், ஈரோட்டில் முகாமிட்டு உள்ளனர்.

    அ.தி.மு.க.விலும் எடப்பாடி பழனிசாமி அணியில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முகாமிட்டு தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் ஒவ்வொரு கட்சியிலும் தலைமைக் கழக நிர்வாகிகள் முதற்கொண்டு கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் உள்ளவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஏரியாவுக்கு சென்று தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு தொகுதியில் 238 வாக்குச்சாவடிகள் உள்ளதால் ஒவ்வொரு கட்சியிலும் முக்கியஸ்தர்களுக்கு 10, 15 வாக்குச்சாவடிகள் என்ற வகையில் பிரித்து கொடுக்கப்பட்டு உள்ளது.

    அந்த பட்டியலுக்கு ஏற்ப சமுதாய ஓட்டுகள் எவ்வளவு என்ற விவரமும் அவர்கள் கைவசம் உள்ளது. இந்த பட்டியலுக்கு ஏற்ப கட்சி நிர்வாகிகளை அனுப்பி வாக்குகள் கேட்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    அங்கு சென்றுள்ள அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் முதற்கட்டமாக உள்ளூர் கட்சிக்காரர்கள், கூட்டணி கட்சிக்காரர்களிடம் ஆலோசனை நடத்தி செயல்வீரர்கள் கூட்டம் நடத்தி முடித்துள்ளனர்.

    இதன் அடுத்தகட்டமாக வாக்குச்சாவடி வாரியாக வாக்காளர் பட்டியலை வைத்து கொண்டு வீடு வீடாக கட்சி நிர்வாகிகள் சரி பார்த்து வருகின்றனர்.

    யாரும் வீடு மாறி இருக்கிறார்களா? அல்லது அதே முகவரியில் வசிக்கிறார்களா? என்பதை உறுதிப்படுத்தி வருகின்றனர். இந்த பணிகளை மேற்பார்வையிட ஒவ்வொரு கட்சியிலும் கட்சி நிர்வாகிகள் ஈரோட்டில் முகாமிட்டு உள்ளனர்.

    ஒவ்வொரு 'பூத்' வாரியாக கட்சி நிர்வாகிகள் பணியாற்றி வருவதால் அவர்களுக்கு தினமும் 3 வேளை சாப்பாடு, 500 ரூபாய் பணம் கொடுக்கப்படுகிறது. இரவில் தினமும் மதுவும் உண்டு.

    கட்சி நிர்வாகிகளை யார் அழைத்து வந்திருக்கிறார்களோ அவர்கள்தான் இதை செலவை செய்து வருகின்றனர். அந்த வகையில் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், முன்னாள் அமைச்சர்களுக்கு தினமும் ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் வரை செலவாகிறது.

    செயல்வீரர்கள் கூட்டம் நடத்தினால் அதற்கு குறைந்தபட்சம் ரூ.1½ லட்சம் செலவு செய்யப்படுகிறது. இந்த செலவுகள் அனைத்தும் அந்த பகுதியை கவனித்து கொள்ளும் பொறுப்பாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். அந்த வகையில் தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சியிலும் ஒவ்வொரு பிரமுகர்களும் பணத்தை செலவு செய்து வருகின்றனர்.

    ஈரோட்டில் உள்ள உள்ளூர் கட்சிக்காரர்களுக்கும் பொறுப்பாளர்கள் தான் பணம் செலவழிக்கின்றனர். இதனால் ஒவ்வொருவருக்கும் பணம் அதிகமாக செலவாகி வருகிறது.

    இதுகுறித்து கட்சி நிர்வாகி ஒருவர் கூறுகையில், "தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு பிரமுகர்களுக்கும் குறைந்தபட்சம் 10 லட்சத்தில் இருந்து 50 லட்சம் வரை செலவாகிறது.

    ஓட்டுக்காக கொடுக்கப்படும் மட்டும் பணம் தான் கடைசியில் தருவார்கள். மற்ற செலவுகள் அனைத்தையும் அந்தந்த பகுதி பொறுப்பாளர்கள்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    கட்சி பதவிக்கு ஏற்ப பொறுப்புக்கு ஏற்ப ஒவ்வொருவரும் செலவு செய்து வருகின்றனர். இது தவிர்க்க முடியாத ஒன்று" என்றார்.

    இதனால் ஈரோடு இடைத்தேர்தலில் பணம் தண்ணீராக செலவு செய்யப்பட்டு வருவதால் அங்கு பணப்புழக்கம் அதிகரித்து உள்ளது.

    ×