என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலிபர் தற்கொலை
- மதன்குமார் சில நாட்களாக மன உளை ச்சலில் இருந்துள்ளார்.
- டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு
ஈரோடு சிதம்பரம் காலனியை சேர்ந்தவர் மதன்குமார் (29). திருமணமாக வில்லை. இவர் கடந்த ஒரு வருடமாக பல்வேறு இடங்களில் கடன் வாங்கியுள்ளார்.
மேலும் கடனை அடைப்பதற்காக தனது மோட்டார் சைக்கிள், தான் அணிந்திருந்த தங்க செயினையும் அடமானம் வைத்தும் அவரால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை.
இதனால் மதன்குமார் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு மதன் குமார் தற்கொலை செய்ய முடிவு எடுத்து வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு கொண்டார்.
அப்போது வெளியே சென்று வந்த அவரது பெற்றோர் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மதன்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






