என் மலர்
ஈரோடு
- நடைபாதை கற்கள் சூடாகி பக்தர்களின் பாதங்களை பதம் பார்த்தது.
- தார் ரோடு பகுதியில் அடர் வெள்ளை வர்ணம் அடித்துள்ளனர்.
சென்னிமலை:
சென்னிமலை முருகன் கோவிலில் தினமும் 6 கால பூஜைகள் நடக்கிறது. மேலும் தொடர்ந்து பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா வருகிறது.
இந்நிலையில் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் பள்ளி விடுமுறை தினத்தால் குழந்தைகளுடன் வந்து பூஜைகளில் பங்கேற்று சாமி தரிசனம் செய்கின்றனர்.
இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு வெகு தூரம் நடக்க வேண்டும்.
இந்த இடத்தில் தார் ரோடு வெட்ட வெளியாக உள்ளதால் தற்போது வெயில் தாக்கத்தில் சூடாகி நடக்க மிகவும் சிரமப்பட்ட னர். மேலும் கோவில் பரிகாரத்திலும் நடைபாதை கற்கள் சூடாகி பக்தர்களின் பாதங்களை பதம் பார்த்தது.
குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் மிகவும் சிரமப்பட்டனர். இதையறிந்த கோவில் நிர்வாகம் வெயில் தாக்கத்தை கட்டுப்படுத்த கோவில் உள் பிரகாரம் பகுதியில் காயர் மேட் போட்டுள்ளனர்.
கோவில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் இருந்து செல்ல தார் ரோடு பகுதியில் அடர் வெள்ளை வர்ணம் அடித்துள்ளனர்.
இது வெயிலுக்கு இதமாக இருப்பதாகவும், அதிக சூடு கால் பாதங்களில் தாக்குவது இல்லை எனவும் பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
- 7,200-க்கும் மேற்பட்டோர் மாதாந்திர ஓய்வூதியம் பெறுகின்றனர்.
- ஆயுள் சான்றை உரிய ஆவணங்களை பதிவேற்றி இணைய வழி விண்ணப்பிக்க வேண்டும்.
ஈரோடு:
கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலா ளர்கள் தொடர்பான 18 அமைப்புசாரா தொழிலா ளர்கள் நலவாரியங்களில் பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனுக்கள் போன்ற அனைத்து விண்ணப்பங்க ளும் tnuwwb.tn.gov.in என்ற தொழிலாளர் துறை இணைய தளம் வாயிலாக பெறப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் இந்நலவாரியங்களில் 60 வயது நிறைவடைந்த 7,200-க்கும் மேற்பட்டோர் ஓய்வூதியதாரர்களாக மாதாந்திர ஓய்வூதியம் பெறுகின்றனர்.
ஆண்டு தோறும் ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்றை உரிய ஆவணங்களை பதிவேற்றி இணைய வழி விண்ண ப்பிக்க வேண்டும்.
2023–-24-ம் ஆண்டுக்காக வரும் 30-ந் தேதிக்குள் https://tnuwwb.tn.gov.in/applicationlives/applicationlive என்ற இணைய தள முகவரியில் சமர்பிக்க வேண்டும்.
ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, ஓய்வூதிய உத்தரவு நகல், புகைப்படம்–1, வங்கி புத்தக நகல், நடப்பு மாதம் வரை வரவு–செலவு பரிவர்த்தனை விபரம் அடங்கிய விபரங்களை பதிவு பெற்ற தொழிற்சங்கம் அல்லது இ–சேவை மையம் அல்லது சி.எஸ்.சி. கணினி மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலக தொலைபேசி எண்:0424-2275591, 2275592 மூலம் அல்லது அலுவலக மின்னஞ்சல்: losserode@gmail.com மூலம் தொடர்பு கொள்ளலாம்.
இத்தகவலை, தொழிலா ளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) முருகேசன் வெளியி ட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மது கடைகள் மூடப்பட்டிருக்கும்.
- இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறியுள்ளார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு 'மது விற்பனை இல்லாத நாளாக" அனுசரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து வரும் 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இயங்கும் பார்கள், கிளப்கள் மற்றும் ஓட்டல்களில் உள்ள பார்கள் ஆகியவை மூடப்பட்டிருக்கும்.
அன்றைய தினங்களில் மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது என்றும், அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.
- தமிழகத்தை பொறுத்தவரை எப்போதும் வேலூர், சேலம் மாவட்டத்தில் தான் அதிகபட்சமாக வெயிலின் தாக்கம் இருக்கும்.
- இந்த ஆண்டு மாறாக ஆரம்பத்தில் இருந்தே ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.
ஈரோடு:
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிய ஆரம்ப நிலையிலேயே பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் அளவு புதிய உச்சத்தில் பதிவாகி வருகிறது.
தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருவதால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 6 மணி வரை நீடிக்கிறது. குறிப்பாக காலை 11 மணி முதல் மதியம் 4 வரை வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
இதேபோல் வீடுகளில் கடுமையான புழுக்கம் நிலவி வருகிறது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் சொல்ல முடியாத துயரத்தை அனுபவித்து வருகின்றனர். வெயில் தாக்கம், அனல் காற்று போன்றவற்றால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை எப்போதும் வேலூர், சேலம் மாவட்டத்தில் தான் அதிகபட்சமாக வெயிலின் தாக்கம் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு மாறாக ஆரம்பத்தில் இருந்தே ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் வெயில் 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வருகிறது.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் 103.01 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. இந்நிலையில் நேற்று புதிய உச்சமாக மாலை 3 மணி முதல் 4 மணி வரை சத்தியமங்கலம், பவானிசாகர், ஈரோட்டில் ஒரு மணி நேரத்தில் 107 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. மதிய நேரம் வெளியே செல்லும்போது தீப்பிடிப்பது போல் இருப்பதால் மக்கள் வெளியே நடமாடுவதை குறைத்து விட்டனர். கோவை, சேலம் போன்ற அண்டை மாவட்டங்களில் வெயில் பதிவாகி வந்தாலும் அவ்வப்போதும் மழை பெய்து வருகிறது. ஆனால் ஈரோடு மாவட்டத்தில் பேரளவுக்கு மட்டுமே இதுவரை மழை பதிவாகியுள்ளது. ஆனால் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இது குறித்து தமிழ்நாடு வேளாண் பல்கலை கழக கால நிலை ஆராய்ச்சி தலைவர், பேராசிரியர் ராமநாதனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக தானியங்கி வானிலை ஆய்வு மைய தரவு படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று மாலை 3 மணி முதல் 4 மணி வரை ஒரு மணி நேரத்தில் ஈரோட்டில் 107 டிகிரி (பாரன் ஹீட்) வெயில் பதிவாகி உள்ளது. தொடர்ந்து இதே போல் 10 நாட்கள் கண்காணித்தால் தான் வெயில் தாக்கத்துக்கான காரணம் தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் கரும்பு பால், இளநீர், மோர், குளிர்பானங்களை விரும்பி பருகி வருகின்றனர். இதேபோல் தர்பூசணி, வெள்ளரிக்காய் வியாபாரமும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தற்போதே வெயிலின் தாக்கம் இந்த அளவுக்கு இருக்கும் போது, ஏப்ரல், மற்றும் மே மாதம் அக்னி நட்சத்திரம் காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என மக்கள் இப்போதே அச்சப்பட தொடங்கியுள்ளனர்.
- டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் தண்டு மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் சாக்கு மூட்டையில் இருந்து துர்நாற்றம் வீசியது.
- செல்போன் மூலம் துப்பு துலக்கியபோது லோகேஷ் அடிக்கடி ஸ்வேதாவிடம் பேசியது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் போலீசார் லோகேஷை கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நாயக்கன்காடு பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி மஞ்சுளாதேவி. இவர்களது மகள் ஸ்வேதா (21). இவர் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 28-ந்தேதி வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற மாணவி மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் மாணவியை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து மாணவியின் தாய் மஞ்சுளாதேவி கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர்.
இதற்கிடையே நேற்று முன்தினம் மாலை கோபிசெட்டிபாளையத்தில் இருந்து 20 கி.மீட்டர் தூரத்தில் உள்ள டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் தண்டு மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் சாக்கு மூட்டையில் இருந்து துர்நாற்றம் வீசியது.
இதுபற்றி தெரியவந்ததும் பங்களாபுதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிணற்றில் மிதந்த சாக்கு மூட்டையை மீட்டனர். அப்போது அதில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பிணமாக கிடப்பது தெரிய வந்தது. போலீசாரின் விசாரணையில் பிணமாக கிடந்தது மாயமான கல்லூரி மாணவி ஸ்வேதா என்று தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாணவியின் பெற்றோரை வரவழைத்து உறுதி செய்தனர்.
மேலும் மாணவியை தெரிந்த நபர்கள் யாரோ அழைத்து வந்து அவரை கொலை செய்து கிணற்றில் வீசி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் மாணவியின் உடலை பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே மாணவி சாவு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது மாணவியிடம் அடிக்கடி செல்போனில் பேசிய கொங்கர்பாளையம் தண்டு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த வைதேகி-வீறுச்சாமி ஆகியோரின் மகன் லோகேஷ் (23) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்தான் மாணவியின் உடலை கிணற்றில் சாக்கு மூட்டையில் கட்டி வீசியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். போலீசில் லோகேஷ் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
ஸ்வேதா கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும்போது நான் அதே கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்தேன். அப்போது எங்களுக்கிடையே காதல் ஏற்பட்டது. நான் தற்போது கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறேன்.
நாங்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தோம். இதில் ஸ்வேதா கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து ஸ்வேதா என்னிடம் வீட்டுக்கு தெரிந்தால் விபரீதம் ஆகி விடும் என்று கூறி என்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். நானும் இந்த விஷயம் எங்கள் வீட்டிற்கு தெரிந்தால் பிரச்சினை ஆகி விடும் என்று கூறி ஸ்வேதாவை திருமணம் செய்து கொள்வதாக காலம் தாழ்த்தி வந்தேன்.
ஸ்வேதா 4 மாத கர்ப்பிணியாக இருந்ததால் வீட்டில் வாந்தி எடுத்துள்ளார். இதனால் இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் பிரச்சினை ஆகி விடும் என்று கருவை கலைக்க முடிவு செய்தோம்.
அதன்படி கடந்த 28-ந்தேதி காலை கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு ஸ்வேதா கோபிசெட்டிபாளையம் வந்தார். பின்னர் நாங்கள் 2 பேரும் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றோம். அங்கு ஸ்வேதாவை பரிசோதனை செய்த டாக்டர் 4 மாத கருவாக இருப்பதால் கருவை கலைக்க முடியாது என்று கூறி விட்டனர். இதைக்கேட்டு மனம் உடைந்த ஸ்வேதா என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பினார். இதையடுத்து நான் கோவையில் இருந்து கொங்கர்பாளையத்தில் உள்ள எனது பாட்டி வீட்டிற்கு ஸ்வேதாவை அழைத்து சென்றேன்.
அப்போது மாலை 5 மணி அளவில் அவரது பெற்றோர் தொடர்பு கொண்டபோது ஸ்வேதா நான் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம் வந்து விட்டேன். வீட்டிற்கு வந்து விடுகிறேன் என்று கூறினார். அந்த நேரத்தில் ஸ்வேதாவிடம் உணவு வாங்கி கொண்டு வருவதாக கூறி விட்டு வெளியே சென்றேன்.
பின்னர் மீண்டும் வந்தபோது ஸ்வேதா தனது துப்பட்டாவால் தூக்கு மாட்டி பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த நான் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பம் அடைந்தேன். இதுபற்றி வெளியே தெரிந்தால் போலீசார் என்னை கைது செய்து விடுவார்கள் என்று பயந்து ஒரு சாக்கு மூட்டையில் ஸ்வேதாவின் கை, கால்களை கட்டி இரவு 9 மணி அளவில் யாரும் இல்லாத நேரத்தில் கிணற்றில் வீசி விட்டு வந்து விட்டேன்.
செல்போன் மூலம் துப்பு துலக்கியபோது நான் அடிக்கடி ஸ்வேதாவிடம் பேசியது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் போலீசார் என்னை கைது செய்தனர்.
இவ்வாறு அவர் போலீசில் வாக்குமூலமாக அளித்துள்ளார்.
இதையடுத்து போலீசார் லோகேஷை கோபிசெட்டிபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
- சிவகுமார் தூக்குபோட்டு தொங்கி கொண்டு இருந்தார்.
- கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மேவாணி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 22). கூலி தொழிலாளி.
இவர் நேற்று முன்தினம் ஒரு இளம்பெண்ணை அவரது வீட்டுக்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து விசாரித்தனர்.
அப்போது அந்த பெண்ணுக்கு திருமணமாகி 20 நாட்கள் தான் ஆகிறது. அந்த பெண் அவரது கணவருடன் வாழ பிடிக்காமல் சிவகுமா ருடன் வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சிவகுமார் அந்த பெண்ணை அவரது தாய் வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டார்.
அதன் பிறகு அவர் வீட்டுக்கு வரவில்லை. அவரை அவரது உறவினர்கள் தேடி வந்தனர். அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை.
இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் உள்ள வேப்பமரத்தில் சிவகுமார் தூக்குபோட்டு தொங்கி கொண்டு இருந்தார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பாபு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
- போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நாகர்பா ளையம் பகுதியை சேர்ந்தவர் பாபு. அதே பகுதியை சேர்ந்த 17வயது சிறுமி ஈரோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் அந்த மாணவியிடம் பாபு ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து பாபு அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து கோபிசெட்டிபாளையம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்ய ப்பட்டது. இன்ஸ்பெக்டர் மேனகா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதில் பாபு மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பாபுவை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- குண்டம் விழா 4-ந் தேதி அதிகாலை நடக்கிறது.
- பக்தர்கள் எரிகரும்புகளை கோவிலில் காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கேரளா மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
பண்ணாரி யம்மன் கோவில் குண்டம் விழா மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாகும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்குவார்கள்.
இந்தாண்டுக்கான பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா கடந்த 20-ந் தேதி பூச்சாட்டு விழாவுடன் தொடங்கி நடந்து வருகிறது.
இதையொட்டி தினமும் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செயய்ப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்து வருகிறார்கள்.
விழாவையொட்டி பண்ணாரியம்மன் சப்பரம் திருவீதி உலா நடந்தது. வீதிஉலா பல்வேறு கிராமங்க ளுக்கு சென்றது. அப்போது பக்தர்கள் புனிதநீர் ஊற்றி அம்மனை வழிபட்டனர்.
தொடர்ந்து அம்மன் சப்பரம் மீண்டும் கோவிலுக்கு வந்தடைந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா வருகிற 4-ந் தேதி (செவ்வா ய்க்கிழமை) அதிகாலை நடக்கிறது.
இதில் லட்சக்க ணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பா ர்க்கப்படுகிறது. விழாவை யொட்டி முன்னதாக 3-ந் தேதி இரவு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு குண்டம் வளர்க்கப்படுகிறது.
இதையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்து வருகிறார்கள்.
மேலும் பக்தர்கள் வேண்டுதல்களை நிறை வேற்றும் வகையில் எரிகரும்பு களை (விறகுகள்) கோவிலில் காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள்.
இதனால் கோவில் வளாகத்தில் எரி கரும்புகள் குவிந்து வருகிறது.
- சிவபாலசுப்பிரமணியம் மூச்சு பேச்சின்றி தரையில் கிடந்துள்ளார்.
- பரிசோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
ஈரோடு:
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவபாலசுப்பிரமணியம் (67).
இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே வண்ணாங்காட்டு வலசு பகுதியில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் காவலாளியாக பணியாற்றி அருகில் உள்ள மூலக்கரை பகுதியில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்ற சிவபால சுப்பிர மணியம் தனக்கு உடல் நிலை சரியில்லை என மில்லில் வேலை பார்க்கும் மேற்பார்வையாளர் பாஸ்கரனிடம் கூறியுள்ளார்.
பின்னர் பணி முடிந்து தான் தங்கியிருக்கும் அறைக்கு சென்றவர் மறு நாள் வேலைக்கு செல்லவில்லை. மேற்பார்வையாளர் பாஸ்கரன் போன் செய்து பார்த்தும் சிவபாலசுப்பிரமணியம் போனை எடுக்கவில்லை.
இதையடுத்து மில்லில் வேலை பார்க்கும் 2 பேரை அனுப்பி சிவபால சுப்பிர மணியம் தங்கி இருக்கும் அறைக்கு சென்று பார்த்து வருமாறு பாஸ்கரன் அனுப்பி வைத்துள்ளார்.
அவர்கள் அறைக்கு சென்று பார்த்தபோது சிவபால சுப்பிரமணியம் மூச்சு பேச்சின்றி தரையில் கிடந்து ள்ளார்.
உடனடியாக அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் சிவபால சுப்பிரமணியம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து மில் மேற்பார்வையாளர் பாஸ்கர் அளித்த புகாரின் பேரில் பெருந்துறை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கோபால்சாமி களைக்கொல்லி மருந்தை மதுவில் கலந்து குடித்து விட்டார்.
- திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே திங்களூர் அடுத்துள்ள நிச்சாம் பாளையம் ராம நாயக்க னூரை சேர்ந்தவர் கோபால்சாமி (26).
இவருக்கு திருமணமாகி 6 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. கோபால் சாமிக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு 10 மணியளவில் கோபால்சாமி மது போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். இது குறித்து அவரது மனைவி அவரிடம் சண்டை போட்டுள்ளார்.
இதையடுத்து வீட்டில் இருந்து வெளியேறிய கோபால்சாமி விவசாய பயிருக்கு தெளிக்கும் களைக் கொல்லி மருந்தை (விஷம்) மதுவில் கலந்து குடித்து விட்டார்.
இது குறித்து தகவலறிந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு, ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனை யில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த கோபால் சாமியை மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே கோபால்சாமி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நெசவாளர் கூலிக்கும் அரசிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
- மருத்துவ காப்பீட்டுத் திட்டமும் நடை முறையில் இல்லை.
சென்னிமலை:
ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவாளர் சம்மே ளன தலைவரும், மாவட்ட தி.மு.க. நெசவாளர் அணி அமைப்பாளருமான ராஜேந்திரன் முதல்-அமைச்சருக்கு அனுப்பி யுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
கைத்தறி நெசவு தொழில் என்பது நூற்றாண்டு பாரம்பரிய மிக்க அரிய குடிசை தொழில். சிறு தொழிலாகும். தற்சமயம் கைத்தறி நெசவு கூட்டுறவு அமைப்பின் கீழ் அரசை நம்பி மட்டுமே நடந்து வருகிறது.
தொழில்துறை மாற்றங்கள் மற்றும் நவீன விசைத்தறிகளின் வருகை யால் கைத்தறி நெசவை மெல்ல மெல்ல அழியும் நிலைக்கு கொண்டு சென்று உள்ளது.
தொழில் துறை மாற்ற ங்கள் ஒருபுறம் இருந்தாலும் அவர்களது உழைப்பிற்கேற்ற ஊதியம் இன்றளவும் கிடைக்க பெறாததும் கைத்தறி நெசவின் அழி விற்கு முக்கிய காரணமாகும்.
எனவே நெசவாளர்களது உழைப்பிற்கேற்ற ஊதியத்தை பெற்று தர வேண்டியது நம் எல்லோ ருடைய முக்கிய கடமை யாகும். நெசவாளர்களுக்கு கூலியை அரசுதான் வழங்கி வருகிறது.
நெசவாளர் கூலிக்கும் அரசிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
நெசவாளர் சங்கங்களில் நிதி ஆயிரத்திலிருந்து தான் கூலி வழங்கபடுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே நெசவாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இது மிகவும் வருந்தத்தக்க செயலாகும். நெசவாளர் ஊதியத்திற்கும், அரசிற்கும் எவ்வித தொடர்பும் இல்லாத நிலையில் எதற்காக ஊதிய உயர்வு வழங்கும் நிலையை அரசு தன்கட்டுப் பாட்டில் வைத்து கொண்டு உள்ளது.
ஊதிய உயர்வை வழங்கும் நிலையை அரசு தன் கட்பாட்டிலிருந்து மாற்றி கூட்டுறவு சங்கங் களின் மண்டல அல்லது சரக அளவில் முடிவு செய்து கொள்ள உரிய அனுமதியை உடனடியாக வழங்கிட தங்களை அன் போடு கேட்டுக் கொள்கிறோம்.
இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கை கூட்டத் தொடரில் கைத்தறி நெசவா ளர்களுக்கு 20 சதவீத கூலி உயர்வை வழங்க அரசானை வெளியிட ஆவண செய்ய வேண்டும்.
தற்சமயம் தமிழக கைத்தறி நெசவாளர்களுக்கு எவ்வித மருத்துவ காப்பீட்டுத் திட்டமும் நடை முறையில் இல்லை.
கடந்த காலங்களில் மாநில அரசின் பங்களிப்போடு மத்திய அரசின் மூலம் ஆண்டு ஒன்றிக்கு ரூ.30 ஆயிரம் வரை மருத்துவ காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் இருந்தது.
தற்சமயம் கைத்தறி நெசவில் ஈடுபட்டு உள்ளவர்கள் 60 வயதை நெருங்கியவர்களும் அதனை தாண்டியவர்களும் உள்ளனர்.
மருத்துவ செலவினங்களுக்காக மாதம் ஒன்றுக்கு குறைந்தது ரூ.300 வரை செலவு செய்ய வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.
இதை அறிந்து தான் தமிழக அரசே நெசவாளர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த நடைமுறை படுத்த கடந்த ஆண்டே அறிவிப்பு வழங்கி இருந்தது.
எனவே இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரிலாவது புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தி அரசைமட்டும் நம்பி வாழும் தமிழக கைத்தறி நெசவா ளர்கள் குடும்பங் களை காப்பாற்ற வேண்டுகி–றோம்.
இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.
- அணையின் நீர்மட்டம் 89.63 அடியாக குறைந்து உள்ளது.
- அணையில் இருந்து 3,100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 89.63 அடியாக குறைந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,156 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்காக வினாடிக்கு 2,300 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதேபோல் காளிங்கராயன் பாசனத்தி ற்காக 600 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து 3,100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.






