என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "for liquor shops"

    • மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மது கடைகள் மூடப்பட்டிருக்கும்.
    • இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறியுள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு 'மது விற்பனை இல்லாத நாளாக" அனுசரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதனைத் தொடர்ந்து வரும் 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இயங்கும் பார்கள், கிளப்கள் மற்றும் ஓட்டல்களில் உள்ள பார்கள் ஆகியவை மூடப்பட்டிருக்கும்.

    அன்றைய தினங்களில் மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது என்றும், அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

    இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

    ×