மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை

கோபால்சாமி களைக்கொல்லி மருந்தை மதுவில் கலந்து குடித்து விட்டார்.திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே திங்களூர் அடுத்துள்ள நிச்சாம் பாளையம் ராம நாயக்க னூரை சேர்ந்தவர் கோபால்சாமி (26).

இவருக்கு திருமணமாகி 6 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. கோபால் சாமிக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு 10 மணியளவில் கோபால்சாமி மது போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். இது குறித்து அவரது மனைவி அவரிடம் சண்டை போட்டுள்ளார்.

இதையடுத்து வீட்டில் இருந்து வெளியேறிய கோபால்சாமி விவசாய பயிருக்கு தெளிக்கும் களைக் கொல்லி மருந்தை (விஷம்) மதுவில் கலந்து குடித்து விட்டார்.

இது குறித்து தகவலறிந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு, ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனை யில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த கோபால் சாமியை மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே கோபால்சாமி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com