ஸ்பின்னிங்மில் காவலாளி திடீர் சாவு

சிவபாலசுப்பிரமணியம் மூச்சு பேச்சின்றி தரையில் கிடந்துள்ளார்.பரிசோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
ஸ்பின்னிங்மில் காவலாளி திடீர் சாவு
Published on

ஈரோடு:

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவபாலசுப்பிரமணியம் (67).

இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே வண்ணாங்காட்டு வலசு பகுதியில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் காவலாளியாக பணியாற்றி அருகில் உள்ள மூலக்கரை பகுதியில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்ற சிவபால சுப்பிர மணியம் தனக்கு உடல் நிலை சரியில்லை என மில்லில் வேலை பார்க்கும் மேற்பார்வையாளர் பாஸ்கரனிடம் கூறியுள்ளார்.

பின்னர் பணி முடிந்து தான் தங்கியிருக்கும் அறைக்கு சென்றவர் மறு நாள் வேலைக்கு செல்லவில்லை. மேற்பார்வையாளர் பாஸ்கரன் போன் செய்து பார்த்தும் சிவபாலசுப்பிரமணியம் போனை எடுக்கவில்லை.

இதையடுத்து மில்லில் வேலை பார்க்கும் 2 பேரை அனுப்பி சிவபால சுப்பிர மணியம் தங்கி இருக்கும் அறைக்கு சென்று பார்த்து வருமாறு பாஸ்கரன் அனுப்பி வைத்துள்ளார்.

அவர்கள் அறைக்கு சென்று பார்த்தபோது சிவபால சுப்பிரமணியம் மூச்சு பேச்சின்றி தரையில் கிடந்து ள்ளார்.

உடனடியாக அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் சிவபால சுப்பிரமணியம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து மில் மேற்பார்வையாளர் பாஸ்கர் அளித்த புகாரின் பேரில் பெருந்துறை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com