என் மலர்
ஈரோடு
- பொது அறிவுசார் மையம் மற்றும் நூலகக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
- பெருந்துறை பேரூராட்சி பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.
பெருந்துறை,
பெருந்துறை சிறப்புநிலை பேரூராட்சியில் ரூ.1 கோடியே 21.50 லட்சம் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் மற்றும் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் பொது அறிவுசார் மையம் மற்றும் நூலகக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை பேரூராட்சிகளின் இயக்குனர் கிரண் குராலா பெருந்துறை பகுதிக்கு வந்தார். இதை தொடர்ந்து அவர் பெருந்துறை பேரூராட்சி பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.
இதில் ஈரோடு மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கிருஷ்ணசாமி, கோவை மண்டல செயற் பொறியாளர்கள் பி.மோகன், ஜெகதீஸ்வரி, உதவி செயற் பொறியாளர்கள் மா.கணேசன், வரதராஜன், செயல் அலுவலர் சுந்தர்ராஜ், உதவி பொறியாளர் தியாகராஜன் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
- அம்மன் சிறப்பு வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
- சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மஞ்சள் நீர் ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள்.
கவுந்தப்பாடி,
கவுந்தப்பாடி அருகே உள்ள ஓடத்துறை நஞ்ச கவுண்டன்பாளையம் மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா கடந்த 3-ந் தேதி பூச்சாட்டுடன் தொடங்கியது. இதையொட்டி பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்துவரப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்தார்கள்.
அம்மன் சிறப்பு வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள் பாலித்தார். நேற்று மறுபூஜை அன்று மஞ்சள் நீர் திருவீதி உலா நடைபெற்றது. அதில் அலங்கரிக்கப்பட்ட உற்சவ மாரியம்மன் சிலை உடன் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மஞ்சள் நீர் ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள்.
ஊர்வலமானது பள்ளிக்கூட ரோடு, வாய்க்கால் ரோடு, விநாயகர் வீதி, மெயின் ரோடு மற்றும் அனைத்து வீதிகளிலும் சென்றது. நிகழ்ச்சியில் பெண்கள் அம்மன் மஞ்சள் நீர் ஊர்வலத்தை வரவேற்கும் வகையில் ஒவ்வொரு வீடுகளிலும் தேங்காய், பழம் மஞ்சள் நீர் வைத்து வரவேற்றார்கள்.
இதில் சிறுவர்கள் பெரியவர்கள் என்று பாகுபாடு இல்லாமல் மஞ்சள் நீர் ஊற்றி கொண்டாடினார்கள். மாலையில் மாரியம்மனுக்கு அக்னி அபிஷேகமும் சிறப்பு மகாதீபாரதனையும் நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தார்கள்
- அ.தி.மு.க.வின் கட்சி கொடி மற்றும் சின்னம் உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு என உத்தரவிட்டது.
- கட்சி கொடி, சின்னத்தை அ.தி.மு.க.வினர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது.
பவானி:
ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம் பவானி நகரில் இன்று மாலை காடையாம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் ஆப்பக்கூடல் கோவிந்தன் தலைமையில் நடைபெற உள்ளது.
இதையொட்டி ஓ.பி.எஸ். அணியினர் பவானி நகரில் பல்வேறு இடங்களில் பிளக்ஸ் பேனர்கள், அ.தி.மு.க. கட்சி கொடியை கட்டி இருந்தனர். இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பவானி நகர அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. பரிந்துரைப்படி நகர செயலாளர் சீனிவாசன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் நேற்று இரவு பவானி போலீசில் ஓ.பி.எஸ். அணி மீது புகார் செய்தனர்.
அ.தி.மு.க.வின் கட்சி கொடி மற்றும் சின்னம் உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு என உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து கட்சி கொடி, சின்னத்தை அ.தி.மு.க.வினர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. ஆனால் நாளை (இன்று) நடைபெறும் கூட்டத்திற்கு அ.தி.மு.க.வை சாராத மாற்றுக்கட்சியினர் நகரின் பல்வேறு இடங்களில் பிளக்ஸ் பேனர்கள், கட்சி கொடி, சின்னங்கள் போஸ்டர்கள் பயன்படுத்தி அ.தி.மு.க.வின் மாண்பை கெடுக்கும் வகையில் ஈடுபட்டு வருகின்றனர். அதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் கூறி இருந்தனர்.
பவானி நகரில் ஓ.பி.எஸ். அணியினர் இன்று நடத்தும் செயல் வீரர்கள் கூட்டத்தில் அ.தி.மு.க.வின் கட்சி கொடி, சின்னம் பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் புகார் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மாணவர் தனேஷ்வரா 205 மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைந்தார்.
- மனம் உடைந்த தனேஷ்வரா வீட்டில் இருந்த தனது தங்கையிடம் குளித்து விட்டு வருவதாக கூறி சென்றார்.
பவானி:
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள கோணவாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி தமிழ்செல்வி. இவர் சித்தோடு ஆவினில் விரிவாக்க அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு தனேஷ்வரா (19) என்ற மகனும், மகாஸ்ரீ என்ற மகளும் உள்ளனர்.
பாலகிருஷ்ணன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து மகன், மகளை தமிழ்செல்வி கவனித்து வந்தார். மகன் தனேஷ்வரா அந்தியூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். அதே பள்ளியில் அவரது மகள் மகாஸ்ரீ 9-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது தேர்வு விடுமுறை என்பதால் தனேஷ்வரா, மகாஸ்ரீ ஆகியோர் வீட்டில் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று பிளஸ்-1 தேர்வு முடிவு வெளியானது. இதில் மாணவர் தனேஷ்வரா 205 மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைந்தார். இதனால் மனம் உடைந்த அவர் வீட்டில் இருந்த தனது தங்கையிடம் குளித்து விட்டு வருவதாக கூறி சென்றார்.
நீண்ட நேரமாகியும் அவர் வராததால் தங்கை மகாஸ்ரீ போய் பார்த்தார். அப்போது மாணவர் தனேஷ்வரா தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து அவர் சத்தம் போட்டார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து மாணவர் தனேஷ்வராவை மீட்டு பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவரை பரிசோதனை செய்த டாக்டர் இறந்து விட்டதாக கூறினார்.
இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திடீரென நேற்று இரண்டு மடங்கு விலை உயர்ந்து ஒரு கட்டு வாழை இலை ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
- கடந்த சில மாதங்களுக்கு முன்பு காற்றுடன் பெய்த மழையால் வாழை மரங்கள் சாய்ந்ததால் வாழை இலை வரத்து குறைந்துள்ளது.
ஈரோடு:
ஈரோடு வ.உ.சி பூங்கா காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு காஞ்சி கோவில், பெருந்துறை, சோலார், கவுந்தப்பாடி, பாசூர், கருமாண்டம் பாளையம் போன்ற பகுதியில் இருந்து வாழை இலைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
தற்போது ஈரோடு சின்ன மார்க்கெட்டிற்கும் வாழை இலை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த 2 மார்க்கெட்டில் இருந்து மாநகர் பகுதியில் உள்ள கடைகளுக்கு வாழை இலைகள் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக ஓட்டல்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது.
இந்நிலையில் நேற்று திடீரென வாழை இலைகளின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு பெரிய கட்டு இலை (130 வரை எண்ணிக்கை) 500 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனால் நேற்று திடீரென இரண்டு மடங்கு விலை உயர்ந்து ஒரு கட்டு வாழை இலை ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் தொடர்ந்து திருமண நிகழ்வுகள், சுப முகூர்த்தங்கள் வருவதே ஆகும்.
மேலும் முக்கியமான காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு காற்றுடன் பெய்த மழையால் வாழை மரங்கள் சாய்ந்ததால் வாழை இலை வரத்து குறைந்துள்ளது. இதுவும் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துவிட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இது போக 1 ரூபாய்க்கும் குறைவாக விற்ற டிபன் இலை 4 ரூபாய்க்கும், 4 ரூபாய்க்கு விற்ற தலைவாழை இலை 6 ரூபாய்க்கும் கூடுதலாக விற்கப்படுகிறது. டிபன் மற்றும் சாப்பாட்டு இலை விலை உயர்ந்துள்ளதால் மக்கள் மட்டுமின்றி ஓட்டல் கடைக்காரர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- கடந்த சில நாட்களாக மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது.
- குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.97 அடியாக உள்ளது
ஈரோடு:
ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாக மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது. அதேநேரம் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.04 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு நேற்று 1,064 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 467 கன அடியாக குறைந்து வருகிறது.
கீழ்பவானி பாசனத்திற்காக 5 கனஅடியும், தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 900 கனஅடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 1,055கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதேப்போல் குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.97 அடியாக உள்ளது. பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 23.85 அடியாக உள்ளது. வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 26. 21 அடியாக உள்ளது. மழைப்பொழிவு இல்லாத காரணத்தால் மற்ற அணைகளின் நீர்மட்டமும் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- நாட்டுமாடுகள் 45 ஆயிரம், வளர்ப்பு கன்றுகள் 5 ஆயிரம் வரை விற்பனையானது.
- மொத்தம் கால்நடைகள் ரூ.1 கோடியே 10 லட்சத்திற்கு விற்பனை ஆனது.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் நகராட்சி வாரச்சந்தை புதன் மற்றும் வியாழன் அன்று கூடுவது வழக்கம். இது தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய சந்தையாகும்.
இந்த சந்தையில் கர்நாடகா, கேரளா ஆகிய வெளிமாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களான திருப்பூர், நாமக்கல், கரூர், கோவை, நீலகிரி மற்றும் புளியம்பட்டி சுற்றுப்பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை விற்பதும், வாங்கி செல்வதும் வழக்கம்.
இந்நிலையில் இந்த வாரம் கூடிய மாட்டுசந்தையில் ஜெர்சி 41 ஆயிரம், சிந்து 46 ஆயிரம், எருமை மாடுகள் 15 முதல் 33 ஆயிரம் வரை விற்றது.
நாட்டுமாடுகள் 45 ஆயிரம், வளர்ப்பு கன்றுகள் 5 ஆயிரம் வரை விற்பனையானது. எடைக்கேற்ப வெள்ளாடு 7 ஆயிரம், செம்மறியாடு 6 ஆயிரம் வரை விற்றது.
இதில் மொத்தம் கால்நடைகள் ரூ.1 கோடியே 10 லட்சத்திற்கு விற்பனை ஆனது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.16 அடியாக உள்ளது.
- அணையில் இருந்து 1,055 கன அடி தண்ணீர் வெளியே ற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
அணைக்கு நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.16 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,064 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
கீழ்பவானி பாசனத்திற்காக 5 கனஅடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 900 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 1,055 கன அடி தண்ணீர் வெளியே ற்றப்பட்டு வருகிறது.
இதேப்போல் குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 34.17 அடியாக உள்ளது. பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 23.95 அடியாக உள்ளது.
வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 26.44 அடியாக உள்ளது. மழைப்பொழிவு இல்லாத காரணத்தால் அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
- இன்று காலை எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
- ஈரோடு மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 7-வது இடத்தை பிடித்துள்ளது.
ஈரோடு:
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி முடிவடைந்தது. ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 12,229 மாணவர்களும், 12,428 மாணவிகளும் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 24,657 பேர் எழுதினர்.
இந்நிலையில் தேர்வு முடிந்து வினாத்தாள் திருத்தும் பணிகளும் நிறைவடைந்ததையொட்டி இன்று தமிழ்நாடு முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் 11,287 மாணவர்களும், 12, 022 மாணவிகளும் என மொத்தம் 23,309 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94.53 சதவீதம் ஆகும். மாநில அளவில் ஈரோடு மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 7-வது இடத்தை பிடித்துள்ளது.
மாணவர்கள் 92.30 சதவீதம் பேரும், மாணவிகள் 96.73 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்று ள்ளனர். வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 180 அரசு பள்ளிகளை சேர்ந்த 6,163 மாணவர்களும், 6,588 மாணவிகளும் என மொத்தம் 12 ஆயிரத்து 751 பேர் எழுதினர்.
இதில் 5,452 மாணவர்களும், 6,242 மாணவிகளும் என மொத்தம் 11 ஆயிரத்து 694 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 91.71 ஆகும்.
மாணவ, மாணவிகள் தேர்வு முடிவுகளை தங்கள் செல்போன்களிலும் தெரிந்து கொண்டனர். இன்னும் சில மாணவ, மாணவிகள் தங்கள் படித்த பள்ளியில் சென்று தேர்வு முடிவுகளை ஆர்வத்துடன் தெரிந்து கொண்டனர்.
- சோதனையில் அனுமதி இன்றி மதுவிற்ற 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
- 75 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறு கிறதா? என்பதை கண்காணி க்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் மதுவிலக்கு போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் இ.வி.கே. சம்பத் சாலை, மூலப்பட்டறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அந்த பகுதியில் ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார்.
அவரை பிடித்து விசாரித்ததில் அவர் மதுரை, மேலூர் பகுதியை சேர்ந்த அழகுபாண்டி (45) என்பதும் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அவரிட மிருந்து 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இதேபோல் கவுந்தப்பாடி, கோபிசெட்டிபாளையம், சூரம்பட்டி மலைய ம்பாளையம், சிறுவலூர் என மாவட்டம் முழுவதும் போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் அனுமதி இன்றி மதுவிற்ற 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 75 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
- சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு தயார்படுத்தினர்.
- வெற்றிகரமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த 41 வயது நோயாளி ஒருவர் சிறுநீரகம் செயல் இழந்து ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவ மனையில் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.
மேலும் அவர் தமிழ்நாடு உடல் உறுப்பு தான அமைப்பில் சிறுநீரகம் பெற பதிவு செய்து கடந்த 3 ஆண்டுகளாக காத்தி ருந்தார்.
இந்நிலையில் கோவை யில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த 62 வயதுடையவரின் சிறுநீரகம், கோபியை சேர்ந்தவருக்கு முன்னுரிமை அடிப்படை யில் வழங்க முடிவானது.
இதையடுத்து ஈரோட்டில் உள்ள அபிராமி கிட்னி கேர் தலைமை மருத்துவ மனையில் கோபியை சேர்ந்தவர் அனுமதிக்க ப்பட்டு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு தயார்படுத்தினர்.
தொடர்ந்து கோவையில் இருந்து சிறுநீரகம் ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனைக்கு ஆம்புலன்சு மூலம் ஒரு மணி நேரத்தில் கொண்டு வரப்பட்டு டாக்டர். சரவணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கோபியை சேர்ந்தவருக்கு வெற்றிகரமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தனர்.
இது குறித்து அபிராமி கிட்னி கேர் மருத்துவ மனையின் நிர்வாக இயக்கு நர் டாக்டர் சரவணன் கூறுகையில், கோபியை சேர்ந்தவருக்கு குரோனிக் கிட்னி வியாதி (சி.கே.டி.) என்ற நோய் பாதிப்பு காரணமாக சிறுநீரகம் செயல் இழந்து விட்டது.
கடந்த 3 ஆண்டுகளாக எங்களது மருத்துவ மனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். தற்போது, கோவையிலிருந்து தானமாக பெறப்பட்ட சிறுநீரகம் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பொருத்தப்ப ட்டுள்ளது என்றார்.
- மெக்கானிக் அங்கு சென்று பார்த்தபோது மின் மோட்டாரை காணவில்லை.
- விசாரணை நடத்தி மின்மோட்டார் திருடியவர்களை தேடி வந்தனர்.
அம்மாபேட்டை:
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டை அடுத்த சின்னப்பள்ளம் கே.ஆர்.தோட்டத்தில் செந்தில்குமார் ( 52) என்பவர் வசித்து வருகிறார்.
இவர் தனது வீட்டு போர்வெலில் தண்ணீர் எடுப்பதற்காக ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள மின்சார மோட்டார் பொருத்தி வைத்துள்ளார். இந்த மின் மோட்டார் கடந்த 13-ந் தேதி பழுது ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்து அதனை சரி செய்து மீண்டும் பொருத்தி உள்ளார். அதன் பிறகு செந்தில்குமார் சொந்த வேலையாக சென்னை சென்று விட்டார்.
இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி வீட்டு குழாயில் தண்ணீர் வரவில்லை என செந்தில்குமாரின் மனைவி அவருக்கு போன் செய்து தெரிவித்துள்ளார்.
உடனடியாக செந்தில்குமார் அங்குள்ள ஒரு மெக்கானிக்கை செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டில் மின் மோட்டாரை பழுது பார்க்க அனுப்பியுள்ளார்.
இதையடுத்து மெக்கானிக் அங்கு சென்று பார்த்தபோது மின் மோட்டாரை காணவில்லை. இதுகுறித்து மெக்கானிக் செந்தில்குமாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து சென்னையில் இருந்து வீட்டிற்கு வந்த செந்தில்குமார் மின் மோட்டார் இருக்கும் இடத்தில் சென்று பார்த்தார். அங்கு மோட்டார் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இத குறித்து அவர் அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மின்மோட்டார் திருடியவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் நெரிஞ்சிப்பேட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன் (27) என்பவரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் மின்மோட்டார் திருடியதை ஒப்பு கொண்டார். மேலும் போலீசாரின் விசாரணையில் அதே பகுதி சேர்ந்த ரஞ்சித் குமார் (23), பூனாச்சி அருகே உள்ள முகாசிபுதூர் மனோஜ்( 21) ஆகியோர் மின் மோட்டார் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
அவர்கள் 3 பேரும் சேர்ந்து மோட்டார் திருடி அம்மாபேட்டையில் உள்ள ஒரு எலக்ட்ரிக் கடையில் விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து மின் மோட்டாரையும் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து அவர்கள் 3 பேரும் பவானி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.






