என் மலர்
நீங்கள் தேடியது "ஒரு மணி நேரத்தில்"
- சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு தயார்படுத்தினர்.
- வெற்றிகரமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த 41 வயது நோயாளி ஒருவர் சிறுநீரகம் செயல் இழந்து ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவ மனையில் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.
மேலும் அவர் தமிழ்நாடு உடல் உறுப்பு தான அமைப்பில் சிறுநீரகம் பெற பதிவு செய்து கடந்த 3 ஆண்டுகளாக காத்தி ருந்தார்.
இந்நிலையில் கோவை யில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த 62 வயதுடையவரின் சிறுநீரகம், கோபியை சேர்ந்தவருக்கு முன்னுரிமை அடிப்படை யில் வழங்க முடிவானது.
இதையடுத்து ஈரோட்டில் உள்ள அபிராமி கிட்னி கேர் தலைமை மருத்துவ மனையில் கோபியை சேர்ந்தவர் அனுமதிக்க ப்பட்டு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு தயார்படுத்தினர்.
தொடர்ந்து கோவையில் இருந்து சிறுநீரகம் ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனைக்கு ஆம்புலன்சு மூலம் ஒரு மணி நேரத்தில் கொண்டு வரப்பட்டு டாக்டர். சரவணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கோபியை சேர்ந்தவருக்கு வெற்றிகரமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தனர்.
இது குறித்து அபிராமி கிட்னி கேர் மருத்துவ மனையின் நிர்வாக இயக்கு நர் டாக்டர் சரவணன் கூறுகையில், கோபியை சேர்ந்தவருக்கு குரோனிக் கிட்னி வியாதி (சி.கே.டி.) என்ற நோய் பாதிப்பு காரணமாக சிறுநீரகம் செயல் இழந்து விட்டது.
கடந்த 3 ஆண்டுகளாக எங்களது மருத்துவ மனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். தற்போது, கோவையிலிருந்து தானமாக பெறப்பட்ட சிறுநீரகம் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பொருத்தப்ப ட்டுள்ளது என்றார்.






