என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திட்ட பணிகள் ஆய்வு"

    • பொது அறிவுசார் மையம் மற்றும் நூலகக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
    • பெருந்துறை பேரூராட்சி பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.

    பெருந்துறை, 

    பெருந்துறை சிறப்புநிலை பேரூராட்சியில் ரூ.1 கோடியே 21.50 லட்சம் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் மற்றும் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் பொது அறிவுசார் மையம் மற்றும் நூலகக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சென்னை பேரூராட்சிகளின் இயக்குனர் கிரண் குராலா பெருந்துறை பகுதிக்கு வந்தார். இதை தொடர்ந்து அவர் பெருந்துறை பேரூராட்சி பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.

    இதில் ஈரோடு மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கிருஷ்ணசாமி, கோவை மண்டல செயற் பொறியாளர்கள் பி.மோகன், ஜெகதீஸ்வரி, உதவி செயற் பொறியாளர்கள் மா.கணேசன், வரதராஜன், செயல் அலுவலர் சுந்தர்ராஜ், உதவி பொறியாளர் தியாகராஜன் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    • திண்டுக்கல் அருகே சிறுமலையில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார்.
    • துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே சிறுமலையில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் பணிகளை திட்ட இயக்குனர் மோனிகா ராணா, பொறியாளர் குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    இதில் தென்மலையில் இருந்து பொன்னுருக்கி செல்லும் சாலை, கருப்பு கோவில் செல்லும் சாலை, பசலிக்காடு செல்லும் சாலை, தாழக்கடை செல்லும் சாலை ஆகிய 4 சாலைகளின் 2022-23ஆம் ஆண்டிற்கான புதிய முன்மொழிவுக்கான பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.

    இந்த ஆய்வில் மாவட்ட திட்ட அலுவலர் கிரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மலரவன், கிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா வெள்ளிமலை, மண்டல துணை வட்டாட்சியர் தங்கமணி, வி.ஏ.ஓ. வசந்த், ஊராட்சி செயலர் முத்துக்குமார் உள்பட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×