என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Survey of Development"

    • பொது அறிவுசார் மையம் மற்றும் நூலகக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
    • பெருந்துறை பேரூராட்சி பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.

    பெருந்துறை, 

    பெருந்துறை சிறப்புநிலை பேரூராட்சியில் ரூ.1 கோடியே 21.50 லட்சம் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் மற்றும் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் பொது அறிவுசார் மையம் மற்றும் நூலகக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சென்னை பேரூராட்சிகளின் இயக்குனர் கிரண் குராலா பெருந்துறை பகுதிக்கு வந்தார். இதை தொடர்ந்து அவர் பெருந்துறை பேரூராட்சி பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.

    இதில் ஈரோடு மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கிருஷ்ணசாமி, கோவை மண்டல செயற் பொறியாளர்கள் பி.மோகன், ஜெகதீஸ்வரி, உதவி செயற் பொறியாளர்கள் மா.கணேசன், வரதராஜன், செயல் அலுவலர் சுந்தர்ராஜ், உதவி பொறியாளர் தியாகராஜன் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    ×