என் மலர்
ஈரோடு
- 31-ந் தேதி (புதன்கிழமை) சிறப்பு ரெயில் (எண்: 06073), இயக்கப்பட உள்ளது.
- அசாம் மாநிலம் ரங்கபா ராவுக்கு 2 நாள் கழித்து அதாவது வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சென்றடையும்.
ஈரோடு,
தென்னக ரெயில்வே சேலம் கோட்டத்தில் உள்ள ரெயில்வே ஸ்டேஷன்களில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
அதன்படி ஈரோட்டில் இருந்து அசாம் மாநிலம் ரங்கபரா வடக்குப் பகுதிக்கு வருகிற 24-ந் தேதி (புதன்கிழமை) மற்றும் 31-ந் தேதி (புதன்கிழமை) சிறப்பு ரெயில் (எண்: 06073), இயக்கப்பட உள்ளது.
இந்த ரெயில் ஈரோடு ரெயில் நிலையத்திலிருந்து அதிகாலை 2.30 மணிக்கு புறப்பட்டு சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, விசாகப்பட்டினம் வழியாக அசாம் மாநிலம் ரங்கபா ராவுக்கு 2 நாள் கழித்து அதாவது வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சென்றடையும்.
இந்த சிறப்பு ரெயிலில் 2 முதல் வகுப்பு ஏ.சி பெட்டிகள், ஒரு 2-ம் வகுப்பு ஏ.சி பெட்டி, 14 படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.
இதைப்போல் மறு மார்க்கத்தில் அசாம் மாநிலம் ரங்கபரா வடக்கு பகுதியில் இருந்து ஈரோட்டிற்கு சிறப்பு ரெயில் (எண்: 06074) வருகிற 27ஆம் தேதி (சனிக்கிழமை) மற்றும் ஜூன் மாதம் 3ஆம் தேதி (சனிக்கிழமை) இயக்கப்பட உள்ளது.
இந்த ரெயில் ஆனது ரங்கபராவில் இருந்து 27-ந் தேதி அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை மத்தியானம் 1.15 மணி க்கு ஈரோடு ரெயில் நிலை யத்திற்கு வந்தடையும்.
- 1 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் முட்டைகோஸ் சில்லரை கடைகளில் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- விவசாயிகள் உழவு செய்து முட்டைகோசை அளித்ததாக வேதணையுடன் தெரிவித்தார்.
தாளவாடி,
ஈரோடு மாவட்டத்தின் கடைகோடியில் கடல் மட்டத்தில் இருந்து 1105 மீட்டர் உயரத்தில் உள்ள தாளவாடி, கொங்கள்ளி, பனகஹள்ளி, தொட்டகாஜனூர் பாரதிபுரம், கெட்டவாடி ,தலமலை, அருள்வாடி போன்ற 80 -க்கும் மேற்பட்ட கிராங்கள் உள்ளன.இங்கு கத்திரி, வெண்டை, தக்காளி பீட்ரூட், சிவப்பு முள்ளங்கி, முட்டைகோஸ், காலிபிளவர், பீன்ஸ் ஆகிய பயிர்களை பயிரிடுவது வழக்கம்.
இப்பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் முட்டைகோஸ் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. இவற்றை வாங்க வரும் வியாபாரிகள் ஒரு கிலோ முட்டைகோஷ்ற்கு 1 ரூபாய் மட்டுமே விலை கொடுப்பதால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.
3 மாத பயிரான முட்டைகோஸ் 1ஏக்கருக்கு நாற்று,களை எடுத்தல் ,உரம் மருந்து என 80 ஆயிரம் வரை செலவு ஆகிறது. இம்முறை தண்ணீர் பற்றாக்குறை இல்லை என்பதால் பயிரிட்ட முட்டைகோஸ் நன்கு விளைந்துள்ளது.
தாளவாடி மலைப்பகுதியில் விளைவிக்கும் காய்கறிகள் வியாபரிகள் கோவை ,ஈரோடு ,திருப்பூர்,கரூர் பேன்ற பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பணை செய்கின்றனர். தாளவாடி அடுத்த தொட்டகாஜனூர் பகுதியை சேர்ந்த விவசாயி குணசேகரன் 5 ஏக்கரில் முட்டைகோஸ் சாகுபடி செய்திருந்தார்.
இது குறித்து அவர் கூறும் போது, கடந்த 6 மாதமாகவே கிலோ 1 முதல் 2 ரூபாய் வரை மட்டுமே வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். தாளவாடி மலைப்பகுதியில் 1 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் முட்டைகோஸ் சில்லரை கடைகளில் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விவசாயி முட்டைகோஸ் நடவு செய்தது கழை எடுத்து, உரம் போன்றவற்றை போட்டு முட்டைகோசை விளைவிக்கும் விவசாயிக்கு 1 ரூபாய் ஆனால் இடைதரகர்களின் அதிக்கத்தால் கடையில் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதில் போக்குவரத்து செலவு ஆட்கள் கூலி செலவு என வியாபாரிகளுக்கு கிலோவுக்கு ரூபாய் 5 போனாலும் கிலோவுக்கு 24 ரூபாய் இடைதரகர்கள் லாபம் பார்க்கின்றனர் . இதே போல் அனைத்து காய்கறிகளும் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு வாங்கி 4 முதல் 5 மடங்கு அதிக விலை வைத்து சில்லரை விற்பனையில் விற்பணை செய்கின்றனர்.
5 ஏக்கரில் பயிர் செய்திருந்த முட்டைககோசை வாங்க வியாபாரிகள் யாரும் வராததால் வேறு வழியில்லாமல் உழவு செய்து அளித்ததாகவும் இதில் மட்டும் 4 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இதே போல் தாளவாடியில் நிறைய விவசாயிகள் உழவு செய்து முட்டைகோசை அளித்ததாக வேதணையுடன் தெரிவித்தார்.
எனவே அரசு காய்கறிகளுக்கு விலை நிர்ணையம் செய்ய வேண்டும். அப்போது தான் விவசாயிகளும் பாதிக்கப்படமாட்டார்கள், அதை வாங்கும் பொதுமக்களும் பாதிக்கப்பட மாட்டர்கள். எனவே தாளவாடி மலைப்பகுதியில் விளைவிக்கும் காய்கறிகளை அரசே நேரடியாக விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்யவேண்டும் என்றனர்.
- சமூக வலைதளங்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவது போல் போஸ்டர்கள் உலாவி வருகிறது.
- போஸ்டர் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
அந்தியூர்:
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந்தேதிக்கு பிறகு திரும்ப பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் ஒரு நாளைக்கு 10 நோட்டுகள் அதாவது ரூ.20 ஆயிரம் வரை வங்கியில் செலுத்தி மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தி மாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் அந்தியூர் பகுதியில் சமூக வலைதளங்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவது போல் போஸ்டர்கள் உலாவி வருகிறது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
அந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் மலர்ந்தது 8-11- 2016. உதிர்ந்தது 19-5- 2023-என்றும் 2 ஆயிரம் நோட்டு இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்ற வாசகத்தையும் அதில் அச்சடிக்கப்பட்டு கண்ணீர் சிந்துவது போல் படங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
- வாய்க்காலை சீரமைக்க ரூ.733 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டு கடந்த 2020-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது.
- மே 1-ந் தேதி முதல் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடுமுடி:
ஈரோடு மாவட்டம் கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஈரோடு , திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்ட ங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.
இந்த வாய்க்காலை சீரமைக்க ரூ.733 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டு கடந்த 2020-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது. வாய்க்காலை புனரமைக்க ஒருத்தரப்பு விவசாயிகள் ஆதரவும், மற்றொரு தரப்பு விவசாயிகள் எதிர்ப்பும் தெரிவித்தனர். அமைச்சர் முத்துசாமி இருதரப்பு விவசாயிகளையும் அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். எனினும் சுமுகமான முடிவு ஏற்படவில்லை.
இந்நிலையில் கீழ்பவானி முறைநீர் பாசன கூட்டமைப்பு சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு மே 1-ந் தேதி முதல் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கீழ்பவானி வாய்க்கால் காங்கிரீட் திட்டத்தை கைவிட கோரியும், விவசாயம் காக்க வேண்டியும், மண் கால்வாயிகவே இருக்க வேண்டும் என வலியுறுத்தி அரச்சலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக விவசாயிகள் கடை வியாபாரிகளிடம் ஆதரவு கேட்டிருந்தனர்.
அதன்படி இன்று காலையில் இருந்து அரச்சலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியான பிச்சாண்டாம் பாளையம், கருக்கம் பாளையம், வாய்க்கால் மேடு ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து விவசாயிகள் மற்றும் வணிகர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரச்சலூர் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் அரச்சலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடையடைப்பு போராட்டம் காரணமாக ஆட்கள் நடமாட்டம் இன்றி வீதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
கீழ்பவானி வாய்க்காலில், பழைய கட்டுமானங்களில் உள்ள மராமத்துப் பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
புதிதாக வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க கூடாது. வாய்க்காலின் மண் கரை அப்படியே தொடர வேண்டும், கசிவுநீர் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று அரச்சலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுக்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- விவசாயிகள் பலா பழங்கள் மரங்களை அதிகளவில் நட்டு உள்ளனர்.
- தாளவாடி, ஆசனூர், கேர்மாளம் பகுதிகளில் ரோட்டோரங்களில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.
சத்தியமங்கலம்,
சத்தியமங்கலம் அருகே தாளவாடி, கடம்பூர் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதி சாலை வழியாக கர்நாடகா மாநிலத்துக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த பகுதி பசுமையாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் ரோட்டோரம் வாகனங்களை நிறுத்தி இயற்கை அழகை ரசித்து செல்கிறார்கள்.
இதனால் சத்தியமங்கலம் அடுத்து உள்ள மலைப்பகுதி யான தாளவாடி, கடம்பூர், கேர்மாளம், கெட்டவாடி, தலமலை உள்ளிட்ட பகுதி களில் கோடைக்காலம் உள்பட அனைத்து நாட்களிலும் குளிர்ச்சியான சீதோஷன நிலை நிலவி வருகிறது.
இந்த வனப்பகுதிகளில் விவசாயிகள் பலா பழங்கள் மரங்களை அதிகளவில் நட்டு உள்ளனர். இந்த மரங்களில் பலா பழங்கள் மே மாதம் பழுக்க ஆரம்பித்து விடுகிறது. தற்பொழுது மரங்களில் பலாப்பழங்களை வெட்டுவதற்கு சரியான காலநிலை என்பதால் ஆசனூர், திம்பம் ஆகிய இடங்களில் அதிக பலாப்பழங்களை காண முடிகிறது.
இந்த பகுதிகளில் அறுவடை செய்யப்படும் பலா பழங்கள் தாளவாடி, ஆசனூர், கேர்மாளம் பகுதிகளில் ரோட்டோரங்களில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் பலாப்பழங்களை விவசாயி களிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து வருகின்றன. இதனையடுத்து பலாப்பழங்களை தமிழக- கர்நாடக எல்லையான புழிஞ்சூர் சோதனை சாவடி அருகே ரோட்டோரங்களில் கடைகள் அமைத்து விற்று வருகின்றனர்.
- தனது அக்கா கார்த்திகா வீட்டிற்கு வந்து தங்கி இருந்தார்.
- எதிர்பாராத விதமாக நிஷாந்த் தண்ணீ ரில் மூழ்கி இழுத்து செல்லப்பட்டார்.
டி.என்.பாளையம்,
ராமநாதபுரம் மாவட்டம் செவல்பட்டி பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவருக்கு 3 மகள்கள், 1 மகன் உள்ளனர். இவரது மகன் நிஷாந்த் (25), எம்.பி.ஏ. படித்துள்ளார்.
நிஷாந்தின் அக்கா கார்த்திகாவுக்கு திருமணமாகி சத்தியமங்கலம் தேள்கரடு வீதியில் வசித்து வருகிறார். கடந்த 2 வாரத்திற்கு முன்பு நிஷாந்த் சத்தியமங்கலத்தில் உள்ள தனது அக்கா கார்த்திகா வீட்டிற்கு வந்து தங்கி இருந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை கொடிவேரி அணை பவானி ஆற்றுக்கு நிஷாந்த் மட்டும் குளிக்க சென்றார். கொடிவேரி அரக்கன் கோட்டை வாய்க்கால் படித்துறை என்ற இடத்தில் நிஷாந்த் குளித்து கொண்டு இருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக நிஷாந்த் தண்ணீ ரில் மூழ்கி இழுத்து செல்லப்பட்டார். இதை கண்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடிய வில்லை.
இதையடுத்து உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் தகவலறிந்து பங்களாப்புதூர் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி னர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் மூழ்கிய நிஷாந்தை தேடினர். இதை தொடர்ந்து நிஷாந்தை தீயணைப்பு வீரர்கள் பிணமாக மீட்டு சத்திய மங்கலம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இரவு 9 மணி முதல் 10 மணி வரை 1 மணி நேரம் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
- பவானி சாலை முருகன் கிணறு அருகில் சாலையோரம் இருந்த ஒரு மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது.
அந்தியூர்,
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் கோடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வனப்பகுதிகளில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்நிலை யில் நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.
சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை 1 மணி நேரம் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து இரவு முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.
இதேபோல் அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அந்தியூர்-பவானி சாலை முருகன் கிணறு அருகில் சாலையோரம் இருந்த ஒரு மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது.
இதனையடுத்து அந்தியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மரங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.
மேலும் அந்தியூர், தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றின் காரணமாக மின்தடையும் ஏற்பட்டது. பர்கூர் மலைப்பகுதியில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. இதனால் பர்கூர் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- கள்ளச்சாராய தடுப்பு வேட்டையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
- சாராய ஊறலை பிளாஸ்டிக் குடத்தில் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
ஈரோடு,
மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராய தடுப்பு வேட்டையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுகா ராயர்பாளையம் சாலைக்காடு பகுதியில் வரப்பாளையம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அதேபகுதியைச் சேர்ந்த தம்பி (எ) கருப்புசாமி (39) என்பவர் தனது வீட்டின் பின்புறத்தில், சுமார் 15 லிட்டர் சாராய ஊறலை பிளாஸ்டிக் குடத்தில் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
- கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 889 ஆக உள்ளது.
- கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 2 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 889 ஆக உள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 2 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனால் மாவட்டத்தில் இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 152 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் இதுவரை 736 பேர் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் ஒருவர் மட்டுமே கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
- அரேபாளையம் செல்லும் சாலையில் கரடி ஒன்று மெதுவாக நடந்து சென்றது
- கரடியிடமிருந்து எப்பவுமே 200 மீட்டர் தூரம் தள்ளி இருக்க வேண்டும்.
சத்தியமங்கலம்,
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை மான், புலி, கரடி, சிறுத்தை, காட்டெருமை, புலி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் இரண்டு நாட்களாக சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களான பண்ணாரி, ஆசனூர், அரேப்பாளையம், தாளவாடி, திம்பம், தலமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையால் குளிர்ச்சியான சீதோஷண நிலை நிலவி வருகிறது
இதனால் வனவிலங்குகள் அவ்வப்போது ரோட்டை கடப்பதும் ரோட்டின் சாலை ஓரம் நடந்து செல்வதும் வாடிக்கையாகிவிட்டது.
இதே போல் நேற்று சத்தியமங்கலத்தில் இருந்து அரேபாளையம் செல்லும் சாலையில் கரடி ஒன்று மெதுவாக நடந்து சென்றது. இதனைப் பார்த்த வாகன ஓட்டிகள் அதை செல்போனில் படம் பிடிக்க ஆரம்பித்தனர். சிறிது நேரம் நடந்து சென்ற கரடி அடர்ந்த வனபகுதிக்குள் சென்று விட்டது.
இதை பார்த்த வனத்துறை அதிகாரிகள் கரடிகள் மிகவும் ஆபத்தானவை கரடியிடமிருந்து எப்பவுமே 200 மீட்டர் தூரம் தள்ளி இருக்க வேண்டும் எனவும் வனவிலங்குகளை தொந்தரவு செய்யாமல் பார்த்து ரசிக்கவும் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
- காலி இடத்தில் ஒரு கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.
- போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம், பெருந்துறை, திருவேங்கடம்பாளையம் பகுதியில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு மற்றும் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பெருந்துறையில் இருந்து திருவேங்கடம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள காலி இடத்தில் ஒரு கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்துப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் திருவேங்கடம்பாளையத்தை சேர்ந்த அய்யாசாமி (55), பிரதீப் (27), சுந்தரமூர்த்தி (21), அஜித் (25) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து சூதாட பயன்படுத்திய 52 சீட்டுகள், பணம் ரூ. 2,600 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
இதேப்போல் தாளவாடி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமை யில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தாளவாடி அடுத்த காரலவாடி பஸ் நிறுத்தம் அருகே ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
போலீசார் அந்த கும்பலை வளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த மாதேஷ் (45), குருசாமி (55), சாந்தப்பா (48), குருசாமி (40), சிவசங்கரா (42) ஆகியோர் என தெரிய வந்தது. அவர்களிடமிருந்து ரூ. 700 பணம், சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர்.
- மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து பெறப்பட்டு வருகிறது.
- தூய்மை இந்தியா திட்டம் 2.0 நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது.
கோபி,
கோபி செட்டிபாளையம் நகராட்சியில் தேவையற்ற பொருட்களை பெறுவதற்கு 30 வார்டுகளில் 7 இடங்களில் சிறப்பு மையம் அமைக்கப் பட்டுள்ளது. எனவே பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று நகர் மன்ற தலைவர் என்.ஆர்.நாகராஜ் மற்றும் ஆணையாளர் (பொறுப்பு) சிவக்குமார் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளது. இங்கு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளிலும் உள்ள திடக்கழிவுகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து பெறப்பட்டு வருகிறது.
தரம் பிரிக்கப்பட்ட மக்கும் குப்பைகளை நுண் உரமாக்கல் மையத்திற்கு கொண்டு சென்று இயற்கை உரமாக மாற்றம் செய்யப்பட்டு அதனை பொது மக்கள் மற்றும் விவசாயி களுக்கு நகராட்சி சார்பில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சிமெண்ட் ஆலை மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பொது மக்களிடம் இருந்து தேவையற்ற பொருட்களை முழுமையாக பெறுவதற்காக தூய்மை இந்தியா திட்டம் 2.0 நடை முறைப்படுத்தப்ப ட்டுள்ளது. எனது வாழ்க்கை, எனது சுத்தமான நகரம் என்கின்ற வகையில் நகரில் 7 மையங்களிலும் தேவையற்ற பொருட்களை பெறுவதற்காக கழிவுகளின் உப யோகத்தை குறைத்தல், மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி செய்தல் (ஆர்.ஆர்.ஆர்) சிறப்பு மையம் ஏற்படுத்தப் பட்டுள்ளது.
இதுகுறித்து கோபி செட்டிபாளையம் நகர் மன்ற தலைவர் என்.ஆர்.நாகராஜ் கூறியதாவது:-
கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதி முழுவதும் தூய்மையாக வைத்துக் கொள்ள பல்வேறு பணிகள் நகராட்சி நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்கள் பயன்பாட்டிற்கு தேவைப்படாத பொருட்களை நகராட்சி தூய்மை பணியாளரிடம் ஒப்படைக்க வேண்டும். இதற்காக 4 வார்டுக்கு ஒரு இடத்தில் தேவையற்ற பொருட்களை பெறுவ எதற்காக சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நகரத்தின் தூய்மையை பராமரிப்படன் நோய்கள் பரவாத வண்ணம் கட்டுப்படுத்தவும் மற்றும் திடக்கழிவுகள் முறை யாக அப்புறப்படுத்தவும் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பஸ் நிலையம் மற்றும் வடக்கு பூங்கா பகுதியில் மறு பயன்பாட்டுக்கு பயன்படும் பொருட்களை பெற்று பயனாளிகளுக்கு நகர் மன்ற தலைவர் என். ஆர்.நாகராஜ் வழங்கினார்.
குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகள், பள்ளி புத்தகங்கள், ஸ்கூல் பேக்குகள், துணிகள், மெத்தை, தலையணை போன்றவைகளும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. இது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது.
இதில் நகராட்சி துப்புரவு அலுவலர் சோழராஜ், துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், கார்த்திக், சவுந்தரராஜன், ரோட்டரி சங்க ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன், அரிமா சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






