ஈரோட்டில் கொரோனா பாதிப்புடன் ஒருவர் மட்டுமே சிகிச்சை

கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 889 ஆக உள்ளது.கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 2 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
ஈரோட்டில் கொரோனா பாதிப்புடன் ஒருவர் மட்டுமே சிகிச்சை
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 889 ஆக உள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 2 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனால் மாவட்டத்தில் இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 152 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டத்தில் இதுவரை 736 பேர் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் ஒருவர் மட்டுமே கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com