என் மலர்
நீங்கள் தேடியது "பொருட்கள் பெறுவதற்கான"
- மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து பெறப்பட்டு வருகிறது.
- தூய்மை இந்தியா திட்டம் 2.0 நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது.
கோபி,
கோபி செட்டிபாளையம் நகராட்சியில் தேவையற்ற பொருட்களை பெறுவதற்கு 30 வார்டுகளில் 7 இடங்களில் சிறப்பு மையம் அமைக்கப் பட்டுள்ளது. எனவே பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று நகர் மன்ற தலைவர் என்.ஆர்.நாகராஜ் மற்றும் ஆணையாளர் (பொறுப்பு) சிவக்குமார் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளது. இங்கு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளிலும் உள்ள திடக்கழிவுகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து பெறப்பட்டு வருகிறது.
தரம் பிரிக்கப்பட்ட மக்கும் குப்பைகளை நுண் உரமாக்கல் மையத்திற்கு கொண்டு சென்று இயற்கை உரமாக மாற்றம் செய்யப்பட்டு அதனை பொது மக்கள் மற்றும் விவசாயி களுக்கு நகராட்சி சார்பில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சிமெண்ட் ஆலை மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பொது மக்களிடம் இருந்து தேவையற்ற பொருட்களை முழுமையாக பெறுவதற்காக தூய்மை இந்தியா திட்டம் 2.0 நடை முறைப்படுத்தப்ப ட்டுள்ளது. எனது வாழ்க்கை, எனது சுத்தமான நகரம் என்கின்ற வகையில் நகரில் 7 மையங்களிலும் தேவையற்ற பொருட்களை பெறுவதற்காக கழிவுகளின் உப யோகத்தை குறைத்தல், மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி செய்தல் (ஆர்.ஆர்.ஆர்) சிறப்பு மையம் ஏற்படுத்தப் பட்டுள்ளது.
இதுகுறித்து கோபி செட்டிபாளையம் நகர் மன்ற தலைவர் என்.ஆர்.நாகராஜ் கூறியதாவது:-
கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதி முழுவதும் தூய்மையாக வைத்துக் கொள்ள பல்வேறு பணிகள் நகராட்சி நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்கள் பயன்பாட்டிற்கு தேவைப்படாத பொருட்களை நகராட்சி தூய்மை பணியாளரிடம் ஒப்படைக்க வேண்டும். இதற்காக 4 வார்டுக்கு ஒரு இடத்தில் தேவையற்ற பொருட்களை பெறுவ எதற்காக சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நகரத்தின் தூய்மையை பராமரிப்படன் நோய்கள் பரவாத வண்ணம் கட்டுப்படுத்தவும் மற்றும் திடக்கழிவுகள் முறை யாக அப்புறப்படுத்தவும் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பஸ் நிலையம் மற்றும் வடக்கு பூங்கா பகுதியில் மறு பயன்பாட்டுக்கு பயன்படும் பொருட்களை பெற்று பயனாளிகளுக்கு நகர் மன்ற தலைவர் என். ஆர்.நாகராஜ் வழங்கினார்.
குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகள், பள்ளி புத்தகங்கள், ஸ்கூல் பேக்குகள், துணிகள், மெத்தை, தலையணை போன்றவைகளும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. இது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது.
இதில் நகராட்சி துப்புரவு அலுவலர் சோழராஜ், துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், கார்த்திக், சவுந்தரராஜன், ரோட்டரி சங்க ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன், அரிமா சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






