என் மலர்
ஈரோடு
- அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 81.60 அடியாக சரிந்தது.
ஈரோடு,
ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாக மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது. அதேநேரம் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 81.60 அடியாக சரிந்தது. அணைக்கு வினாடிக்கு 188 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.
கீழ்பவானி பாசனத்திற்காக 5 கனஅடியும், தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 800 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 955 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது
- குடிப்பதற்கு தாய் தந்தையிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார்.
- லிங்கண்ணாவை சாப்பிட அவரது தாய் அழைத்தார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த கர ளவாடி தேவி நகரை சேர்ந்த வர் பசுவராஜ் (60). திருமண மாகி 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகன் திருமணமாகி தந்தையுடன் வசித்து வருகிறார். மகளுக்கு திருமணமாகி கணவருடன் தனியாக வசித்து வருகிறார். 2-வது மகன் லிங்கண்ணா (32). கூலி வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்நிலையில் லிங்கண்ணாவுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும் தினமும் குடிப்பதற்கு தாய் தந்தையிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவ த்தன்று வேலைக்கு செல்லா மல் கரளவாடி பஸ் நிறுத்தம் அருகே இரவில் உட்கார்ந்து இருந்தார். பின்னர் வீட்டுக்கு வந்த லிங்கண்ணா குடிப்பதற்கு மீண்டும் பெற்றோரிடம் பணம் கேட்டு உள்ளார். அதற்கு தங்களிடம் பணம் இல்லை என்று அவர்கள் கூறிவிட்டனர்.
பின்னர் லிங்கண்ணாவை சாப்பிட அவரது தாய் அழைத்தார். உனது சாப்பாடு எனக்கு தேவை இல்லை. குடிப்பதற்கு பணம் தரவில்லை என்றால் இனிமேல் வீட்டுக்கு வர மாட்டேன். தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி வீட்டின் பின்பக்கம் உள்ள குளத்தை நோக்கி லிங்கண்ணா வேகமாக ஓடினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மகன் பின்னால் வேகமாக ஓடினர். ஆனால் அதற்குள் லிங்கண்ணா குளத்தில் குதித்து விட்டார். இதனால் பதறிய அவரது பெற்றோர் இது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்தனர். அதற்குள் லிங்கண்ணா குளத்தில் மூழ்கி இறந்து விட்டார்.
இது குறித்து சத்திய மங்கலம் தீயணைப்பு நிலை யத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குளத்தில் தேடிலிங்கண்ணாவை பிணமாக மீட்டனர். பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இது குறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒருவர் மோட்டார் சைக்கிள் உடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார்.
- 34 மது பாட்டில்களும் ,மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தர வின் பெயரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணிகளிலும், சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி ஈரோடு தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமை யிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கருக்கம் பாளை யம் வாய்க்கால் கரை பகுதி அருகே ஒருவர் மோட்டார் சைக்கிள் உடன் சந்தேக ப்படும்படி நின்று கொண்டிருந்தார்.
மோட்டார் சைக்கிளில் சோதனை செய்தபோது சீட்டுக்கு அடியில் 34 மது பாட்டில்கள் அனுமதி இன்றி விற்பனைக்கு வைக்கப்பட்டது தெரிய வந்தது. விசாரணையில் அவர் ஈரோடு 46 புதூர், சின்ன கருக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கணேசன் (59) என தெரிய வந்தது.
இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசனை கைது செய்தனர். அவரிடமி ருந்து 34 மது பாட்டில்களும் ,மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேப்போல் தாளவாடி போலீசார் தாளவாடி அடுத்த மல்லன்குழி பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒருவர் மோட்டார் சைக்கி ளில் வந்து கொண்டிருந்தார். அவரை நிறுத்தி மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கர்நாடக மதுபாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருப்பது தெரிய வந்தது.
மொத்தம் 12 பாக்கெட் மதுவை போலீசார் கைப்பற்றினர். விசாரணை யில் அவர் தாளவாடி அடுத்த மாரியபுரம் பகுதியை சேர்ந்த ஜெயகி ரியாஸ் (67) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் மது பாட்டில்கள், மோட்டர் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் அம்மா பேட்டை சிறப்பு இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அம்மாபேட்டை அடுத்த மூலுயனூர் ராம்ராஜ் தோட்டம் அருகே ஒருவர் சந்தேகம்படும்படி நின்று கொண்டிருந்தார். அவரை சோதனை செய்ததில் 59 மது பாட்டில்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவர் அனுமதி இன்றி மது விற்பனை யில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.இதேப்போல் கடத்தூர் ஈரோடு டவுன் போன்ற பகுதிகளிலும் அனுமதி இன்றி மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஒரே நாளில் அனுமதி இன்றி மது விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 124 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- போலீசார் ரோந்து செல்ல வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார்.
- கடும் நடவடிக்கையால், குற்ற செயல்களில் ஈடுபடுவோர் முடங்கி உள்ளனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக ஜவகர் பொறுப்பேற்ற பின் பல்வேறு அதிரடி நடவ டிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். போலீசாருக்கு விடுமுறை, சாதாரண காரணத்துக்காக மாற்றப்ப ட்டவர்களுக்கு மீண்டும் பழைய பணியிடம் ஒதுக்கீடு, மனு மற்றும் கோரிக்கைக்காக பார்க்க வருவோரை காக்க வைக்காமல் உடனுக்குடன் பார்ப்பது உள்பட பல்வேறு மாற்றங்கள் அமலாகி உள்ளது.
குறிப்பாக பாதுகாப்பு, சட்டம் – ஒழுங்கு, போக்கு வரத்து நெரிசலை தவிர்த்தல் போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்ப டுகிறது. திருட்டு, கொள்ளை, வழிப்பறி, மிரட்டல், ரவுடிகள் நடமாட்டம், தேவையற்ற வகையில் சுற்றித்திரிபவர்களை கட்டுப்படுத்துதல் போன்ற வற்றுக்காக, தெருக்கள், கடை வீதிகள், பிரதான சாலைகளில் போலீசார் ரோந்து செல்ல வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார்.
இதனை ஏற்று மோட்டார் சைக்கிள் மற்றும் ஜீப்களில் மக்கள் நடமாட்டம் உள்ள மற்றும் நடமாட்டம் இல்லாத தெருக்கள், கடை வீதிகள், பிரதான சாலைகள், பஸ் நிறுத்தங்கள் போன்ற இடங்களில் போலீசார் ரோந்துப்பணி செல்கின்ற னர். குறிப்பிட்ட போலீசார், குறிப்பிட்ட பகுதிக்கு ரோந்து சென்று குறிப்புகள் அனுப்பி வருகின்றனர்.
போக்குவரத்து நெரிசல் உள்ள இடங்களில், விரைவாக போக்குவரத்தை சீர்செய்யவும், தேவை யானால் கூடுதல் போலீ சாரை பயன்படுத்த உத்தர விட்டதால் கடந்த ஒரு வாரமாக கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
குறித்த நேரம் தவிர மற்ற நேரங்களில் டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைந்த பார்களை கண்காணிக்கின்றனர். இரவு குறிப்பிட்ட நேரத்துக்கு ப்பின் தேவையற்ற கடை களை மூடவும், நடமா ட்டங்களை கட்டுப்படுத்த வம், அனுமதியற்ற சட்ட விரோத மது விற்பனை, லாட்டரி, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வோர் மீதும் கடும் நடவடிக்கையால், குற்ற செயல்களில் ஈடுபடு வோர் முடங்கி உள்ளனர்.
- ரூ.23 லட்சம் பணத்தையும் கொள்ளை யடித்து சென்ற னர்.
- இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
சென்னிமலை,
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஈங்கூர் பகுதியில் உள்ள இரும்பு தொழிற்சாலையில் இருந்து அதே நிறுவனத்திற்கு சொந்தமான மற்றொரு தொழிற்சாலைக்கு ஊழியர் சத்தியமூர்த்தி (வயது 47) என்பவர் கடந்த மாதம் 23-ந் தேதி நிறுவனத்திற்கு சொந்தமான காரில் ரூ.23 லட்சம் பணத்தை எடுத்துச்சென்றார்.
அப்போது அந்த காரை சில மர்ம நபர்கள் வழி மறித்து சத்தியமூர்த்தியை காருடன் கடத்தி சென்று அவரை கட்டிப்போட்டு ரூ.23 லட்சம் பணத்தையும் கொள்ளை யடித்து சென்றனர்.
இதுகுறித்து நிறுவனத்தின் மேலாளர் மகேந்திரன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமிரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் குற்றவாளிகளை தேடிவந்தனர்.
அதன்படி கடந்த 28-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கண்ணங்குடி அருகே கள்ளர் தெருவை சேர்ந்த மனோகர் (29) மற்றும் அதே ஊரை சேர்ந்த நவநீதன் (27) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா, கண்ணங்குடி, கள்ளர் தெருவை சேர்ந்த நல்லையன் என்பவரின் மகன் இளையராஜா (வயது 31) மற்றும் கோவை செட்டிபாளையம் காந்திஜி ரோட்டை சேர்ந்த சீமான் என்பவரின் மகன் அலெக்சாண்டர் (வயது 32) ஆகிய மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இளையராஜா திருச்சியில் உள்ள ஒரு துணிக்கடையில் விற்பனையாளராகவும், அலெக்சாண்டர் கோவை யில் சொந்தமாக லாரி புக்கிங் ஆபீஸ் நடத்தி வந்ததும் தெரிய வந்தது.
இந்த கொள்ளை சம்பவத்தில் இளையராஜா மோட்டார் சைக்கிளிலும், அலெக்சாண்டர் கார் ஓட்டுனராகவும் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் ரூ.23 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற முக்கிய குற்றவாளிகளான புதுக்கோட்டை மாவட்ட த்தில் இவர்கள் ஊர்களை சேர்ந்த ராஜசேகர் (வயது 31), ராமதுரை (வயது 32) என தெரியவந்தது.
இவர்கள் இருவரும் கொள்ளை அடிக்க உதவி செய்ததற்காக இளைய ராஜாவுக்கும், அலெக்சாண்டருக்கும் தலா ரூ.80 ஆயிரம் பணம் கொடுத்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இந்த பணத்தில் இளையராஜாவிடம் இருந்து ரூ.77 ஆயிரம் மற்றும் அலெக்சாண்டரிடம் இருந்து ரூ.78 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள், 2 செல்போன் ஆகியவற்றை யும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதைத்தொடர்ந்து இரவு 9 மணி அளவில் பெருந்துறை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இளையராஜாவையும், அலெக்சாண்டரையும் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ரூ.23 லட்சம் பணத்துடன் சென்ற முக்கிய குற்ற வாளிகளான ராஜசேகர் மற்றும் ராமதுரையை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
- மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன உதவியுடன் விண்ணப்பிக்கலாம்.
- பிளஸ்-2 ஆங்கில வழியில் பயின்று இருக்க வேண்டும்.
ஈரோடு,
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ் இயங்கும் அனைத்து வகை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும், 2023–-24-ம் கல்வி ஆண்டுக்கான, 2 ஆண்டுகள் இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது.
விருப்பம் உள்ளோர் வரும் 5-ந் தேதி முதல் 15-ந தேதி வரை, https://scert.tnschool.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க முடியாதவர்கள் அருகே உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன உதவியுடன் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விபரத்தை, இணைய தளத்திலும் அறியலாம். தமிழ், தெலுங்கு, உருதில் ஏதாவது ஒன்றை பயிற்சி மொழியாக கொள்ள விரும்புவோர், பிளஸ்-2 வில் மொழி பாடமாக படித்திருக்கவேண்டும். ஆங்கில வழியில் பயில விரும்புவோர், பிளஸ்-2 ஆங்கில வழியில் பயின்று இருக்க வேண்டும்.
பெருந்துறை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திலும், ஆன்லைனில் விண்ணப்பம் பதிவேற்றப்படுகிறது. பொதுப்பிரிவு, பிறர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு வயது, கட்டண சலுகை உள்ளது. உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- கலசஸ்தாபனம், 108 சங்குஸ்தாபனம், ஜெபம், ஓமம் நடந்தது.
- சந்தன காப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடந்தது.
சென்னிமலை,
'கந்த சஷ்டி கவச' அரங்கேற்ற தலமாகவும், ஆதி பழனி என போற்றப்படும். சென்னிமலை முருகன் கோவிலில் நேற்று மாலை முருகப்பெருமானின் அவதார தினமான வைகாசி விசாக விழா கோலாகலமாக நடந்தது.
முருக பெருமானின் அவதார தினமான வைகாசி விசாகத்தன்று முகப்பெருமானை வழிபாடு செய்தால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். 67-வது வருட வைகாசி விசாக பெரு விழாவினை முன்னிட்டு நேற்று முன்தினம் ஊஞ்சலூர் அருகே காவிரியில் தீர்த்தம் எடுத்து சென்னிமலை வந்தடைந்தது.
நேற்று காலை 10 மணிக்கு சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க காவிரி திருமஞ்சன தீர்த்தம் ஊர்வலமாக புறப்பட்டு மலை கோவிலை சென்று அடைந்தது.
சென்னிமலை மலை மீது முருகன் கோவிலில் மதியம் 3 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கி கலசஸ்தாபனம், 108 சங்குஸ்தாபனம், ஜெபம், ஓமம் நடந்தது.
தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு முருகப்பெருமானுக்கு பஞ்சாமிருதம், தேன், பழங்கள், பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்து மாலை 6.30 மணிக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடந்தது.
வைகாசி விசாக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சரவணன் தலைமையில் அருணகிரிநாதர் மடம் மற்றும் கிருத்திகை விசாக குழு அன்பர்கள் செய்திருந்தனர்.
வைகாசி விசாகத்தினை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் மலை கோவிலில் குவிய தொடங்கினர். அதிகாலை காங்கேயம் அருகே உள்ள வரதப்பம்பாளையம் கிராம மக்கள் காவடி தீர்த்த குடங்களுடன் வருகை தந்து முருகப்பெருமான வழிபட்டு சென்றனர். கந்தசாமி அன்பர்கள் குழுவினர் படி பூஜை செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
- கடை பணியாளர்களின் இருப்பிடங்களுக்கு எடுத்து செல்லுதல் கூடாது.
- உட்புறம் பூட்டிய நிலையில் வைத்து மது விற்பனை செய்ய வேண்டும்.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் மோகனசுந்தரம் மாவட்ட த்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மேற்பார்வை யாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
டாஸ்மாக் கடைகளின் விற்பனை தொகை இருப்பை பண பாதுகாப்பு பெட்டியில் தினமும் வைத்து பூட்ட வேண்டும். கடை பணியாளர்கள் பாதுகாப்பு பெட்டியில் வைக்காமல், கடை மேஜை இருப்பறை, காலி அட்டை பெட்டிகள், கடை பணியாளர்களின் இருப்பிடங்க ளுக்கு எடுத்து செல்லுதல் கூடாது.
விற்பனை நேரங்களில் கடைகளுக்கு முன் பொருத்தப்பட்டுள்ள இரும்பு கிரில் கேட்டை பூட்டாமல் விற்பனை செய்வதால் வெளி நபர், மர்ம நபர்கள் கடையினுள் புகுந்து பணியாளர்களை தாக்கும் சம்பவம் நடக்க வாய்ப்புள்ளது.
எனவே, கடை இயங்கும் நேரமான மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை கடையின் இரும்பு கிரில் கேட்டை உட்புறம் பூட்டிய நிலையில் வைத்து மது விற்பனை செய்ய வேண்டும்.
கடை பணியாளர்கள் விற்பனை தொகையை பண பாதுகாப்பு பெட்டியில் வைக்காமல் வீட்டுக்கு எடுத்து செல்லும்போது ஏற்படும் அசம்பாவித செயலுக்கு நிர்வாகம் பொறுப்பாகாது.
விற்பனை தொகை இழப்பீட்டுக்கு காப்பீடு தொகை வழங்க இயலாது. மதுபான கடையின் 21 பதிவேடுகளை நடப்பு தேதி வரை முழுமையாக பதிவிட்டிருக்க வேண்டும்.
இந்நடைமுறை தவறும்பட்சத்தில் நட வடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குளத்தில் தேடி லிங்கண்ணாவை பிணமாக மீட்டனர்.
- தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த கரளவாடி தேவி நகரை சேர்ந்தவர் பசுவராஜ் (60). திருமணமாகி 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகன் திருமணமாகி தந்தையுடன் வசித்து வருகிறார். மகளுக்கு திருமணமாகி கணவருடன் தனியாக வசித்து வருகிறார். 2-வது மகன் லிங்கண்ணா (32). கூலி வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்நிலையில் லிங்கண்ணாவுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும் தினமும் குடிப்பதற்கு தாய் தந்தையிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு செல்லாமல் கரளவாடி பஸ் நிறுத்தம் அருகே இரவில் உட்கார்ந்து இருந்தார். பின்னர் வீட்டுக்கு வந்த லிங்கண்ணா குடிப்பதற்கு மீண்டும் பெற்றோரிடம் பணம் கேட்டு உள்ளார். அதற்கு தங்களிடம் பணம் இல்லை என்று அவர்கள் கூறிவிட்டனர்.
பின்னர் லிங்கண்ணாவை சாப்பிட அவரது தாய் அழைத்தார். உனது சாப்பாடு எனக்கு தேவை இல்லை. குடிப்பதற்கு பணம் தரவில்லை என்றால் இனிமேல் வீட்டுக்கு வர மாட்டேன். தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி வீட்டின் பின்பக்கம் உள்ள குளத்தை நோக்கி லிங்கண்ணா வேகமாக ஓடினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மகன் பின்னால் வேகமாக ஓடினர். ஆனால் அதற்குள் லிங்கண்ணா குளத்தில் குதித்து விட்டார். இதனால் பதறிய அவரது பெற்றோர் இது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்தனர். அதற்குள் லிங்கண்ணா குளத்தில் மூழ்கி இறந்து விட்டார்.
இது குறித்து சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குளத்தில் தேடி லிங்கண்ணாவை பிணமாக மீட்டனர். பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இது குறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது வரட்டுபள்ளம் அணை.
- வனவிலங்குகள் தண்ணீரைத் தேடி வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்புகள் மற்றும் தோட்டங்களுக்கு வந்து செல்கிறது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது வரட்டுபள்ளம் அணை. இந்த அணையில் மழைக் காலங்களில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வனவிலங்குகளுக்கு கோடை காலத்தில் தாகம் தீர்க்கவும், விவசாய நிலங்களின் பாசனத்திற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் முடிந்தும் ஈரோடு மாவட்டத்தில் வெயில் பொதுமக்களை மட்டும்இன்றி வனவிலங்குகளையும் வாட்டி வதைத்து வருகிறது.
தற்போது கோடை மழை பெய்து ஒரு சில இடங்களில் வனப்பகுதிகளில் உள்ள குட்டைகளில் தண்ணீர் தேங்கி நின்றாலும் வன விலங்குகளுக்கு தேவையான தண்ணீர் இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது.
இதனால் வனவிலங்குகள் தண்ணீரைத் தேடி வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்புகள் மற்றும் தோட்டங்களுக்கு வந்து செல்கிறது. இதேபோல் அந்தியூர் அடுத்த வரட்டுபள்ளம் அணையில் உள்ள தண்ணீரை குடிக்க அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் யானைகள், மான்கள், செந்நாய், கரடிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் கூட்டம் கூட்டமாக வந்து தண்ணீரை குடித்து செல்கின்றது.
இந்த நிலையில் நேற்று மாலை வரட்டுபள்ளம் அணையில் தண்ணீர் தேடி வந்த யானை கூட்டம் தண்ணீரை குடித்துவிட்டு அந்தியூர் அடுத்த பர்கூர்-மைசூர் நெடுஞ்சாலையின் குறுக்கே கூட்டமாக வந்தது. அதனை அந்தப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும். கார்களில் வருபவர்களும் வாகனத்தை ஓரமாக நிறுத்தி யானையை செல்போனில் படம் பிடித்து மகிழ்ந்தனர். யானை கூட்டம் யாரையும் தொந்தரவு செய்யாமல் அப்படியே சாலையை கடந்து அடர்ந்த வனப் பகுதிக்குள் சென்றது.
- விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வர சுவாமி கோவில் தேர்த்திருவிழா கடந்த 27ஆம் தேதி கிராம சாந்தியுடன் துவங்கியது.
- இன்று மாலை 4 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வர சுவாமி கோவில் தேர்த்திருவிழா கடந்த 27ஆம் தேதி கிராம சாந்தியுடன் துவங்கியது. 27-ந் தேதி விநாயகர் பூஜையும், 28-ந் தேதி சுவாமி பூத சிம்ம வாகனத்திலும், 29-ந் தேதி நந்தி காமதேனு வாகன த்திலும், 30-ந் தேதி சேஷ வாகனத்திலும், 31-ந் தேதி ரிஷப வாகனத்திலும் சாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று (1-ந் தேதி) திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அதை தொடர்ந்து இன்று காலை சுவாமிக்கு மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
இன்று மாலை 4 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர். தொடர்ந்து தேர் பெருமாள் கோவில் வீதி, கடைவீதி வழியாக வந்து நிலை சேருகிறது.
நாளை பாரிவேட்டை, குதிரை கிளி வாகன காட்சியும், 4-ந் தேதி தெப்போற்சவ நிகழ்ச்சியும், 5-ந் தேதி புஷ்ப விமானத்தில் சாமி உலா வருதலும், 6-ந்தேதி மஞ்சள் நீர் உற்சவ விழாவும் நடக்கிறது.
- 12 மணி அளவில் சுவாமிக்கு பால்குடம் அபிஷேகம், அதை தொடர்ந்து சத்துரு சம்கார மகா ஹோமம், மகா அபிஷேகம், மகா தீபாரா தனை நடைபெற்றது.
- விழாவையொட்டி லட்சார்ச்சனை, அபிஷேகம், மகாதீப ஆராதனை, தங்க மயில், தங்கரதம் புறப்பாடு, நிகழ்ச்சிகள் நடைபெற்றன
கோபி, ஜூன். 2-
கோபிசெட்டிபாளையம் பச்சைமலை சுப்பிரமணிய சாமி கோவில் வைகாசி விசாகத் திருவிழா கடந்த 30-ந் தேதி விநாயகர் பூஜையுடன் தொடங்கியது.
விழாவையொட்டி லட்சார்ச்சனை, அபிஷேகம், மகாதீப ஆராதனை, தங்க மயில், தங்கரதம் புறப்பாடு, நிகழ்ச்சிகள் நடைபெற்றன
முக்கிய நிகழ்ச்சியான வைகாசி விசாகத் திருவிழா இன்று 2-ந் தேதி நடை பெற்றது. இதையொட்டி சுப்பிரமணியருக்கு காலை 9 மணி முதல் 11 மணி வரை 108 லிட்டர் பால்ஊற்றி தாராபிஷேக நிகழ்ச்சி நடை பெற்றது.
இதை தொடர்ந்து 12 மணி அளவில் சுவாமிக்கு பால்குடம் அபிஷேகம், அதை தொடர்ந்து சத்துரு சம்கார மகா ஹோமம், மகா அபிஷேகம், மகா தீபாரா தனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்க ப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில் கோபி செட்டிபாளையம், கரட்டூர், நாயக்கன் காடு, நல்ல கவுண்டன் பாளையம், கரட்டடிபா ளையம்,
குன்ன த்தூர் கெட்டி செவியூர், கொளப்பலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.






