என் மலர்
ஈரோடு
- பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
- காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 81.54 அடியாக சரிந்தது.
ஈரோடு,
ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாக மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது. அதேநேரம் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 81.54 அடியாக சரிந்தது. அணைக்கு வினாடிக்கு 391 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.
கீழ்பவானி பாசனத்திற்காக 5 கனஅடியும், தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 800 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 955 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் உள்ள ஆசிரி யர்கள் கலந்து கொண்டனர்.
- அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து 93 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
சென்னிமலை,
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்விதுறை சார்பாக 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்கள் திறம்பட செயல்படுத்துதல் நோக்கத்துடன் 3-ம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி சென்னிமலை அடுத்துள்ள மைலாடி பகுதியில் நடந்தது.
இதில் சென்னிமலை வட்டாரத்திற்குட்பட்ட அம்மாபாளையம், பசுவப்பட்டி, வெள்ளோடு, ஈங்கூர், காமராஜர் நகர், மற்றும் திப்பம்பாளையம், ஆகிய குறுவளமையங்களில் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் உள்ள ஆசிரி யர்கள் கலந்து கொண்டனர்.
இப்பயிற்சியில் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களில் ஆசிரியர்கள் வகுப்பறை கையாளுதல் மற்றும் அவர்கள் பயன்படு த்தும் கற்றல் உபகரணங்கள் செய்யும் முறை குறித்து ஆசிரியப்பயிற்றுநர் மற்றும் ஆசிரியக் கருத்தாளர்கள் விளக்கினார்கள்.
வட்டார கல்வி அலுவலர்கள் செ.ராஜேந்திரன், மு.செல்வி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் கோபிநாதன் ஆகியோர் பயிற்சியை தொடங்கி வைத்து ஆசிரியர்களுக்கு பயிற்சியின் முக்கியத்துவம் பற்றி விளக்கி கூறினார்கள்.
இப்பயிற்சியில் 68 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து 93 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. வட்டார வளமைய ஆசிரியர் பயிற்று நர்கள் நிர்மல்குமார், அம்பிகா, மைதிலி, குமுதா, கஸ்தூரி ஆகியோர் பங்கேற்றனர்.
இப்பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர்களாக மாவட்ட ஆசிரியப் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் முருகேசன் செயல்பட்டு பயிற்சி சிறப்பாக நடை பெறுவதை பார்வையிட்டனர்.
இப்பயிற்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குழந்தைராஜன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜோதிசந்திரா, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவிதிட்ட அலுவலர் ராதாகி ருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆசிரி யர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
- தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
- விடுமுறை நாள் என்பதால் காலை முதலே பொதுமக்கள் பலர் வந்த வண்ணம் இருந்தனர்.
கோபி,
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
மேலும் விடுமுறை மற்றும் விழா நாட்களில் வழக்கத்தை விட அதிகமான பொதுமக்கள் வந்து அங்கு ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து செல்கி றார்கள்.
இந்த நிலையில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டு உள்ளதால் கொடிவேரி தடுப்பணைக்கு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று க்கிழமைகளில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று (சனிக்கிழமை) காலை முதலே பொதுமக்கள் பலர் வந்து சென்றனர். இதே போல் இன்று (ஞாயிற்றுக்கிழ மை) விடுமுறை நாள் என்பதால் காலை முதலே பொதுமக்கள் பலர் வந்த வண்ணம் இருந்தனர்.
ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி கோவை, திருப்பூர் மற்றும் பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் அதிகளவில் வந்திருந்தனர். மேலும் இளைஞர்கள் உள்பட பலர் கார், வேன் மற்றும் இரு சக்கர வாகனங்களில் கொடிவேரி அணைக்கு வந்தனர்.
இதை தொடர்ந்து பொது மக்கள் தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். இதனால் அணை பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
- முதிர்ந்த ஈக்களும் ஓலைகளில் அடியில் இருந்து சாற்றை உறிஞ்சுகின்றன.
- கீழ்மட்ட அடுக்கில் உள்ள 10-12 ஓலைகளின் மேற்பரப்பில் பரவுகின்றன.
ஈரோடு, ஜூன்.4-
கொடுமுடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் யசோதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வயதில் முதிர்ந்த பெண் ஈக்கள் மஞ்சள் நிற நீள்வட்ட முட்டைகளை சுழல் வடிவ அமைப்புகளில் ஓலைகளின் அடிப்பாகத்தில் இடுகின்றன. இம்முட்டைகள் மெழுகு பூச்சுடன் காணப்படும். முட்டைகளிலிருந்து வெளிப்படும் நகரும் தன்மை கொண்ட இளங்குஞ்சுகள் இலைகளில் அடிப்பரப்பில் இருந்து கொண்டு இலைகளின் சாற்றினை உறிஞ்சி வளர்கின்றன.
4 பருவங்களை கடந்து கூட்டுப்புழுப் பருவத்தை அடைந்து பின்னர் முதிர்ந்த ஈக்களாக வெளிவருகின்றன. சுமார் 20-30 நாட்களில் முழு வளர்ச்சியடைந்த ஈக்களாக மாறி கூட்டம் கூட்டமாக தென்னை ஓலைகளின் அடி ப்பகுதியில் காணப்படும் இவை காற்றின் திசையில் எளிதில் பரவி அடுத்தடுத்த தோட்டங்களில் உள்ள தென்னை மரங்களில் பாதிப்பை ஏற்படுத்து கின்றன.
இலைகளின் அடிப்பாக த்தில் சுருள் வடிவத்தில் முட்டைகள் காணப்படும் குஞ்சுகளும், முதிர்ந்த ஈக்களும் ஓலைகளில் அடியில் இருந்து சாற்றை உறிஞ்சுகின்றன. இவை வெளியேற்றும் தேன் போன்ற திரவக்கழிவுகள் கீழ்மட்ட அடுக்கில் உள்ள 10-12 ஓலைகளின் மேற்பரப்பில் பரவுகின்றன. இவற்றின் மேல் கேப்னோடியம் எனும் கரும்பு சணம் படர்கிறது.
இந்த பூச்சிகளின் பாதிப்பால் மகசூல் இழப்பு பெருமளவில் ஏற்படுவதில்லை. வெள்ளை ஈக்கள் அனைத்து தென்னை ரகங்களிலும் காணப்பட்டாலும், சௌகாட் ஆரஞ்சு குட்டை, மலேசியன் மஞ்சள் குட்டை, கென்தாளி குட்டை, மலேசியன் பச்சை குட்டை ஆகிய குட்டை இரகங்களிலும் குட்டை நெட்டை வீரிய ஒட்டு ரகங்களிலும் அதிகளவில் தாக்குதல் ஏற்படுத்துகின்றன.
பூச்சிகள் வாழை, வெண்டை, சப்போட்டா, எலுமிச்சை, செம்பருத்தி ஆகிய பயிர்களிலும் மிக குறைந்த அளவில் காணப்படுகின்றன.
ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதம் வரை பருவமழை குறைவினால் ஏற்பட்ட வறட்சி, அதிகளவு வெப்பம் மற்றும் குறைந்த காற்றின் ஈரப்பதம் ஆகியன பூச்ச்சியின் அதீத பெருக்கத்திற்கும் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மஞ்சள் நிறம் வளர்ச்சி யடைந்த வெள்ளை ஈக்களை கவரும் தன்மையுடையதால் மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களால் உருவாக்கப்பட்ட ஒட்டும் பொறிகள் (நீளம் 3 அடி அகலம் 1 அடி) ஏக்கருக்கு 10 என்ற எண்ணிக்கையில் 6 அடி உயரத்தில் ஆங்காங்கே தொங்க வைத்து பூச்சிகளில் நடமாட்டத்தை கண்காணிக்கவும். அதன் வளர்ச்சியை தடுக்க, இலை மட்டைகளில் உள்ள ஓலைகளின் அடிப்புறத்தில் நன்கு படுமாறு தண்ணீர் தௌிக்கவும்.
கிரைசோபிட் இரை விழுங்கிகள் இந்த பூச்சி களின் வளர்ச்சி நிலைகளை நன்றாக உட்கொள்வதால் தாக்கப்பட்ட தோட்டங்களில் எக்டருக்கு 1000 என்ற எண்ணிக்கையில் விடவும்.
இவ்வகை வெள்ளை ஈக்கள் அதிகளவு பரவு ம்போது காக்ஸினெல்லிட் பொறி வண்டுகள், என்கார்ஸியா ஒட்டுண்ணிகள் ஆகிய இயற்கை எதிரிகள் தோப்புகளிலேயே இயற்கையாகவே உருவாக ஆரம்பிக்கும். ஆகவே தோப்புகளில் இவ்வகை இயற்கை எதிரிகள் கொண்டு தாக்குதலுக்குள்ளான ஓலைகளை சிறிய அளவில் வெட்டி பாதிப்பு அதிகமாக இருக்கும் மரங்களின் மீது வைக்கவும்.
ஒரு லிட்டர் நீருக்கு வேப்பெண்ணெய் 30 மிலி அல்லது அசாடிராக்டின் 1 சதம் (2 மி.லி) மருந்தை ஒரு மில்லி ஒட்டுத்திரவத்துடன் கலந்து தென்னை ஓலையின் அடிப்புறம் தௌிக்கவும்.
கரும்பூஞ்சாணத்தை நிவர்த்தி செய்ய மைதாமாவு கரைசலை ( ஒரு லிட்டர் நீருக்கு 25 கிராம் பசை ) ஓலைகளின் மேல் நன்கு படுமாறு தௌிக்கவும்.
அதிக அளவு பூச்சிக்கொல்லிகள் உபயோகிக்கும்போது நன்மை செய்யும் இயற்கை எதிரிகள் அழிந்து விடுவதால் பூச்சிக்கொல்லிகளை தவிர்த்து நன்மை செய்யும் பூச்சிகள் வளர்வதற்கு உரிய சூழலை மேம்படுத்துவது சாலச் சிறந்ததாகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- முருகாத்தாள் கணவரிடம் மது அருந்தி வந்ததற்காக சத்தம் போட்டார்.
- முருகாத்தாள் வீட்டுக்கு வந்து கதவை தட்டியுள்ளார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் அடுத்த அரக்கன் கோட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி (33). கட்டிட கூலித் தொழிலாளி. இவரது மனைவி முருகாத்தாள் (27). இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகன் உள்ளார். ரங்கசாமிக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.
இந்நிலையில் ஊரில் கோவில் திருவிழாவை ஒட்டி நேற்று முருகாத்தாள் அம்மாவும், அவரது தம்பியும் முருகாத்தாள் வீட்டுக்கு வந்துள்ளனர்.
அப்போது அரங்கசாமி மது அருந்து வீட்டுக்கு வந்து வாந்தி எடுத்துள்ளார். இதனால் முருகாத்தாள் கணவரிடம் மது அருந்தி வந்ததற்காக சத்தம் போட்டார்.
பின்னர் ஒரு குடம் தண்ணீரை எடுத்து ஒரு ரங்கசாமி மீது ஊற்றினார். இதனால் ஆத்திரமடைந்த ரங்கசாமி தான் எங்கேயாவது போய் விடுகிறேன் என்று கூறியுள்ளார். பின்னர் முருகாத்தாள் அவரது தாய் மற்றும் தம்பி கோவில் திருவிழாவுக்கு சென்று விட்டனர்.
வீட்டில் ரங்கசாமி இருந்துள்ளார். பின்னர் முருகாத்தாள் வீட்டுக்கு வந்து கதவை தட்டியுள்ளார். ஆனால் பதில் ஏதும் வரவில்லை. கதவு உள் தாழ்பால் போடப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தபோது ரங்கசாமி வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அக்கம், பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர் . அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே ரங்கசாமி இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உறவினர்கள், கூலித்தொழிலாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சாப்பிட்டு வந்தனர்.
- மன நோயாளிகள் பிரிவில் மருந்து வழங்கும் இடத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.
ஈரோடு,
ஈரோடு அரசு மருத்துவமனை பின்புறம் அம்மா உணவகம் கடந்த 7 ஆண்டுகளாக ஈரோடு மாநகராட்சி சார்பில் இயங்கி வந்தது. இங்கு அரசு மருத்துவமனை நோயாளிகள், அவரது உறவினர்கள், கூலித்தொழிலாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சாப்பிட்டு வந்தனர்.
குறைந்த விலையில் நிறைவான சாப்பாடு கிடைப்பதால் இங்கு எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இந்நிலையில் அரசு மருத்துவமனை பின்புற பகுதியில் பல கோடி மதிப்பில் பல்துறை மருத்துவமனை மைய கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.
இந்நிலையில் இந்த பணிக்காக இடம் தேவைப்பட்டதால் அம்மா உணவக கட்டிடத்தை இடிக்க மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக மாநகராட்சி இடம் முறையாக அனுமதி பெற்றது. இதனைத் தொடர்ந்து அம்மா உணவக கட்டிடம் இடிக்கப்பட்டது.
இதனையடுத்து தற்போது தற்காலிகமாக அரசு மருத்துவமனை மன நோயாளிகள் பிரிவில் மருந்து வழங்கும் இடத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. அங்கு உணவு பரிமாறப்பட்டு வருகிறது.
இந்த இடத்தையும் விரைவில் காலி செய்யுமாறு மருத்துமனை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதனையடுத்து அம்மா உணவகத்திற்கு வேறு இடத்தில் இடம் தேர்வு செய்யப்பட உள்ளது.
- பண்ணாரி சோதனை சாவடியில் சத்தியமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- பான் மசாலா, ஹான்ஸ், கூலிப்பு போன்ற போதை பொருட்கள் மூட்டை மூட்டையாக கடத்தி வரப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்து பண்ணாரி சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியில் 24 மணி நேரமும் போலீசார், வனத்துறையினர் இணைந்து கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய அனைத்து வாகனங்களையும் நிறுத்தி தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இந்த பகுதியில் சரக்கு லாரிகள் போக்குவரத்து அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
நேற்று இரவு வழக்கம் போல் பண்ணாரி சோதனை சாவடியில் சத்தியமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது இரவு 8 மணி அளவில் பண்ணாரி சோதனை சாவடி வழியாக சரக்கு வேன் ஒன்று வந்தது. அந்த வேனை நிறுத்தி போலீசார் வேனில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் லிங்கையாத்தார் தெருவை சேர்ந்த மகேந்திரன்(32) என்பவர் டிரைவராகவும், சாம்ராஜ் நகர் பண்டிகரையை சேர்ந்த பிரமோத் (22) என்பவர் கிளீனராகவும் இருந்தது தெரிய வந்தது. வேனில் வெங்காய லோடு இருப்பதாகவும் அவை கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரிலிருந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு எடுத்து செல்வதாகவும் அவர்கள் கூறினர்.
எனினும் அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் சரக்கு வேனில் ஏறி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வெங்காய மூட்டை அடியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட விமல் பாக்கு, பான் மசாலா, ஹான்ஸ், கூலிப்பு போன்ற போதை பொருட்கள் மூட்டை மூட்டையாக கடத்தி வரப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர். விமல் பாக்கு 30 சாக்கு மூட்டைகள், பான் மசாலா 30 சாக்கு மூட்டைகள், ஹான்ஸ் 15 சாக்கு மூட்டைகள், கூலிப்பு இரண்டு மூட்டைகள் என மொத்தம் 82 மூட்டைகளில் ரூ.8 லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் கடத்தி செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 1,281 கிலோ புகையிலை பொருட்கள் வெங்காய லோடு அடியில் மறைத்து வைத்து கடத்திச் செல்வது தெரிய வந்தது.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து மகேந்திரன், பிரமோத் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1,281 கிலோ போதைப் பொருட்கள் மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் இந்த போதைப் பொருட்களை மேட்டுப்பாளையத்திற்கு எடுத்துச் செல்வதாக கூறியுள்ளனர். மேட்டுப்பாளையத்திற்கு யார் சொல்லி அவர்கள் இந்த போதைப் பொருட்களை கடத்தி சென்றனர். இந்த கடத்தல் பின்னணியில் வேறு யாரும் உள்ளார்களா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கழிவுகளில் உள்ள ராசாயனங்களால் பவானி ஆற்றின் தண்ணீர் நஞ்சாகி மாசடைந்து வருகிறது என சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
- பவானி ஆற்றின் தண்ணீரை சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடிநீராக பயன்படுத்தி வருகிறார்கள்.
சத்தியமங்கலம்:
நீலகிரி மலைப்பகுதியில் பவானி ஆறு உற்பத்தியாகி ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை வரை சுமார் 150 கிலோ மீட்டர் செல்கிறது. பவானி ஆற்று தண்ணீர் இரு கரைகளையும் தொட்டப்படி பயணித்து வருகிறது.
இந்த பவானி ஆறு நீலகிரி மாவட்டம் முக்காலியில் தொடங்கி அட்டப்பாடி வழியாக கோவை மாவட்டத்தில் உள்ள பில்லூர் அணையை அடைகிறது. அந்த அணையில் திறந்து விடப்படும் பவானி ஆற்று தண்ணீர் அங்கு இருந்து தேக்கம் பட்டி, நெல்லித்துறை, மேட்டுப்பாளையம், சிறுமுகை, மூலத்துறை வழியாக பவானிசாகர் அணையை அடைகிறது.
பவானி ஆற்றின் தண்ணீரை சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடிநீராக பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் இதன் மூலம் தொட்டப்பாளையம், திருப்பூர், எலத்தூர், நம்பியூர், பெருந்துறை என 10-க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பவானிசாகர் அணை மூலம் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று பயன் அடைந்து வருகிறது.
இந்த நிலையில் பவானி ஆற்றில் ஆலை கழிவுகள் மற்றும் பல்வேறு கழிவுகள் கலக்கப்படுவாக கூறப்படுகிறது. மேலும் பவானி ஆற்றில் சாக்கடை கழிவுகள், குப்பை கழிவுகள் கலப்பதாகவும் தெரிகிறது. அதே போல் அந்த பகுதிகளை சேர்ந்த சிலர் ஆலை மற்றும் மருத்துவ கழிவுகளையும் பவானி ஆற்றில் நேரிடையாக கொட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் கழிவுகளில் உள்ள ராசாயனங்களால் பவானி ஆற்றின் தண்ணீர் நஞ்சாகி மாசடைந்து வருகிறது என சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
பவானி ஆற்றில் சாக்கடை கழிவுகள், ஆலை கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டுபடுவதால் ஆறு மிகவும் கடுமையாக பாதிப்படைந்து வருகிறது. பவானி ஆற்றில் கழிவுகளை கலப்பதை தடுக்க அரசு ஆய்வு மேற் கொள்ள வேண்டும்.
எந்த காரணம் கொண்டும் பவானி ஆற்றில் கழிவுகள் கொட்டுவதை அனுமதிக்க கூடாது. கழிவு கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் பவானி ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி அரசியல் அமைப்புகள், பொது நல அமைப்புகள் ஒண்றிணைந்து பவானியை காப்போம் இயக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர். இந்த அமைப்பு பொதுமக்களிடம் விழிப்புணர்வ ஏற்படுத்தி வருகிறது. இதனால் இந்த அமைப்புக்கு பொதுமக்களிடம் ஆதரவு பெருகி வருகிறது.
இந்த நிலையில் பவானியை காப்போம் இயக்கம் என்ற அமைப்பு சார்பில் பவானி ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுத்த நிறுத்த வலியுறுத்தி பவரிசாகரில் கூடுவோம் என முழக்மிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளனர்.
இதையொட்டி நாளை 5-ந் தேதி (திங்கட்கிழமை) பவானிசாகர் பகுதியில் போராட்டம் நடக்கிறது. இதில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
இதை வலியுறுத்தி பவானி நதியில் ஆலை கழிவுகள் கலப்பதை தடுத்து நிறுத்த பவானிசாகரில் கூடுவோம் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் பவானிசாகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஒட்டப்பட்டு உள்ளது. இதனால் பவானிசாகர் பகுதியில் பரபரப்பான நிலை உள்ளது.
- சிகிச்சை பிரிவில் இருந்த நாகேஸ்வரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
- பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த பங்களாபுதூர் அருகே உள்ள புஞ்சை துறையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகேஸ்வரி(62). இவர் தனது தம்பி சுப்பிரமணியம் வீட்டில் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று நாகேஸ்வரி பங்களாபுதூர் அருகே உள்ள ஆனந்த கவுண்டர் தோட்டத்தில் தென்னை ஓலை எடுத்து வர சென்றுள்ளார். ஓலை எடுத்து வரும்போது அங்கிருந்த தென்னை மரத்தில் தேன் கூட்டில் ஓலையின் ஒரு பகுதி பட்டு தேனீக்கள் நாகேஸ்வரியை விரட்டி விரட்டி கொட்டியது.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை காப்பாற்றி சிகிச்சைக்காக டி.என்.பாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு சிகிச்சையில் இருந்தவர் மருத்துவர் அறிவுறுத்தல் படி மீண்டும் மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நாகேஸ்வரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+2
- ஈரோடு மாநகர் பகுதியில் 9 மணி அளவில் காற்றின் வேகம் அதிக அளவில் இருந்தது.
- பெருந்துறை பகுதியில் நேற்று பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வந்தது. குறிப்பாக அக்னி நட்சத்திரம் வெயில் நிறைவடைந்ததும் வெயிலின் தாக்கம் குறையும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
கடந்த ஒரு வாரமாக ஈரோடு மாவட்டத்தில் 100 டிகிரி வெயில் பதிவாகி வந்தது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. அனல் காற்றுடன், புழுக்கமும் நிலவியதால் வாகன ஓட்டிகள், வீட்டில் குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்தது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி கிடந்தனர். முக்கியச் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து சூறாவளி காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. ஈரோடு மாநகர் பகுதியில் 9 மணி அளவில் காற்றின் வேகம் அதிக அளவில் இருந்தது.
அப்போது இடி மின்னல் பயங்கரமாக இருந்தது. பின்னர் சிறிது நேரம் சாரல் மழை பெய்தது. பலத்த காற்றால் விளம்பர பேனர்கள் பறந்து சென்றன. இதேப்போல் மாவட்டத்தில் அதிகபட்சமாக பெருந்துறையில் 45 மி.மீ மழை பெய்தது. பவானி, சென்னிமலை, அம்மாபேட்டை போன்ற பகுதிகளிலும் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
ஈரோட்டில் இருந்து பவானி லட்சுமி நகர் வரை காற்று கடுமையாக வீசியதால் அந்த சமயம் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்குவதில் கடும் அவதி அடைந்தனர். சென்னி மலையில் இரவு 10 மணி முதல் தொடர்ந்து ஒரு மணி நேரம் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
பெருந்துறை பகுதியில் நேற்று பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் பெருந்துறை அடுத்த வாய்க்கால் மேடு பகுதியைச் சேர்ந்த குழந்தைசாமி, கந்தசாமி ஆகியோருக்கு சொந்தமான ரூ.10 லட்சம் மதிப்பிலான வாழைகள் சேதமடைந்தது. இதே போல் அதே பகுதியில் சின்னப்பன் என்பவர் 20-க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டு உள்ளார். நேற்று வீசிய சூறாவளி காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 15 வீடுகளின் மேல் இருந்த ஆஸ்பெட்டாஸ் ஷீட்டுகள் பறந்து சென்றன. மேற்கூரைகள் அனைத்தும் தூக்கி வீசப்பட்டு காட்சி அளிக்கிறது. இதேப்போல் பவானி, அம்மாபேட்டை, அந்தியூர் பகுதிகளிலும் இரவு ஒரு மணி நேரம் இடி , மின்னலுடன் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. சூறாவளி காற்றுடன் மண்ணும் வாரி இறைத்து வந்ததால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். எனினும் இந்த எதிர்பாராத மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
பெருந்துறை - 45, பவானி - 31.60, அம்மாபேட்டை - 30, சென்னிமலை - 25.60, ஈரோடு-2.
- பொதுப் பெட்டிக்கு இடம் கிடைக்க போட்டா போட்டி நடந்தது.
- இன்று முதல் ஈரோட்டுக்கு வர தொடங்கி உள்ளனர்.
ஈரோடு,
பள்ளிகளுக்கு முழு ஆண்டு தேர்வு முடிவடைந்து ஏப்ரல் மாதம் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. மே மாதம் முழுவதும் விடுமுறை இருந்ததால் குழந்தைகள் குடும்பத்துடன் தங்கள் சொந்த ஊருக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.
இன்னும் சிலர் சுற்றுலா விற்காக பல்வேறு இடங்க ளுக்கு கிளம்பி சென்றனர். இதனால் கடந்த ஏப்ரல் மாதம் ஈரோடு ெரயில் நிலையம் பஸ் நிலை யங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு நிறைந்ததால் பொதுப் பெட்டிக்கு இடம் கிடைக்க போட்டா போட்டி நடந்தது.
நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக சிறப்பு ெரயி ல்களும் இயக்கப்பட்டன. இதேப்போல் அனைத்து பஸ்களும் நிரம்பி வழிந்ததால் மக்கள் சிரமம் இன்றி செல்லும் வகையில் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.
இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி கள் திறக்க இன்னும் 3 நாட்களே இருப்பதால் சொந்த ஊருக்கு சென்ற வர்கள் இன்று முதல் ஈரோட்டுக்கு வர தொடங்கி உள்ளனர். இதனால் இன்று ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை வழக்கத்தோடு அதிகமாக இருந்தது.
குடும்பம், குடும்பமாக ரெயில் நிலையம் நோக்கி வந்த வண்ணம் இருந்தனர். வெளி மாநிலம், வெளி மாவட்டத்தில் இருந்து ஈரோடு வழியாக இயக்க ப்பட்ட அனைத்து ரெயி ல்களும் நிரம்பி வழிந்தன. இன்று அதிகாலை முதல் ஈரோடு ரெயில் நிலையத்தில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.
இதேப்போல் பஸ் நிலையங்களிலும் கூட்டம் அதிகரிக்க தொடங்கின. நாளை இதைவிட பஸ் ரெயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பள்ளி திறப்பு ஜூன் 7-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
- கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு,
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் பள்ளிகளுக்கு முழு ஆண்டு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டது.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் அனைத்தும் ஜூன் 1-ந் தேதி திறப்பதாக இருந்தது. ஆனால் அக்னி நட்சத்திரம் வெயில் முடிந்தும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்ததால் பள்ளி திறப்பு ஜூன் 7-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
பள்ளி திறப்புக்கு இன்னும் 3 நாட்களே இருப்பதால் பள்ளி வளாகத்தில் தூய்மை பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.
இதற்கான பணிகளில் பள்ளிக்கல்வித்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளி வளாகத்தில் உள்ள மரம், செடி, கொடி கள், புதர்கள் அகற்றப்பட்டு வருகின்றன. வகுப்பறைகளில் போர்டுகளுக்கு கருப்பு பெயிண்ட் அடிக்கப்பட்டு வருகிறது.
மேலும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது. கழிப்பறைகள், பள்ளி வளாகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன. தூய்மை பணிகள் கடந்த 2 நாட்களாக தீவிரமாக நடந்து வருகிறது.






