என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெளியூருக்கு சென்றவர்கள் ஈரோட்டுக்கு திரும்புகின்றனர்
- பொதுப் பெட்டிக்கு இடம் கிடைக்க போட்டா போட்டி நடந்தது.
- இன்று முதல் ஈரோட்டுக்கு வர தொடங்கி உள்ளனர்.
ஈரோடு,
பள்ளிகளுக்கு முழு ஆண்டு தேர்வு முடிவடைந்து ஏப்ரல் மாதம் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. மே மாதம் முழுவதும் விடுமுறை இருந்ததால் குழந்தைகள் குடும்பத்துடன் தங்கள் சொந்த ஊருக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.
இன்னும் சிலர் சுற்றுலா விற்காக பல்வேறு இடங்க ளுக்கு கிளம்பி சென்றனர். இதனால் கடந்த ஏப்ரல் மாதம் ஈரோடு ெரயில் நிலையம் பஸ் நிலை யங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு நிறைந்ததால் பொதுப் பெட்டிக்கு இடம் கிடைக்க போட்டா போட்டி நடந்தது.
நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக சிறப்பு ெரயி ல்களும் இயக்கப்பட்டன. இதேப்போல் அனைத்து பஸ்களும் நிரம்பி வழிந்ததால் மக்கள் சிரமம் இன்றி செல்லும் வகையில் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.
இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி கள் திறக்க இன்னும் 3 நாட்களே இருப்பதால் சொந்த ஊருக்கு சென்ற வர்கள் இன்று முதல் ஈரோட்டுக்கு வர தொடங்கி உள்ளனர். இதனால் இன்று ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை வழக்கத்தோடு அதிகமாக இருந்தது.
குடும்பம், குடும்பமாக ரெயில் நிலையம் நோக்கி வந்த வண்ணம் இருந்தனர். வெளி மாநிலம், வெளி மாவட்டத்தில் இருந்து ஈரோடு வழியாக இயக்க ப்பட்ட அனைத்து ரெயி ல்களும் நிரம்பி வழிந்தன. இன்று அதிகாலை முதல் ஈரோடு ரெயில் நிலையத்தில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.
இதேப்போல் பஸ் நிலையங்களிலும் கூட்டம் அதிகரிக்க தொடங்கின. நாளை இதைவிட பஸ் ரெயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.






