அம்மா உணவகம் இடமாற்றம்

உறவினர்கள், கூலித்தொழிலாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சாப்பிட்டு வந்தனர். மன நோயாளிகள் பிரிவில் மருந்து வழங்கும் இடத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.
அம்மா உணவகம் இடமாற்றம்
Published on

ஈரோடு, 

ஈரோடு அரசு மருத்துவமனை பின்புறம் அம்மா உணவகம் கடந்த 7 ஆண்டுகளாக ஈரோடு மாநகராட்சி சார்பில் இயங்கி வந்தது. இங்கு அரசு மருத்துவமனை நோயாளிகள், அவரது உறவினர்கள், கூலித்தொழிலாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சாப்பிட்டு வந்தனர்.

குறைந்த விலையில் நிறைவான சாப்பாடு கிடைப்பதால் இங்கு எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இந்நிலையில் அரசு மருத்துவமனை பின்புற பகுதியில் பல கோடி மதிப்பில் பல்துறை மருத்துவமனை மைய கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

இந்நிலையில் இந்த பணிக்காக இடம் தேவைப்பட்டதால் அம்மா உணவக கட்டிடத்தை இடிக்க மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக மாநகராட்சி இடம் முறையாக அனுமதி பெற்றது. இதனைத் தொடர்ந்து அம்மா உணவக கட்டிடம் இடிக்கப்பட்டது.

இதனையடுத்து தற்போது தற்காலிகமாக அரசு மருத்துவமனை மன நோயாளிகள் பிரிவில் மருந்து வழங்கும் இடத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. அங்கு உணவு பரிமாறப்பட்டு வருகிறது.

இந்த இடத்தையும் விரைவில் காலி செய்யுமாறு மருத்துமனை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதனையடுத்து அம்மா உணவகத்திற்கு வேறு இடத்தில் இடம் தேர்வு செய்யப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com